புதன், 21 ஆகஸ்ட், 2019

ஆன்மீக துறவிகளின் அடையாளம்.!

வெள்ளி, 21 மே, 2010


ஆன்மிக துறவிகளின் அடையாளம்





1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இனம் என்ற , வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.

2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.

3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க   வேண்டும்.

4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என எண்ண வேண்டும்.

5. ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை  எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.

6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.

7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.

8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.

9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.

10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.

11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.

12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம்.பணம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.

13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளைக் காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

14. தான் அணியும் ஆடை ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக் கூடாது.

15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.

16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.

17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.

18. எதிலும் பொது நோக்கம் தேவை.

19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.

21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.

22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக   ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).

மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு