*வள்ளலாரின் தனிச்சிறப்பு*
*வள்ளலார் மற்ற ஞானிகளின் கொள்கை வரிசையில் மிகவும் வேறுபட்டவர்..*
*பளிச்சிடும் வெள்ளாடை மட்டுமே உடுத்துபவர்..*
*காவி ஆடை உடுத்த மாட்டார்.*
*உடம்பில் எந்த மணி மாலைகளையும் அணிய மாட்டார்.*
*ஆற்காடு ஜோடு அணிந்து கொள்வார்.*
*கைகளை வீசி நடக்காமல் கைகளைக் கட்டியே நடப்பார்..*
*கைகளில் திருஓடு வைத்துக் கொள்ள மாட்டார்..*
*சாப்பாடு வேண்டும் என்று எவரிடமும் கேட்கமாட்டார்.*
*கைகளில் மணிவைத்து உருட்ட மாட்டார்.*
*சிம்மாசனத்தில் அமரமாட்டார்.*
*ஆடம்பர வீட்டில் தங்க மாட்டார்.*
*தனக்கென ஆசிரமம் அமைத்து கொள்ளமாட்டார்..*
*அதிகமாக உணவு உட்கொள்ள மாட்டார்.*
*உயர்ந்த திண்ணையில் உட்கார மாட்டார்..*
*கை நீட்டி பேசமாட்டார்.*
*எவருக்கும் ஆசிர்வாதம் செய்ய மாட்டார்..*
*எவரையும் காலில் விழந்து வணங்க ஒப்புக் கொள்ளமாட்டார்..*
*தீட்சை என்பன போன்ற விளையாட்டு காரியங்களை செய்ய மாட்டார்..*
*சத்தம் போட்டு பேசமாட்டார்..*
*சண்டை தகராறு வாதங்கள் செய்ய மாட்டார்..*
*ஆச்சார சங்கற்ப விகற்பங்களை செய்ய மாட்டார்.*
*உயிர்கொலை செய்வதற்கு ஆதரவு தரவே மாட்டார்..*
*புலால் உண்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.*
*மூட நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.*
*பணத்தை கையிலே தொடவே மாட்டார்.*
*தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்.*
*உண்மையை மட்டுமே பேசுவார்..எழுதுவார்.*
*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர், வாழ வேண்டும் என்று சொன்னவர்.*
*வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்....*
*ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர்.*
*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.*
*ஜீவ காருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் திறவு கோல் கிடைக்கும் என்றவர்..*
*வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள், சாஸ்த்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொன்னவர்.*
*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றவர்.*
*மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றவர்..*
*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது என்பதை தெளிவாக சொன்னவர்.*
*கடவுளைத்தேடி காடு, மலை, குகை,குன்றுகளுக்கு சென்று தவம் செய்ய தேவை இல்லை என்றவர்.*
*கடவுள் ஒருவரே! அவர்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதை கண்டு சொன்னவர்.*
*அகத்தில் உள்ள உள் ஒளியான ஆன்மாவே ஒளியான கடவுள் என்றவர்.*
*தன்னை இயக்கும் ஆன்மாவை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்றவர்.*
*தன்னை அறிந்தால் தான் தலைவனை அறியமுடியும் என்றவர்.*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளைப் பெற முடியும் என்றவர்.*
*மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்..*
*எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றவர்.*
*ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில் உள்ளோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றவர்.*
*மூச்சி பயிற்சி, வாசியோகம், தியானம், தவம், யோகம், குண்டலினி போன்ற இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய கூடாது என்றவர்.*
*தவத்திலே மூழ்க கூடாது என்றவர்.*
*உயிர்களுக்கு உபகாரம் செய்வதாலே எல்லா நன்மையும் கிடைக்கும் என்றவர்.*
*உருவ வழிபாடு செய்ய வேண்டாம் என்றவர்.*
*பொய்யான சாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற காரியங்களை செய்ய வேண்டாம் என்றவர்.*
*எவரையும் தொடமாட்டார் , தொட்டு பேசவும் மாட்டார்.*
*உண்மைக் கடவுளை தனக்குள்ளே கண்டவர்.*
*உணவு உட்கொள்ளாமலே வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தவர்..*
*நரை, திரை, பிணி, மூப்பு, பயம், மரணம் இல்லாமல் வாழ்ந்தவர்..*
*கடவுளை ஒளி வடிவிலே கண்டவர்.*
*ஏழைகளின் பசிப்பிணியை போக்குவற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தவர்.*
*ஒளி வழிப்பாட்டிற்காக*
*சமரச சுத்த சன்மார்க்க* *சத்திய ஞானசபை தோற்றுவித்தவர்..*
*தன் கொள்கைகளுக்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர்..*
*சங்கத்திற்காக தனிக் கொடியான மஞ்சள் வெள்ளையை அறிமுகப் படுத்தியவர்.*
*மனிதர்களைப் பிரித்து வைத்த சாதி, சமய, பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றவர்.*
*உலக மக்கள் ஒழுக்க நெறியோடு வாழ்ந்து இறைவன் திருஅருளைப் பெற வேண்டும் என்றவர்..*
*ஒழுக்கம் என்றால் என்ன என்பதை உலக மக்களுக்கு சொல்லிக்காட்டி வாழ்ந்தும் காட்டியவர்.*
*உலக மக்களுக்காக உண்மை நூலான திருஅருட்பாவைத் தந்தவர்.*
*மரணம் என்பது இயற்கையானது அல்ல.*
*செயற்கையானது என்பதை முதன் முதலில்*
*அறிவித்தவர்...*
*மரணம் அடையாமல் ஒளி தேகத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*
*இறைவனிடம் ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர்..*
*மனித குலத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர்.*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தாயாகவும் தந்தையாகவும் ஏற்றுக் கொண்டவர்.*
*தன் பெயருக்கு முன் சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையெழுத்து போடுவார்.*
*இப்படி எல்லா வகைகளிலும் வேறுபட்டவர் வள்ளல் பெருமான் அவர்கள்*
*அவர் பெருமையை சொல்லி மாளாது.*
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக