அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கடவுள் நிலை என்ன ?ஜீவர்கள் நிலை என்ன ?

கடவுள் நிலை என்ன ? ஜீவர்கள் நிலை என்ன ?

கடவுளைத் தொடர்பு கொள்வது மனிதர்களின் முக்கிய பங்காகும் அவசியமாகும்.

எந்தக் கடவுளைத் தொடர்பு கொள்வது எனபதே மிக மிக முக்கியமானதாகும்.அவசியம் தெரிந்து கொள்வதே மனித அறிவை சார்ந்ததாகும் .

நமது முன்னோர்கள் பக்தி.தவம்.யோகம் போன்றவற்றை பின் பற்றினால் இறைவன் தொடர்பு கிடைக்கும்.அருள் பெற்று முக்தி அடையலாம் என்று சொல்லி வைத்து. அவர்களும் கடைபிடித்து முக்தி அடைந்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் அனைத்து அருளாளர்கள் ஞானிகள் என்று போற்றப்படுபவர்களும் ஒரே கடவுளைப்பற்றி சொல்லவில்லை.

பலப்பல தத்துவக் கடவுள்களை அவரவர்கள் சார்ந்துள்ள சமயத்தின் பெயரால்.மதத்தின் பெயரால் அமைப்பின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட கடவுள்களை நம்பிக்கையின் பெயரால் தொடர்பு கொண்டு முக்தி பெற்றுவிட்டதாக சொல்லுகின்றார்கள்.மனிதகுலம் நம்பிக்கையோடு பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.இதுதான் தொன்று தொட்டு வாழ்கின்ற ஆன்மீக சிந்தனையாளர்களின் நிலைப்பாடாக இருந்து கொண்டு வருகின்றது.

இந்த மூடநம்பிக்கையை கலை உரைத்த கற்பனைக் கதைகளை பின்பற்றி வாழ்கின்ற மனித சமுதாயத்தை தட்டி எழுப்பி விழிப்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இயற்கை உண்மையின் நோக்கமாகும்.

*இயற்கை உண்மை என்றால் என்ன ? அதுதான் கடவுள்* ! இயற்கை உண்மைதான் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் என்ற பெயர் கொண்ட ஆன்மாவை.உயிர்கொடுத்து உடம்பு கொடுத்து   இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக