அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

வள்ளலார் சரித்திரக் குறிப்பின் பிழைகள் ! !


வள்ளலார் சரித்திரக் குறிப்பின் பிழைகள் !

வள்ளலார் சரித்திரக் குறிப்பு எழுதியவர்கள்.திருஅருட்பாவை வெளியிட்டவர்கள் அனைவரும் வள்ளலார் மீது அளவில்லா அன்பும் பற்றும் உடையவர்கள்....

ஆனால் சைவ சமயப் பற்றுள்ளவர்கள்.எனவே வரலாற்றை அவர்களுக்கு சாதகமாகவே எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

உதாரணத்திற்கு ..

வழிபடு கடவுள் முருகன்.!
வழிபடு குரு திருஞானசம்பந்தர்!.
வழிபடு நூல் திருவாசகம் !.
கண்ணாடியில் திருத்தனி முருகனைக் கண்டார்.!
கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்!
வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்ட மரபில் வள்ளலாரும் ஒருவர் !

என்றும் எழுதி வைத்துள்ளார்கள்..இவை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.....

திருஅருட்பாவை முழுதும் படிக்காத்தால் வள்ளலார் வரலாறுகளில் எழுதியும். மேடைகளில் பேசியும் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.!

 *சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பம்* !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம்.!

என்னும் உரைநடைப் பகுதியில் வள்ளலாரே தன்னுடைய வரலாற்றை தெளிவாக எழுதி வைத்துள்ளார்..சத்திய பெரு விண்ணப்பதில்..
 ஒரு பகுதி சுருக்கமாக பதிவு செய்கிறேன்...

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!

குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற *அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே* உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.

வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.

அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த *சன்மார்க்கத் தனிநெறி* ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் *கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்்* கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி

நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.
இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்! என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்கின்றார்.

மேலே கண்ட வாசகங்களில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரின் உண்மை நிலைப்பற்றி..இனிமேலாவது  அறிந்து. உணர்ந்து.தெரிந்து தெளிவு பெறுவோம்..

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர். என்பதை புரிந்து கொண்டால் குழப்பம் வராது !

வள்ளலார் பாடல் ! 


என்றும் மேலும் ஒரு பாடல் !


மேலும்...

மேலே கண்ட இரண்டு பாடல்களும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை இவ்வுலகத்திற்கு.அனுப்பிய காரண காரியத்தைத் தெரியப் படுத்துகின்றது.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக