நேரடி ஒலி ஒளி பரப்பியது !
நேரடி ஒலி ஒளி பரப்பியது !
வள்ளல்பெருமான் தருமச்சாலையில் தங்கி இருக்கும் காலங்களில் சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சன திருவிழாவிற்கு .அன்பர்களை தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம்.
வள்ளலார் சிதம்பரம் செல்வதை நிறுத்திக் கொள்கிறார்.
அந்த வருட விழாவிற்கு சில அன்பர்கள் சிதம்பரம் சென்றுவிட்டார்கள்.வள்ளலார் உடன் போகலாம் என இருந்தவர்கள.வள்ளலார் நெடுநேரமாகியும் போகாமல் இருப்பதால்.போகமுடியவில்லையே என்று ஏக்கத்தில் இருந்தார்கள்.
அவர்களின் உள்ளத்தை அறிந்துகொண்ட வள்ளலார்.தருமச்சாலை சுவற்றில் வெள்ளைத் துணியைக்கட்டி தொங்கவிடச்சொன்னார்.
எல்லோரையும் முன்பு அமரச்சொன்னார் அமரந்தார்கள்.
அந்த திரையில் சிதம்பரத்தில் நடந்தகொண்டு இருந்த விழாநிகழ்ச்சிகளை. நேரடி ஒலி ஒளிப்பரப்பு செய்வதுபோல் அன்று காட்டினார்.
அந்த நிகழ்ச்சியை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் மனமகிழ்ந்து அதிசயித்துபோனார்கள்.
தன் உடம்பையே அணுக்கதிர்களாக மாற்றி. சார்ட்லைட்டாக மாற்றி சிதம்பரவிழாவின் நிகழ்ச்சிகளை மக்களுக்கு காட்டும் அளவிற்கு வள்ளலார் உடம்பு அருள் உடம்பாக மாற்றம் அடைந்துள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுத்தபிரணவ ஞானதேகத்திற்கு இருக்கும் இடத்திலிருந்தே எல்லாவற்றையும் காணும் அருள் ஆற்றல் உண்டு. இயக்கும் ஆற்றல் உண்டு.மற்றவர்களுக்கு காட்டும் உண்டு.நினைத்த மாத்தில் எல்லாம் செயல்படுத்த முடியும்.
அருள்பெறின் ஒரு சிறு துரும்பும் ஐந்தொழில் புரியும் என்பார் வள்ளலார்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
- என்று மெய்ப்பொருள் வியப்பு என்ற பதிகத்தில் பாடி மகிழ்கின்றனர்.
647 கோடி சித்துக்களை கைவரப்பெற்றவர் வள்ளலார்
வள்ளலாரின் அருள் அற்புதங்கள் அளவிடமுடியாது.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு