தருமச்சாலை ''
'' உலகில் முதன் முதலில் பசித்த ஏழைகளுக்கு ஆதரவு அற்ற ஜீவர்களுக்கு, பசியை
போக்க வடலூரில் வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது சத்திய
தருமச்சாலை !.''
உலகில் மானிடப்பிறவி எடுத்த அனைவருக்கும் ,
உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இருப்பிடம்
இவை மூன்றும் அவசியமானதாகும் ,
வள்ளலார் காலத்தில் நம் நாடு ஆங்கிலேயர் பிடியில்
இருந்தது ,.அப்போது
நம் நாட்டில் வாழ்ந்த மக்களை ,மாட்டு மந்தைகள்போல
நடத்தி வந்தார்கள் ,எந்த வித உரிமையும் கொடுக்காமல் ,
அடக்கு முறை ஆட்சி செய்து வந்தாக்கள் என்பது அனைவரும்
அறிந்ததேயாகும் ,
சாதி.சமயம்.மதம் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வந்த
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ,நாட்டுமக்கள் வறுமையும் ,
துன்பமும் ,துயரமும் ,அச்சமும் ,அவலமும் பயமும் அடைந்து வாழ்ந்து வந்தார்கள்.
இதை கண்ட வள்ளலார் அவர்கள், வறுமையில் வாடும்
மக்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளார் .அவர்
பட்ட வேதனைகளை பல பாடல்களில் பதிவு செய்துள்ளார் .
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும இரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்து கின்றோர் என்
நேருறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் .
அடுத்தபாடல் ;--
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலில்லை
உண்ணவோ உணவுக்கும் வழி இல்லை
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இல்லை
பாரில் நல்லவர் பாற்சென்று பிச்சை நான்
எடுக்கவோ திடமில்லை என்பால் உனக்கு
இரக்கம் என்பதுமில்லை என்செய்குவேன் .
சோறில்லை மேல் வெள்ளைச சொக்காய் இல்லை
நல்ல சோமனில்லை
பாடில்லை கையில் பணமும் இல்லை
தேகப் பருமனில்லை
வீடில்லை யாதொரு வீராப்பும் இல்லை
எனறு மக்கள் படும் துயரத்தை தான படுவதுபோல்
வெளிப்படுத்துகிறார் வள்ளலார் .இவைபோல்
பலபாடல்கள் பதிவுசெய்துள்ளார் .
அடுத்து;----ஆங்கிலேயர்கள் ஆட்சியை கண்டித்து பலபாடல்கள்
எழுதிவைத்துள்ளார் வள்ளலார்;---
கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து .
நடு நிலையில்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடார் தமையரை நாளுங்
கெடுநிலை நினைக்குஞ் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்யலார் கிளத்தாய்
படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை யுலக நடைஎலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் நெந்தாய்
எனறு ஆட்சியில் இருப்பவர்களை கடுமையாக
சாடுகிறார் வள்ளலார், மக்களை கவனித்து ,மக்களுக்கு
நண்மை செய்யவேண்டிய அரசு ,கொடுமைகளை
செய்கிறது ,கொடுமைகள் செய்யும் அரசு அழிந்தால்
தவறில்லை எனறு தனது வேதனையை
வெளிப்படுத்துகிறார் ,கருணையே வடிவானவர்
இப்படிப்பட்ட வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்
என்றால் ,ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்கு முறை
எந்த அளவிற்க்கு இருந்திருக்கும் என்பதை
எண்ணிப்பார்க்கவேண்டும் .
வள்ளலார் மற்ற ஆன்மீக வாதிகள் போல்
இல்லாமல் தனித்தன்மை வாய்ந்தவராக இருந்தார் .
மக்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் அக்கறைக்
கொண்டு கவனித்து வந்துள்ளார் என்பது ,தெள்ள
தெளிவாக தெரிகிறது .
வாயால் சொன்னால் போதாது ,எழுத்தால் எழுதி
வைத்தால் போதாது ,செயலால் செய்து காட்ட
வேண்டும் எனறு எண்ணி செயல்படுத்தி காட்டுகின்றார்
வள்ளலார் ,
''சத்திய தருமச்சாலை ''
பசி ,பட்டினி ,வறுமை, துன்பம் ,எனறு போராடிக்
கொண்டிருக்கும் ,மக்களுக்காக முதலில் மக்களின்
பசிப்பிணியை போக்கவேண்டும் எனறு எண்ணிய
வள்ளலார் அவர்கள் ,
உலகத்தின் ,மத்தியப் பகுதியான் தமிழ் நாட்டில்
வறுமை அதிகம் உள்ள ,உத்திர ஞான சிதம்பரம் எனறு
அழைக்கப்படும் ,''வடலூரில் '' ,முதன் முதலில்
பசியின் கொடுமையைப் போக்க ,பசித்தோருக்கு
உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் .
23 --5 --1867 ,ஆம்ஆண்டு வைகாசி 11 ,ஆம் நாள்
வடலூர் பெருவெளியில் சத்திய தருமசாலையை,
வள்ளலார் அவர்கள் ,அவர் கையாலே அடுப்பு மூட்டி
ஆரம்பித்து வைக்கிறார் ,அவர் முட்டிய அடுப்பு ,
இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது .
அங்கு வரும் அனைவருக்கும் சாதி.சமய.மதம்.மொழி இனம் என்ற ,எந்தவித வேறுபாடும்
இல்லாமல் தினசரி சமரச சாப்பாடு அளித்துவருகிறார்கள் .
அவர் கையால் எரியவிட்ட அடுப்பு, அது தொடர்ந்து
இன்றுவரை, தங்குதடை ஏதும் இன்றி, வட லூர்
பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய
தருமச்சாலையாக''விளங்கிவருகின்றது.
உலகிலுள்ள ஆன்மீக வாதிகள் ,யோகிகள் ,தவசிகள் ,
ஞானிகள் ,மேலோர்கள் எல்லாம் ,கடவுளைக் காண
வேண்டும் எனறும் ,கடவுளின் அருளைப் பெறவேண்டும்
எனறும் ,யாகம், தவம்,யோகம் ,தியானம் செய்ய வேண்டி
காடுகளிலும் ,மலைகளிலும் ,குகைகளிலும்,
ஆலயங்களிலும்,அலைந்து திரிந்தார்களே தவிர ,
மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை ,அவர்கள்
மக்கள் பசியின் கொடுமையை அகற்ற வேண்டும்
என்றோ ,மக்களின் அவல நிலையை போக்க
வேண்டும் என்றோ எண்ணியதாக தெரியவில்லை .
அந்த பெரியோர்கள் எல்லாம் முக்திநிலையை
அடையவே முயற்ச்சி செய்தார்களே தவிர வேறு
முயற்ச்சிகள் எதுவும் செய்யவில்லை ,
மற்றும் சிலர் ,கல்லு ,மண் ,மரம் ,வெள்ளி ,தங்கம் ,
போன்ற சிலை வடிவில் உள்ள ,பொய்யான உருவங்களை
கடவுளாக எண்ணி ,அவைகளுக்கு பெயர் சூட்டி,பக்திப்
பாடல்கள் ,பாடி பணிந்தார்க்ளே தவிர ,உலகில் உள்ள
நடமாடும் உயிரினங்களைப் பற்றி ,கவலைப் பட்டதாக
எதுவும் தெரியவில்லை .
உலகில் மக்கள், மற்றும் உயிரினங்கள்,துன்பப்
படுவதைப் பார்த்தவர்கள் ,அது அவரவர்கள் செய்த ,
பாவமும் ,புண்ணியமும் எனறு விளக்கம் தந்தார்கள் .
பாவமும் ,புண்ணியமும் கடவுளால் கொடுக்கப்
படுகிறது ,எனறு சொல்லிவிட்டு ஒதுங்கிக்
கொண்டார்கள் ,
ஆனால் வள்ளலார் அவர்கள்.முன்னாடி தோன்றிய அருளாளர்கள் சொல்லிய கருத்துக்களை
மறுத்து ,உண்மை கருத்துக்களை உலகுக்கு
எடுத்து உரைத்துள்ளார் ,பாவம் ,புண்ணியம் என்பது
எல்லாம் ஏமாற்றுவேலை என்கிறார் .
பாவமும் ,புண்ணியமும் நாம் செய்யும் செயல்பாட்டில்
தான் வருகிறது ,நல்லதை நினைத்து நல்லது
செய்தால் நண்மைகள் கிடைக்கும் ,கெட்டதை
நினைத்து கெட்டதை செய்தால் ,தீமைகள தான்
வந்துசேரும் ,நன்மையையும் ,தீமையும் பிறர்தர
வாரா என்பதுபோல் ,நன்மைக்கும் தீமைக்கும்
நாமேகாரணமே ஒழிய பிறரால் வருவதில்லை ,
கடவுளுக்கும் ,இதற்க்கும் சம்பந்தம் இல்லை எனறு
வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார் .
உலகிலுள்ள உயிர்களை தம்முயிர் போல் எண்ணி
அவைகளுக்கு துன்பம் தராமல் ,துன்பம் வந்தால்
அத்துன்பங்களை ,போக்குவதற்கு உண்டான
வழிவகைகளை கண்டுபிடித்து அவைகளைப்
போக்குவதுதான்,கடவுள் வழிபாடு என்றார்
வள்ளலார் ,
உலகினில் உயிர்களுக்குறும் இடையுறுறேல்லாம்
விலக நீ யடைந்து விளக்குக மகிழ்க .
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுக எனறு உரைத்த மெய்ச்சிவமே .
உயிரெலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச செப்பிய சிவமே .
பயிர்ப்புறு கரணப்பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே .
பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால்
பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போதெல்லாம்
உளம் பகீர் என நடுககுற்றேன்
இட்ட இவுலகிற் பசி எனில் லெந்தாய்
என்னுளம் நடுங்குவது இயல்பே .
எனறு உயிகளைப் பற்றி பல பாடல்கள் அருட்பாவில் எழுதி வைத்துள்ளார்.
எழுதி வைத்ததோடல்லாமல் உயிர்கள்
படும் துன்பங்களை பார்த்து ,தான் படுவது
போல் எண்ணி ,வேதனையும் ,வருத்தமும்
அடைந்து நடுங்கியுள்ளார் ,
கடவுள் படைப்பினால் தோன்றிய உயிர் இனங்களை
வாழ வைப்பதே பெரும் தவமாகும் என்றார் .
தவம், யோகம்,யாகம் தியானம் செய்யும் ,
சித்தர்கள்,முத்தர்கள் ,மேலோர்கள் அனைவரும்
ஜீவகாருண்யம் செய்யாமல் இறை அருளைப் பெற
முடியாது என்றார் .
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !
உயிர்கள்மேல் அன்பு செலுத்துவதே
கடவுள்வழிபாடு !
உயிர்க்கொலை செய்யாதது தான்
கடவுள்வழிபாடு !
ஆன்மநேய ஒருமைப்பாடுதான்
கடவுள் வழிபாடு !
கடவுள் ஒருவரே! அவர் அருட்பெரும்ஒளியாக
இருக்கிறார் என்பதை ,அறிவுசார்ந்த தெளிவுடன்
உணர்வதே கடவுள் வழிபாடு! .
என்பதை உண்மையுடன் உணர்ந்த வள்ளலார்
உயிர்களின் பசிப்பிணியை போக்க வடலூரில்
சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார் .
தொடர்ச்சி ;--
வள்ளலார் தருமச்சாலை தோற்றுவித்த பிறகு,
ஆலயங்களில் பிரசாதம் கொடுத்த வந்தவர்கள் ,
அன்னதானம் வழங்க ஆரம்பித்தார்கள் ,
தமிழக அரசின் காங்கிரசு ஆட்சியில் திரு ,காமராஜர் அவர்கள்
முதல்வராக இருந்த காலத்தில் ,பள்ளியில் படிக்கும்
ஏழை மாணவர்களுக்கு ,மதிய உணவு திட்டத்தை ,
சட்டபூர்வமாக கொண்டுவந்தார் ,
அடுத்து வந்த தமிழக முதல்வர் திரு ,எம், ஜி, ,,ராமச்சந்திரன்
அவர்கள் ,சத்துணவு திட்டமாக கொண்டுவந்து ,
ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கிவந்தார்கள் ,
அடுத்து வந்த தமிழக முதல்வர் ,திரு ,மு ,கலைஞர் ,
கருணாநிதி அவர்கள் சத்துணவு திட்டத்தை ,மேலும்
,அனைத்து பள்ளி
மாணவ மாணவிகளுக்கும், உணவு வழங்க சட்டத்தின்மூலம் விரிவுப் படுத்தினார்.
அதுமட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து
தரப்பு மக்களும் பசியின் கொடுமையால் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்
இவையெல்லாம் எதைக்காட்டுகிறது ,என்றால்
வள்ளலார்அவர்களின் எண்ணம்.சொல்.செயல் அவரின் அருள் ஆற்றல்.,
இன்று உலகம் முழுவதும் தமிழ் நாட்டை திரும்பிப் பார்க்கப்படுகிறது ,
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
அன்புடன் ஆன்மநேயன்.
போக்க வடலூரில் வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது சத்திய
தருமச்சாலை !.''
தருமச் சாலை |

வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றிய அடுப்பு |
வடலூர் பெருவெளியில் சத்திய தருமசாலையை,
வள்ளலார் அவர்கள் ,அவர் கையாலே அடுப்பு மூட்டி
ஆரம்பித்து வைக்கிறார் ,அவர் முட்டிய அடுப்பு ,
இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது .
அணையா அடுப்பு |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக