அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 18 ஜூன், 2019

அருளாளர் மகாசபைக் கூட்டம் !

அருளாளர்கள் மகாசபைக் கூட்டம் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெருவெளியில்  ஒரு மாபெரும் மகாசபையைக் கூட்டுகின்றார்.

*வள்ளல்பெருமானையும் அங்கு அழைக்கின்றார்..* வள்ளலார் அங்கு வந்து தனிமையில் அமர்ந்திருக்கின்றார்.

அருளாளர்கள் கூட்டம் !

அந்த மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அருளாளர்கள் யாரெல்லாம் என்பதை வள்ளலார் பதிவு செய்கிறார்.

பாடல் !

உருத்திர்ர்கள் ஒருகோடி நாரணர்கள் பல்கோடி
உறுபிரமர் பல்கோடி இந்திர்ர்கள் பல்கோடி

பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில் அனந்தங்கோடி யாங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிபுறத்தே நின்று
தியங்குகின்றார் நடங்காணுஞ் சிந்தையரா அந்தோ

வருத்தம் ஒன்றுங் காணாதே நான் ஒருத்தி யேறி
மாநடம் காண்கின்றேன் என் மா தவந்தான் பெரியதே !

மேலே கண்ட பாடலில் யார் யார் எல்லாம் கலந்து கொண்டார் என்பதை வள்ளலார் பட்டியல் போட்டு சொல்லுகிறார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்சி செய்யும் அந்த  மாநடத்தை கண்டு அதிசயித்து நின்றேன்.என்ன புண்ணியம் செய்தோனோ என்கிறார்.

அடுத்து மேலும் யார் யாரை  எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைத்துள்ளார் என்பதை பாருங்களேன்!

பாருலகா அதிபர். புவனா அதிபர் ஆண்ட அதிபர்கள்.
பகிரண்டா அதிபர். வியோமா அதிபர்.முதலாம் அதிபர்

ஏருலவாத் திருப்படிக் கீழ் நின்று விழித்திருக்க
எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன்

சீருலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்
திருநட நாதாந்தத்தே செயும் நடம் போதாந்தப்

பேருலவா நடங் கண்டேன் திருவமுதம் உணவும் பெற்றேன்
நான் செய்த தவம் பேருலகில் பெரிதே !

என்னும் பாடலிலே கலந்து கொண்டவர்களின் பட்டியலை வெளியிடுகின்றார்..

இவர்கள் எல்லவரும் உலகங்களையும்.அண்டங்களையும்.
ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்ற அருளாளர்கள். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  நியமிக்கப்பட்ட அருளாளர்கள்*. என்பதை வெளிப்படுத்துகின்றார்...

* இவர்கள் முன்னாடி  வள்ளலாரை அழைக்கின்றார்.* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.வள்ளலார் இடம் தன்னுடைய
ஆட்சியை ஒப்படைக்கும் காட்சியை வெளிப்படுத்துகின்றார்...

எல்லோரும் ஆச்சரியமாக என்ன நடக்கப் போகிறது என்பதை விழிமூடாமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள்...

வள்ளலார் பதிவு செய்து பாடலைப் பாருங்கள் !

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங் கண்டு உளங் களிக்கும் போது மணவாளர்

மெய் பிடித்தாய் வாழிய நீ  சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது

கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உனை நாங்  கைவிடோம் என்றும்

மைபிடித்த விழியுலகர் எல்லோரும் காண
மாலை யிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே !

என்னும் பாடலின் வாயிலாக மக்களுக்கு உண்மையைத்  தெரியப் படுத்துகின்றார்...

சபையின் புறத்திலே அமர்ந்திருக்கும் நாம் வணங்கும் அருளாளர்கள் எல்லோரும். பொய் பிடித்தவர்கள் என்பதை தெரிவித்து.வள்ளலாரை அழைத்து நீ ஒருவன் தான் மெய் பிடித்தாய் ஆதலால்.

*உலகத்தை கட்டி ஆளும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உலகம் முழுவதும் விளங்க.விளக்குக என என் கைபிடித்து கொண்டார்.நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கால் பிடித்துக் கொண்டேன் என்கின்றார்*.

இனிமேல் உம்மை கைவிடமாட்டேன் என்று மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண *அருள்மாலை* அணிந்து.இன்று முதல் என்னாலும்  அருள் ஆட்சி புரிய ஆணை யிட்டார் என்பதை எல்லோரும் அறிய அறிவிக்கின்றார்.

*இது நடந்த்து எப்போது என்றால் 1874 ஆம் ஆண்டாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஆட்சி செய்யும் அருட்பெரு வெளியில்*.முன்னாடி  உள்ள அருளாளர்கள் முன்னிலையில்  திருஅருட்பிரகாச வள்ளலாருக்கு.அருள் ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் அதிகாரப்பூர்வமாக அருள் சுதந்தரத்தையும் கொடுத்து அறிவிக்கின்றார்..

இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த முன்னாள் ஆட்சி செய்த அருளாளர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி மயங்கிய நிலையில் எதோ பேசிக் கொண்டு உள்ளார்கள்.அப்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..

பாடல் இதோ !

பொருத்தம் இல்லார் எல்லோரும்  புறத்திருக்க நான் பொய்ப்
பொது நடங் கண்டு வந்து நிற்கும் போது தனித்தலைவர்

திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
தெயவ மலரடி பிடித்துக் கொண்டேன் சிக்கெனவே

வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல் காண் அழியா
வாழ்வு வந்த்து உனக்கே ஏழுலகும் மதிக்கக்

கருத்தலர்ந்து வாழிய வென்று ஆழி அளித்து எனது
கையினிற் பொற் கங்கணமுங் கட்டினர்காண் தோழி !

என்னும் பாடலில் ...

இதற்கு முன்னணி அமரந்து இருக்கும் அருளாளர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிர்வாகம் செய்யும் பொருத்தமும்.தகுதியும் இல்லை. எனவே நீ வருத்தம் கொள்ளாமல் எல்லா உலகமும் மதிக்க அருள் ஆட்சி செய்வாயாக என்றும்.

*இதுநாள் வரையும் உண்மை இறைவனை உலகிற்கு அறிமுகப்படுத்த தகுதி இல்லாமல் வாழ்ந்தவர்கள் தான் முந்தைய அருளாளர்கள்.*

மேலும் மரணத்தை வெல்லும் வழியைக் காட்டாமல் ..ஆன்மாக்களை அலைய விட்டுவிட்டார்கள்..

கைலாயபதி என்றும்.வைகுண்டம் என்றும்.சத்திய லோகாதபதி என்றும்.சொர்க்கம்.நரகம் என்றும்.பரலோகம் என்றும்.அல்லா என்றும்.ஏசு என்றும்.புத்தம் என்றும்.பிரம்மம் என்றும்.பர பிரம்மம் என்றும் பல பொய்யான வழிகளை காட்டி உள்ளார்கள்...

எவற்றைப்பற்றியும் வருத்தம் கொள்ளாமல் மயக்கம் கொள்ளாமல்  ஆட்சி செய்வாயாக...நான் உன்னுடன் எப்போதும் பிரியாமல் இருப்பேன் என்றும் நிலைப்பெற்ற அருள் ஆட்சி செங்கோல் வழங்குகிறேன் என்றுகங்கணமும் கட்டி மகிழ்கின்றார்...

இப்படி இன்னும் நிறைய உண்மைகளை அனபவமாலைப் பகுதியில் பாடலில்.இறைவன் ஆணைப்படி பதிவு செய்து வைத்துள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் உலக மக்களுக்கு எல்லா உண்மைகளையும் தெளிவுபட விளக்கி உள்ளார்.

இவற்றை எல்லாம் நாம் அறியாமல் உணராமல்..அழிந்து கொண்டு இருக்கும் சாதி.சமய.மதக் கொள்கைகளையும்.அவற்றில் காட்டியுள்ள பொய்யான தத்துவத் தெய்வங்களையும் வணங்குவதால் வழிபடுவதால் எந்த பயனும் இல்லை..

எனவேதான் சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி ! என்னும் வரிகளின் வயிலாக பதிவு செய்கின்றார்.

வள்ளலார் காட்டிய உண்மைத் தெய்வமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் ..அவர்காட்டியுள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க்க் கொள்கைகளான.இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ்வதே சத்திய வார்த்தையாகும்...சத்திய வாழ்க்கையாகும்..

ஆட்சி மாற்றத்தை கண்டு கடைபிடித்து வாழ வேண்டும்.

இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்சியாகும்..

வள்ளலார் பாடல் !

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு

மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

என்னும் பாடலிலே தெளிவான விளக்கம் தந்து வெளிப்படுத்தி உள்ளார்..

இனிமேலும் கண்மூடித்தனமான கற்பனைக் கொள்கைகளைக் கடைபிடித்து.பின்பற்றி அழிந்து போகாமல்  என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழும் சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து வாழ்வோம்..

சுத்த சன்மார்க்க கொள்கைகளில் மிகவும் முக்கியமானது .கொல்லாமை.புலால் மறுத்தல்.

அடுத்து கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். என்ற உண்மையும்.. அடுத்து

எல்லா உயிர்களிலும் இறைவன் இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை உணர்ந்து ஜீவகாருண்ய உயிர் இரக்கமும் கொண்டு வாழ்வதே முக்கியமான வாழ்க்கை நெறி முறைகளாகும்.

இவற்றை இடைவிடாமல்  கடைபிடித்தால் இறைவன் அருள் வழங்க தயாராக உள்ளார்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக