அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 2 ஜூலை, 2020

மரணங்கள் பலவகையில் வருகிறது !

*மரணங்கள் பல வகையில் வருகிறது*.

வயது முதிர்ந்து வருகிறது .

நோய்வாய்பட்டு வருகிறது.

தற்கொலையால் வருகிறது.

எதிரிகளால் தகராறு செய்து சண்டையிட்டு வருகிறது.

விபத்தால் அகாலமரணம் வருகிறது.

எதிர்பாராது திடீர்மரணம் வருகிறது.

*பிறரால் கொலை செய்யப்பட்டு வருகிறது*.

இப்படி பலவகையில் மரணம் வருகிறது.

*உடம்பை விட்டு உயிர் பிரிந்தால் அதற்கு மரணம் என்று பெயர்*.

இதில் கொலை செய்யப்பட்டு மரணம் வருவதற்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி கொலைக் குற்றத் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒரு மனிதனை துன்புறுத்தி கொலை செய்து.உடம்பை விட்டு உயிர் பிரிந்தால் மக்களும் ஏற்றுக் கொள்வதில்லை.
சட்டமும் ஏற்றுக் கொள்வதில்லை. *கடவுளும் ஏற்றுக் கொள்வதில்லை*.

கொலை செய்தவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று  மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஏன் என்றால் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கும்.
ஒருவரை பலபேர் சேர்ந்து துன்புறுத்தும் வகையில் கொலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கொலை செய்யும்போது அவர்கள் உடம்பும் உயிரும் ஆன்மாவும் அடையும் துன்பங்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

உயிர்பிரியும் போது அவர்களின்.
கண்.காது.மூக்கு வாய்.உடம்பு போன்ற இந்திரியங்களின் நிலை.

கரணங்களான  மனம்.புத்தி.சித்தம்.
அகங்காரம்.உள்ளங்களின் நிலை.ஜீவன் என்னும் உயிர்நிலை.
உடல்நிலை.

.ஆன்மாவின் நிலை  அனைத்தும் கட்டுக்கு அடங்காமல் துடிதுடித்து துன்பம் மிகுதியாகி தன்னை இழந்து.தன்அறிவை இழந்து.
தன் உணர்வுகளை இழந்து. உயிர் பிரிந்து விடுகிறது.
இதற்கு *மரணவேதனை* என்று சொல்லப்படுகிறது.

இதற்கு ஈடாக  பணத்தாலோ.பொருளாலோ.வார்த்தையாலோ.சட்டத்தாலோசரிசெய்யவே முடியாது.

*அதனால் தான் உயிர் விலை மதிப்பற்றது என்பதாகும்*.

இந்த உயிர்க் கொலையானது .
மனிதர்களுக்கு மட்டும் அல்ல.இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.!

எல்லா உயிர்களிலும் இறைவன் நடம் புரிகின்ற இடமாகக் கருதி உணர்ந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும் என்கிறார்.

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிப்பவர்களை இறைவன் நேசிப்பார்.
இறைவன் வாழும் இடமாக ஏற்றுக்கொள்கிறார்.
இறைவன் வாழும் நேசிக்கும் உயிர்களை எவராலும் அழிக்க முடியாது.

இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் ஒரேத்தன்மை உடையது.(ஒளித்தன்மை) என்பதை அறிவால் அறிந்து வாழும் வாழ்க்கையானது மனித தேகத்திற்கு இயற்கையால். இறைவனால்  கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் வள்ளலார்.

இந்த உண்மையை ஒவ்வொரு மனித இனமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றை உண்மை அறிவோடு அறிந்து மனித இனம் வாழ்ந்தால் உலகத்தில் கொலைக் குற்றங்கள் நடைபெறாது.

மனிதன் மரணத்தை வெல்லும் தகுதி உடையவன்.மரணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டியவர் வாழ்ந்து காட்டியவர்.
வள்ளலார்.

மரணம் இல்லாமல் வாழ்ந்தால் உலகம் மகிழ்ச்சியான அமைதியான அழகு மிகுந்த அருள் பூங்காவாக.அருள் உலகமாக மலரும்.

*மனித நேயத்தோடு*.
*ஜீவநேயத்தோடு* *ஆன்மநேயம் மிகவும் முக்கியமானது*.
என்பதை வள்ளலார் மிகவும் வலியுறுத்துகின்றார்*

எல்லா உயிர்களையும் சமமாக அறிந்து உணர்ந்து நினைந்து நெகிழ்ந்து பார்க்கும். உற்று உள் நோக்கும் உரிமையே. *ஆனமநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்*. இந்த உண்மையை உலகத்திற்கு முதன் முதலில் சொல்லி தெளிவித்து தெரிவித்தவர்.
நம் தமிழ்நாட்டில் தோன்றிய வள்ளலார் ஆவார்கள்.

வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தோடு வாழ்ந்து பழகினால்.உலகில் கொலைக் குற்றங்கள் நடைபெறாது.பயம் இல்லாமல் மனித இனம் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழலாம்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் மட்டுமே அன்பை உற்பத்தி செய்யும் ஒழுக்கமாகும்.  மனிதனை பக்குவமாக பன்படுத்தும் ஒழுக்கமாகும்.

*மனிதனைக்கண்டு மனிதன் பயப்படும் நிலை மாற வேண்டும்*.

*அன்பை விதைப்போம் அன்பை அறுவடைச் செய்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக