அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 26 அக்டோபர், 2019

உயில்க்கொலையகத் தடுப்பதற்கு ஒரே வழி !

உயிர்க்கொலையைத் தடுப்பதற்கு ஒரே வழி !

கொலை செய்வதையும் மாமிசம் உண்பதை தடுப்பதற்கும் நீண்ட காலம் ஆகும் .நாட்டில் மாமிசம் உண்பவர்கள் அதிகரித்து கொண்டே உள்ளார்கள்.

சுத்த சன்மார்க்கிகள் பிரசாரத்தாலும் விளம்பரத்தாலும்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு உள்ளது சந்தோஷமான செய்தியாக இருந்தாலும் உயிர்களைக் காப்பாற்ற முடிவதில்லை.

ஜீவகாருண்யத்தின் முதல் பணி பசியைப் போக்குவது. பசியைப் போக்க நிறைய சன்மார்க்க சங்கங்களும்.தொண்டு நிறுவனங்களும்.
அரசாங்கமும் செய்து கொண்டுள்ளன.

சன்மார்க்கிகள் வாயில்லா உயிர்களைக் காப்பாற்ற என்ன செய்து கொண்டுள்ளார்கள். வாய் பேச்சால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது.மனிதர்களின் பசிப்பிணியைப் போக்க மட்டும் தருமச்சாலை அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

மனிதர்கள் தங்கள் முயற்சியால் உணவைத்தேடிக்கொள்வார்கள்.மனிதர்களுக்கு தற்சமயம் உணவுப்பஞ்சம் இல்லாமல்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அனைவருக்கும் உணவு கிடைத்துக் கொண்டுள்ளது.

இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை.கொலைப்படும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

சன்மார்க்கிகளோ மற்ற ஜீவகாருண்ய இயக்கங்களோ.கொலை செய்ய கொண்டுபோகும் உயிர்களை காப்பாற்ற வேண்டும். அந்த உயிர்களின் மாமிசம் என்ன விலையோ அந்த விலையைக் கொடுத்து உயிர்ப்போகாமல் வாங்கி காப்பாற்ற வேண்டும்.

தற்சமயம் அதிகளவில் ஆடு.மாடு.கோழி.பன்றி.மீன்கள் போன்ற உயிர்களைக் கொன்று மாமிசம் விற்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பொருளைக் கொடுத்து வாங்கி உயிர்போகாமல் அந்த உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

ஆடு மாடு கோழி பன்றி.மீன்கள் போன்ற உயிர்களை வாங்கி வளர்க்க காப்பாற்ற குறைந்த பட்சம் ஒரு ஜந்து ஏக்கர் நிலம் வேண்டும் அங்கு தண்ணீர் வசதி.கொட்டகை வசதி.மற்றும் இதர வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.. அவற்றை கவனிக்க.சம்பளத்தில் ஆட்களை நியமிக்க வேண்டும்..தாவர உணவு அங்கேயே தயாரிக்க வேண்டும்.பற்றாக்குறை ஏற்பட்டால் புல்பூண்டு வெளியில் வாங்கிக் கொள்ளலாம்.

விலைகொடுத்து வாங்கும் உயிர்களை அங்கே கொண்டு சென்று சிரம்ம் இல்லாமல் கொலைப்படாமல் காப்பாற்றுவதே பர ஜீவகாருண்யமாகும்.

இந்த முறையை பல மாவட்டங்களில் *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை* என்று பெயர் வைத்து ஆரம்பித்தால் முடிந்த அளவு உயிர்களைக் காப்பாற்றலாம்.

இவற்றை கவனிக்கிற மக்கள் மற்றும்.அரசாங்கம் உதவி உபகாரங்கள் செய்ய முன்வருவார்கள்.மக்களும் உயிர்க்கொலை செய்வதையும் புலால் உண்பதையும் உணர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்க நெறிக்கு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

அன்பு.தயவு கருணை உள்ளவர்கள் இதற்குண்டான இடம் இலவசமாக கொடுத்தால் புண்ணியத்தைப்பெற்று ஆன்மலாபம் அடைவார்கள்.

இந்த முயற்ச்சி சிறியதாக இருந்தாலும் உலகம் முழுவதும் வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆதரவற்ற முதியோர்களுக்கு முதியோர் இல்லம் அமைப்பதுபோல்.கொலைப்படும் உயிர்களை காப்பாற்ற *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை* என்று தொடங்கி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

வடலூரில் பசிப்பிணியைப்போக்க வள்ளலார் தருமச்சாலை ஆரம்பித்ததுபோல் .*உயிர்ப்பிணியைப்போக்க* மாவட்டங்கள் தோறும் *வள்ளலார் உயிர்கள் பாதுகாப்பு சாலை*தோற்றுவிக்க வேண்டும்.

ஆரம்பித்தால் போதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உயிர்கள் காப்பாற்றப்படும்.

வள்ளலார் சொல்லித்தந்த இந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் உயிர்கள் காப்பாற்றப்படும்.மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும்.மக்கள் உண்மை உணர்ந்து ஒழுக்க நெறிக்கு வந்து விடுவார்கள்.

இதற்குண்டான முயற்சி யை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் கடைபிடிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக