அருளாளர்களின் பொதுக் கூட்டம்.
*இது கதை அல்ல உண்மை*
30-1-1874, அன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளாளர்களின் பொதுக் கூட்டத்திற்கு அவசரமாக ஏற்பாடு செய்கின்றார்.
கூட்டம் நடக்கும் இடம் திருச்சிற்றம்பலம் என்னும் அருட்பெருவெளியாகும்.
உலகில் உள்ள அருளாளர்கள் அண்டங்களில் உள்ள அருளாளர்கள்.மற்றும் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் மற்றும் .உலகத்தை ஆட்சி செய்யும் அருளாளர்கள் அனைவருக்கும் (ஆட்சியாளர்கள் ) அவசர அழைப்பு கொடுக்கப்படுகிறது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தலைமையில் அருட்பெருவெளி என்னும் அருள் நிறைந்த பரவெளியில் கூட்டப்பட்டது.
அதில் கலந்து கொண்டவர்கள் ;--
உருத்திரர்கள் ஒரு கோடிபேர்கள்.
நாரணர்கள் பல கோடி பேர்கள் ,
பிரம்மாக்கள் பல கோடி பேர்கள் ,
இந்திரர்கள் பல கோடிபேர்கள்
மற்றும் தேவர்கள் ,முனிவர்கள் அளவில்லாத அருளாளர்கள் பலர் கோடிக்கணக்கில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
மேலும் உலக அதிபர்கள்...அண்ட அதிபர்கள்...பகிரண்ட அதிபர்கள்...வியோமா அதிபர்கள்,...பலகோடி பேர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் கரும சித்தர்கள் ,யோக சித்தர்கள்,ஞான சித்தர்கள்,கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
அவர்களை அடுக்கு அடுக்காக,ஐந்து அடுக்கு வரிசையில் அமரவைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் யார் யார் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
மேலே கண்ட அருளாளர்களின் கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள்.!
இதுவரையில்;;எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள் களையும்,மற்றை எல்லா வற்றையும் ஆட்சி செய்யும் அதிகாரங்களான
தோற்றுவித்தல்.
விளக்கம் செய்வித்தல்.
துரிசு நீக்குவித்தல்.
பக்குவம் வருவித்தல்.
பலன் தருவித்தல்
போன்ற கரத்தாக்காக்கள் அனைவரும் அமர்ந்து இருக்கிறார்கள்.
தலைமைப்பொறுப்பில் இருந்த ஐந்தொழில் கர்த்தாக்கள் அனைவருக்கும் மற்றும் அருளாளர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் ;--
இன்று முதல் உங்கள் பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொள்ளப் படுகின்றது .நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு வேண்டிய ஒய்வு ஊதியம் வழங்கப்படும் .. எனவே உங்கள் பதவிகளை இன்றே ராஜினாமா செய்து விடுங்கள் என்ற பொதுவான நிரந்தரமான தீர்மானம் நிறை வேற்றப் பட்டது,
உங்கள் பதவிகளை ஏன் எதற்க்காக திரும்பப் பெறப்படுகின்றன என்றால்? .நீங்கள் இதுவரைக்கும் உங்களுக்குக் கொடுத்த பதவிகளை முழுமையாக செயல் படுத்தவில்லை பயன் படுத்தவில்லை..உயிர்களுக்கு வேண்டிய நன்மைகளை முழுமையாக செய்யவில்லை,ஒரு உயிர்கள் கூட அருளைப் பெற்று மரணத்தை வெல்லவில்லை.ஆன்மாக்கள் எதுவும் ஆன்மதேகம் எடுத்து திரும்பி என்னிடம் வரவில்லை.
கதைகளாகவும் கற்பனைகளாகவும் .பொய்யான செய்திகளை போதித்து ஜாதி,சமயம்,மதம்,என்ற பிரிவினைகளை உருவாக்கி உயிர்களை அழித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் .
சாகாக் கல்வியைப் பற்றியும் அருளைப் பெரும் வழியைப் பற்றியும் ,நீங்கள் ஒருவரும் உயிர்களுக்கு போதிக்க வில்லை.எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளன .ஆதலால் உங்கள் பதவிகள் இன்று பறிக்கப் படுகின்றது என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் தெரிவிக்கின்றார்.
அந்த ஐந்தொழில் வல்லபத்தை இன்று உங்களின் முன்பாக உண்மையான அருளாளர் ஒருவருக்கு வழங்கப் போகிறேன்.அவர் யார் ? என்பதை நீங்கள் இப்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .என்பதை தெரிவித்து *அருள் ஆட்சி* மாற்றம் என்னும் சட்டத் திருத்தம் செய்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளியிட்டார் .
சட்டத் திருத்தம் செய்த நகல் அனைத்து அருளாளர்களுக்கும்.ஆட்சி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன.
சட்டத் திருத்தம் செய்து ஐந்தொழில் செய்யும் வல்லப்பத்தின் நகலின் விபரம்.;--
பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் .
களித்திடுக இனி உனை நான் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லோரும் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !
என்று பதிவு செய்துள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .
மேலும்
இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒருவர் கூட உண்மையை உயிர்களுக்கு பொறுப்புடன் சொல்லவில்லை.பொய்யே உண்மை என்று சொல்லி உயிர்களை அழித்துக் கொண்டு வந்தனர் .
வள்ளல்பெருமான் ஆகிய நீ ஒருவர்தான் உயிர்களுக்கு உண்மையைப் போதித்து.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்என்றும்...கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும் என்றும் ,அதற்கு உண்டான வழிமுறைகளையும்.ஒழுக்க நெறிகளையும் போதித்தது மட்டும் அன்றி மனிதப்பிறப்பு எடுத்து வாழ்ந்தும் காட்டி உள்ளாய் ,
அதன் கொள்கைகளை ( உயிர்களுக்கு) மக்களுக்கு புரியும்படி போதித்து உள்ளாய்.
எனவே இன்றில் இருந்து ஐந்தொழில் வல்லபத்த்தின் முழுப்பொருப்பையும் உனக்கே வழங்குகின்றேன்.ஐந்து தொழிலையும் நீயேதான் நிர்வாகம் செய்ய வேண்டும். என்றும்,
உன்னைவிட்டுப் பிரியாமல் உன்னுடன் இருந்தே உமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் செய்வேன் என்றும் சொல்லி ஆட்சி பீடத்தில் வள்ளல்பெருமானை அழைத்து *அருட்பெருஞ்ஜோதியான உண்மைக் கடவுள்* அமர்த்தி உள்ளார்.
அதற்கு வள்ளல்பெருமான் அளித்துள்ள முதல் அறிவிப்பு செய்தி.;--
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உருவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பமுறும் தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லு கின்ற தாமே .
என்பதை உலக உயிர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .
வள்ளல்பெருமானின் ஐந்தொழில் ஆட்சி 30-1-1874,தேதியில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது.மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் வள்ளலார் திருகாப்பிட்டுக்கொள்வதற்கு முன் நடந்த சம்பவம்.
வள்ளலார் பாடல் !
*அந்த சங்கத்தின் தலைமைப் பொருப்பை வள்ளல் பெருமானே ஏற்று நடத்த வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை*.
வள்ளலார் பாடல் !
மனிதர்களாகிய நாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து,அதன்படி வாழ்ந்து,உலக மக்களுக்கு கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும்.
ஒவ்வொரு கிராமங்கள் ,நகரங்கள் தோறும் பெயர் மாற்றம் செய்யாமல் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற அமைப்பை உருவாக்கி மக்களுக்கு சுத்த சன்மார்க்கக் கொளகைகளை பறை சாற்ற வேண்டும்.
பட்டம் பதவிகளுக்கு பற்று வைக்காமல் ஒழுக்கம் நிறைந்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்ற உயிர்களுக்கும் போதிக்க முடியும் தொண்டு செய்யமுடியும் என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அறிவித்து உள்ளார்கள்.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
இன்னும் நிறைய உள்ளன சுருக்கமாக சொல்லி உள்ளேன்
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!
மேலும் ..
- பார்உலகாதிபர் புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர் வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம் திருக்க லாந்தத்
- திருநடம் நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.!
மேலே கண்ட அருளாளர்களின் பட்டியலை வெளியிடுகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
மேலே கண்ட அருளாளர்களின் கூட்டத்தில் நிறை வேற்றப் பட்ட தீர்மானங்கள்.!
இதுவரையில்;;எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள் களையும்,மற்றை எல்லா வற்றையும் ஆட்சி செய்யும் அதிகாரங்களான
தோற்றுவித்தல்.
விளக்கம் செய்வித்தல்.
துரிசு நீக்குவித்தல்.
பக்குவம் வருவித்தல்.
பலன் தருவித்தல்
போன்ற கரத்தாக்காக்கள் அனைவரும் அமர்ந்து இருக்கிறார்கள்.
தலைமைப்பொறுப்பில் இருந்த ஐந்தொழில் கர்த்தாக்கள் அனைவருக்கும் மற்றும் அருளாளர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது யாதெனில் ;--
இன்று முதல் உங்கள் பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொள்ளப் படுகின்றது .நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு வேண்டிய ஒய்வு ஊதியம் வழங்கப்படும் .. எனவே உங்கள் பதவிகளை இன்றே ராஜினாமா செய்து விடுங்கள் என்ற பொதுவான நிரந்தரமான தீர்மானம் நிறை வேற்றப் பட்டது,
உங்கள் பதவிகளை ஏன் எதற்க்காக திரும்பப் பெறப்படுகின்றன என்றால்? .நீங்கள் இதுவரைக்கும் உங்களுக்குக் கொடுத்த பதவிகளை முழுமையாக செயல் படுத்தவில்லை பயன் படுத்தவில்லை..உயிர்களுக்கு வேண்டிய நன்மைகளை முழுமையாக செய்யவில்லை,ஒரு உயிர்கள் கூட அருளைப் பெற்று மரணத்தை வெல்லவில்லை.ஆன்மாக்கள் எதுவும் ஆன்மதேகம் எடுத்து திரும்பி என்னிடம் வரவில்லை.
கதைகளாகவும் கற்பனைகளாகவும் .பொய்யான செய்திகளை போதித்து ஜாதி,சமயம்,மதம்,என்ற பிரிவினைகளை உருவாக்கி உயிர்களை அழித்துக் கொண்டு வந்துள்ளீர்கள் .
சாகாக் கல்வியைப் பற்றியும் அருளைப் பெரும் வழியைப் பற்றியும் ,நீங்கள் ஒருவரும் உயிர்களுக்கு போதிக்க வில்லை.எல்லா உயிர்களும் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,அழிந்து கொண்டே உள்ளன .ஆதலால் உங்கள் பதவிகள் இன்று பறிக்கப் படுகின்றது என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் தெரிவிக்கின்றார்.
அந்த ஐந்தொழில் வல்லபத்தை இன்று உங்களின் முன்பாக உண்மையான அருளாளர் ஒருவருக்கு வழங்கப் போகிறேன்.அவர் யார் ? என்பதை நீங்கள் இப்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .என்பதை தெரிவித்து *அருள் ஆட்சி* மாற்றம் என்னும் சட்டத் திருத்தம் செய்து, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வெளியிட்டார் .
சட்டத் திருத்தம் செய்த நகல் அனைத்து அருளாளர்களுக்கும்.ஆட்சி யாளர்களுக்கும் வழங்கப்பட்டன.
சட்டத் திருத்தம் செய்து ஐந்தொழில் செய்யும் வல்லப்பத்தின் நகலின் விபரம்.;--
பொய் பிடித்தார் எல்லோரும் புறத்து இருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன் .
களித்திடுக இனி உனை நான் கைவிடோம் என்றும்
மை பிடித்த விழி உலகர் எல்லோரும் காண
மாலை இட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !
என்று பதிவு செய்துள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .
மேலும்
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.!
மேலே கண்ட அருளாளர்கள் வள்ளல்பெருமானுக்கு சமமான பொருத்தம் இல்லாதவர்களாய் உள்ளீர்கள் எனவே உங்கள் பதவிகள் பறிக்கப்படுகின்றது என்கின்றார்
இதுவரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் ஒருவர் கூட உண்மையை உயிர்களுக்கு பொறுப்புடன் சொல்லவில்லை.பொய்யே உண்மை என்று சொல்லி உயிர்களை அழித்துக் கொண்டு வந்தனர் .
வள்ளல்பெருமான் ஆகிய நீ ஒருவர்தான் உயிர்களுக்கு உண்மையைப் போதித்து.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்என்றும்...கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும் என்றும் ,அதற்கு உண்டான வழிமுறைகளையும்.ஒழுக்க நெறிகளையும் போதித்தது மட்டும் அன்றி மனிதப்பிறப்பு எடுத்து வாழ்ந்தும் காட்டி உள்ளாய் ,
அதன் கொள்கைகளை ( உயிர்களுக்கு) மக்களுக்கு புரியும்படி போதித்து உள்ளாய்.
எனவே இன்றில் இருந்து ஐந்தொழில் வல்லபத்த்தின் முழுப்பொருப்பையும் உனக்கே வழங்குகின்றேன்.ஐந்து தொழிலையும் நீயேதான் நிர்வாகம் செய்ய வேண்டும். என்றும்,
உன்னைவிட்டுப் பிரியாமல் உன்னுடன் இருந்தே உமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் செய்வேன் என்றும் சொல்லி ஆட்சி பீடத்தில் வள்ளல்பெருமானை அழைத்து *அருட்பெருஞ்ஜோதியான உண்மைக் கடவுள்* அமர்த்தி உள்ளார்.
அதற்கு வள்ளல்பெருமான் அளித்துள்ள முதல் அறிவிப்பு செய்தி.;--
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உருவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பமுறும் தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மை உறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார்
திருவருட் செங்கோல் என்றும் செல்லு கின்ற தாமே .
என்பதை உலக உயிர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .
வள்ளல்பெருமானின் ஐந்தொழில் ஆட்சி 30-1-1874,தேதியில் இருந்து நடந்து கொண்டு வருகின்றது.மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில் வள்ளலார் திருகாப்பிட்டுக்கொள்வதற்கு முன் நடந்த சம்பவம்.
வள்ளலார் பாடல் !
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.!
*அந்த சங்கத்தின் தலைமைப் பொருப்பை வள்ளல் பெருமானே ஏற்று நடத்த வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை*.
வள்ளலார் பாடல் !
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு வருத்தம் துன்பமும் இருந்தது .
எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி காப்பாற்றும் உண்மையான அருளாளர் கிடைத்து விட்டதால் என்துன்பம் நீங்கிவிட்டது என்று பதிவு செய்கிறார்.
பாடல் !
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவாக்கை சிரமேற் கொண்டு
மனிதர்களாகிய நாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து,அதன்படி வாழ்ந்து,உலக மக்களுக்கு கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையாகும்.
ஒவ்வொரு கிராமங்கள் ,நகரங்கள் தோறும் பெயர் மாற்றம் செய்யாமல் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற அமைப்பை உருவாக்கி மக்களுக்கு சுத்த சன்மார்க்கக் கொளகைகளை பறை சாற்ற வேண்டும்.
பட்டம் பதவிகளுக்கு பற்று வைக்காமல் ஒழுக்கம் நிறைந்த சன்மார்க்கிகளாய் வாழ்ந்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மற்ற உயிர்களுக்கும் போதிக்க முடியும் தொண்டு செய்யமுடியும் என்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக அறிவித்து உள்ளார்கள்.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
இன்னும் நிறைய உள்ளன சுருக்கமாக சொல்லி உள்ளேன்
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக