- சிற்சபையின் உள்ளே செல்ல உளவு !
உளவு என்பது ரகசியம் என்பதாகும்.இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றும் சொல்லுவார்கள்.
ஒரு (மெய்ப்பொருள்) உண்மைப் பொருளை தெரிந்து கொள்வதற்கு தகுதியும் தரமும் வேண்டும்.தகுதி இல்லாதவர்களுக்கு உளவு சொன்னாலும் பலிக்காது.
வள்ளல்பெருமான் வாழ்க்கையின் உண்மை நிலை உணர்ந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை என்கிறார்.
உள்ளே உள்ளான் யார் அவன் ? அவன் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். தனித்தலைமைப் பெரும்பதி. தாயாகவும் தந்தையாகவும் தாங்குகின்றவர்.அருளை வாரி வழங்கும் வள்ளல். தனிப்பெருங் கருணைக்கடல். இல்லை என்று சொல்லாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும் கற்பக விருட்சம்.
அவர்தான் ஆன்ம சிற்சபையின் நடுநின்று நடனமிடும் அருட்பேரொளி யாகும்.
சிற்சபை அப்பனை ஏழு கதவுகளால் அடைக்கப்பட்டுள்ளன.
அவர்தான் ஆன்ம சிற்சபையின் நடுநின்று நடனமிடும் அருட்பேரொளி யாகும்.
சிற்சபை அப்பனை ஏழு கதவுகளால் அடைக்கப்பட்டுள்ளன.
சிற்சபையின் உள்ளே உள்ளவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.
*வள்ளலார் பாடல் *!
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!
மேலே கண்ட தகுதிகள் உண்மையாக இருந்தால் மட்டுமே கதவு திறக்கப்படும்.வள்ளல்பெருமானுக்கு கதவுகள் திறக்கப்பட்டு காட்சிகள் யாவும் கண்டு களித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று.சாட்சியாக காட்சிக் கொண்டுள்ளவர்..
மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் உளவு சொல்கிறார்.
- உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
- அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி!
உளவு என்னும் ரகசியத்தை அறிந்தால் ஒழிய மற்றபடி தலைகீழாக நின்று அளந்தாலும். அளக்க முடியாது.அளவினில் அடங்காது அறிவினில் விளங்காது.அனுபவம் கிடைக்காது.அருளைப்பெற முடியாது.
மேலும் அகவலில் பதிவு செய்கிறார்.!
பிரமரகசியம்.
பரமரகசியம்.
சிவரகசியம்.
மேலே கண்ட மூன்று ரகசியங்களைக் கண்டவர்கள் உலகில் ஒருவரும் இல்லை.மறைக்கப்பட்ட மூன்று ரகசியங்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்றவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே !
ரகசியம் என்றும் மறைக்கப்பட்டவைகள் எல்லாம் வெளியே கொண்டுவந்து வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.
சமய.மதங்கள் காணமுடியாது என்று சொல்லியுள்ள ரகசியங்களை எல்லாம் கண்டு களித்து கலந்து கொண்டவர் வள்ளலார்.
வள்ளலார் பாடல் !
மேலும் அகவலில் பதிவு செய்கிறார்.!
- பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே - . பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே - . சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
- நவநிலை காட்டிய ஞானசற் குருவே!
மூன்று ரகசியம் சொல்லுகின்றார் வள்ளலார்.
பிரமரகசியம்.
பரமரகசியம்.
சிவரகசியம்.
மேலே கண்ட மூன்று ரகசியங்களைக் கண்டவர்கள் உலகில் ஒருவரும் இல்லை.மறைக்கப்பட்ட மூன்று ரகசியங்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்றவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே !
ரகசியம் என்றும் மறைக்கப்பட்டவைகள் எல்லாம் வெளியே கொண்டுவந்து வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.
சமய.மதங்கள் காணமுடியாது என்று சொல்லியுள்ள ரகசியங்களை எல்லாம் கண்டு களித்து கலந்து கொண்டவர் வள்ளலார்.
வள்ளலார் பாடல் !
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!
மேலே கண்ட பாடலில் தான் அனுபவித்த அனுபவத்தை தெளிவாக எளிய தமிழில் தெரியப்படுத்தி உள்ளார்.
மேலும் தெளிவுப்படுத்துகின்றார்.
வள்ளல் பாடல் !
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.!
மேலே கண்ட பாடலில் தன் அனுபவங்களை தெரியப்படுத்துகின்றார்.
சுத்த சன்மார்க்கத்தை பின் பற்ற ஆர்வம் உள்ளவர்கள்.வள்ளலார் வாழ்ந்து காட்டிய வழியில் பின்பற்றினால் மட்டுமே. சிற்சபை அப்பனைக் காட்டும் உளவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே காட்டிக் கொடுப்பார்.
குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்லுவதற்கு பெயர்தான் உளவு என்பதாகும்.
நாம் செய்யும் ஜீவகாருண்யத்தாலோ..வழிபாட்டாலோ அருளைப் பெறுவது மிகவும் கடினம்.
ஆண் பெண் அலி என்ற பேதம் இல்லாமல் ஆன்மாக்கள் யாவும் ஒரேத் தன்மை உடையது என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உளவின் ரகசியத்தை ஆண்டவர் வெளிப்படையாக தெரியப்படுத்துவார்.

- சிற்சபை அப்பனை உற்றே னே
- சித்திஎ லாம்செயப் பெற்றே னே.!
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக