அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

வள்ளல்பெருமான் காட்டிய நேர் வழி !

வள்ளல்பெருமான் காட்டிய நேர்வழி !

உத்தர ஞான சித்திபுரம் வடலூர் !

உத்தர ஞான சித்திபுரம் என்றும்.உத்தர ஞான சிதம்பரம்என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும்.

பார்வதிபுரம் என்றும். வடலூர் என்றும்உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே..

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை !
திருஅருட்பா !

என்ற நான்கு மெய்ப்பொருள் கொள்கை விளக்கங்களை  இவ்வுலகிற்கு தந்துள்ளார்.

சுத்த சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து.திருஅருட்பாவில் உள்ளபடி படித்து உணர்ந்து தேர்ச்சி பெற்று..தருமச்சாலை வழியாக சென்று.சத்திய ஞானசபையில் உள்ள மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதற்காகவே இந் நான்கையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

இந்நான்கையும்  தடம் மாறாமல் கடைபிடித்து வாழ்ந்து
 பூரண அருள் பெற்று மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில்..ஸ்ரீமுக வருடம் தைத்திங்கள் 19 ஆம் நாள்.30-1-1874 நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

உயர்ந்த அறிவு பெற்ற மனிதகுலம் வள்ளலார் போல் வாழ்ந்து மரணத்தை வெல்லுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.......

உலகில் தோன்றிய ஞானிகள் சரியை.கிரியை.யோகம்.என்ற மூன்று படிகள்வரை சென்று சிலர் சுத்ததேகம் பெற்று.சமாதி நிலையில் மூழ்கி முக்தி நிலைப்பெற்று மரணம் அடைந்தார்கள்.சிலர் பிரணவதேகம் பெற்று.பஞ்சபூதங்களில் கலந்தார்கள்.

சுத்த தேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்திப்பெற்று .ஜீவதேகத்தை அருள் தேகமாக மாற்றி.பிறப்பு இறப்பு இல்லாமல்  இயங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இறைவனுடன் கலந்து கொண்டவர்தான் வள்ளலார்.எனவே தான் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் பெரும்புகழ் வாய்ந்த உயர்ந்த  பெயர் பெற்றார்.

ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்றும் நீ ஒருவன்தான் என் எண்ணப்படி வாழ்ந்து என்னுடன் கலந்து கொண்டதால் என்பிள்ளை ஆனதினாலே என்பணிகளை எல்லாம் நீயே செய் என்று ஐந்தொழில் செய்யும் வல்லபத்தை  கொடுத்து ஆட்சி பீடத்தில்  அமர வைத்து அழகு பார்த்துக் கொண்டுள்ளார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக