அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 3 பிப்ரவரி, 2020

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை!

*ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை* !

1854 ஆம் ஆண்டு மனுமுறை கண்ட வாசகம் என்ற வரலாற்றை. மனுநீதிச்சோழன் கதையை வைத்து வள்ளலார் உரைநடையாக எழுதி வெளியிட்ட நூலாகும்.

*ஒவ்வொருவரும் பல முறை படிக்க வேண்டிய நூலாகும்*.

வள்ளலார் அந்த வரலாற்றை ஏன் எழுதி வெளியிட்டார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மனுநீதிச் சோழன் அரண்மனையில் நீதி கேட்டு வருபவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒன்று தொங்க விடப்பட்டு இருக்கும். அந்த ஆராய்ச்சி மணி அடித்த வரலாறு இல்லை.

ஆலய வழிப்பாட்டிற்காக. மனுநீதிச்சோழன் மகன் வீதிவிடங்கன் தேர் ஓட்டிச்செல்கிறான்.
தேரின் பின் சக்கரத்தில் ஒரு பசுங்கன்று அடிப்பட்டு இறந்து விடுகின்றது.தாய்ப்பசுவானது நீதி கேட்டு அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தன் கொம்புகளால் அடித்து நீதி கேட்கிறது.

நீதி கேட்டு வந்த பசுவிற்காக நீதி தவறாமல்.தன் புதல்வனை தேர்காலில் படுக்க வைத்து  அக்கன்று இறந்தது போல் மகனை படுக்க வைத்து கொல்ல ஆணைபிறப்பிக்கிறார்.,

*அதற்கு வேதம் ஆகமம் புராணங்களில் சொல்லியவாறு பரிகாரங்கள் செய்து*. *பிரயாய்சித்தம் செய்தால் போதும் என்றும்*. *வேதங்களில் சொல்லி உள்ளது* என்றும். *அதனால் மகனைக் கொல்ல வேண்டாம் என்றும் மந்திரிகள் சொல்கிறார்கள்*.

மனித உயிர் உயர்ந்தது என்றும்.மற்ற உயிர்கள் தாழ்ந்தது என்றும்.அது *விதிவசத்தால் வந்து மாண்டு விட்டது* என்றும் ஏதோதோ வேதங்களில் உள்ளதை எடுத்து காட்டிச் சொல்லி மன்னனின் மனநிலையை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

மனுநீதிச்சோழன் அவர்கள் பேச்சை கேட்காமல் .இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் ஒன்றே.அதில் பேதம் கிடையாது என்கிறார்.

மந்திரிகள் சொல்வதை எவற்றையும் கேட்காமல்.ஏற்றுக் கொள்ளாமல் தானே தேரை ஓட்டிச்சென்று மகனை தேர்காலில் படுக்கவைத்து கொன்று விடுகிறார்.

பின்பு  இறைவன் அருளால் மனுசோழன் மகன் வீதிவிடங்கன்.மற்றும் பசுவின் கன்று. .மந்திரி சகலகலாவல்லபன் அனைவரையும் எழுப்பி விடுவதாக வரலாற்று கதையில் கூறும் அறிவுரையாகும்.

வள்ளலார் எழுதிய  அக்கதை முழுவதையும் படித்தால் அதில் உள்ள *ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை அறிந்து கொள்ள முடியும்*.அதில் உள்ள வசனங்கள் வார்த்தைகள் பொருள்கள் வாக்கியங்கள் படிப்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.

*வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.இதிகாசங்கள் சாத்திரங்கள் அனைத்தும் பொய்யானது*.உயிர்களுக்கு விரோதமானது என்று மனுமுறை வாசகத்தில் தெளிவுப் படுத்தி உள்ளலார் வள்ளலார்.

அரச குமாரானக இருந்தாலும்.சாதாரண உயிர்களாக இருந்தாலும்.. மிருகமான பசுவின் கன்றுக்குட்டியாக இருந்தாலும்.எல்லா உயிர்களையும் இயக்குவது. இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மா ஒன்றுதான்.

அந்த ஆன்மா ஒரேத் தன்மை உடையதுதான் என்பதை வலியுறுத்தும் வகையில் *இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம்*. உள்ளது என்பதை உணர்ந்து அறிந்து.மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவாவில் அக்கறையில் மக்கள் வேண்டுதலை ஏற்று வள்ளலார் எழுதி வெளியிடுகிறார்.

வள்ளலார் எழுதிய மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும்.

அதிலே மனுநீதிச்சோழன் நான் என்ன தவறு செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் நான் செய்யவில்லையே என்றும். தனக்க நேர்ந்த செய்யக்கூடாத தவறுகளை மக்களுக்காக  சுட்டிக் காட்டுகின்றார்.

அவைதான் வள்ளலார் எழுதிய கீழே உள்ள மனுமுறை கண்ட வாசகங்கள் !

வள்ளலார் பதிவு செய்துள்ள செய்யக் கூடாத செயல்கள் பின் வருமாறு !

நல்லோர் மனதை நடுங்க செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேணோ!

கலந்த சினேகரை கலகஞ் செய்தேனோ!

மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வு அழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ !

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ !

ஆசைகாட்டி மோசம் செய்தேனோ!

வரவுப் போக்கு ஒழிய வழி அடைத்தேனோ !

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !

பசித்தோர் முகத்தைப் பாராது இருந்தேனோ !

இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ !

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !

கற்பழிந் தவரைக் கலந்து இருந்தேனோ !
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ !

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !

கருப்பம் அழித்துக் களித்து இருந்தேனோ !

குருவை வணங்கக் கூசி நின்றேனோ !

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ !

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ !

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ !

பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !

கன்றுக்குப் பால் ஊட்டாது கட்டி வைத்தேனோ !

ஊன் சுவை உண்டு உயிர் வளர்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !

அன்பு உடையவர்க்குத் துன்பம் செய்தேனோ !

குடிக்கின்ற நீர் உள்ள குளத்தை தூர்த்தேனோ !

வெய்யிலுக்கு ஒதுங்கும் விருஷம் அழித்தேனோ!

பகை கொண்டு அயலோர்  பயிர் அழித்தேனோ !

பொது மண்டபத்தைப் போய் இடித்தேனோ !

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !
சிவன் அடியாரைச் சீறி வைதேனோ !

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !

சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்தேனோ !

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !

தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ !

என்ன பாவம் செய்தேனோ !

இன்னதென்று அறிவேனே என்று செய்யக் கூடாத செயல்கள் எவை எவை என்று பட்டியல் இட்டு வள்ளலார் பதிவு செய்கிறார்.

எனவே *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை* என்பது வள்ளலார் வகுத்து தந்த முக்கியமான சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

இவற்றை அறிந்து தெரிந்து புரிந்து வாழ்வதே மனித வாழ்க்கை யாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக