அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 9 ஏப்ரல், 2020

உயிர் எலாம் பொதுவில் நோக்குக !

*உயிர் எலாம் பொதுவில் உளம்பட நோக்குக என்றார் வள்ளலார்*!

வள்ளலார் பாடல் !

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்

செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்

மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்

பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!

*எல்லா உயிர்களிலும் இறைவன் திருநடம் புரியும் இடமாக அறிந்து கொண்டேன்*.

எனவே எந்த உயிர்களையும் கொல்லாதீர்கள்.அதன் புலாலை உண்ணாதீர்கள் என்று வள்ளலார் வெளிப்படையான உண்மையை எல்லோரும் புரியும் வண்ணம் சொல்லி உள்ளார்.

*எனவேதான்
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* !

*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* ! என்றார் வள்ளலார்.

மனிதனுக்காக எல்லா உயிர்களும் படைக்கப்பட்டன என்ற குருட்டு நம்பிக்கையில் வாயில்லாத வாய் பேசாத உயிர்களை கடவுளின் பெயராலும் மூடநம்பிக்கை யாலும்.அறியாமை என்னும் பழக்கத்தினாலும்.உயிர்கள் துடிதுடிக்க கொன்று அதன் மாமிசத்தை உண்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு சொல்லி உள்ளார்.

மேலும் உயிர்க்கொலை செய்பவர்களும் அதன் புலால் உண்பவர்களும் கடவுளைத் தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

எவ்வளவு சொல்லியும் மனிதர்கள் கேட்கவில்லை என்பதால் இயற்கையின் கோர தாண்டவத்திற்கு ஆளாக நேர்ந்துள்ளன.

அதுதான் இப்போது *கொரோனோ* போன்ற வைரஸ் தொற்று உருவாக்க் காரணமாக இருக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

*இனிமேலாவது எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மையை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்*.

தாவர உணவு உண்பவர்களுக்கு(ஜீவகாருண்யம் உள்ளவர்களுக்கு) எவ்விதமான பேரிடர் ஆபத்துக்களும்.கொடூரமான வைரஸ் தொற்றும் அணுகாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் மரணத்தை வென்ற மகான்.முக்காலமும் தெரிந்த அருள்ஞானி. ஐந்தொழில் வல்லபம் பெற்றவர் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேணும்.

வள்ளலார் கொள்கையை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

வள்ளலார் வாய்மொழி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக