அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 21 மே, 2019

தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார் !

*தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார்..*

25-5-1867.ஆம் நாள் வடலூரில் வள்ளலார் முதன் முதலில் தருமச்சாலையைத் தோற்றுவித்தார்.

*தருமச்சாலை ஏன் தோற்றுவித்தார் ?*

உலகில் உள்ள எல்லவரும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்..

மனிதர்களைத் தவிர இறைவனால் படைக்கப்பட்ட எல்லா  ஜீவராசிகளுக்கும்  நியதி ஆகாரம் இறைவனால் வழங்கப் படுகின்றது.

நம்மை போன்ற உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட நியதி  ஆகாரம் கிடையாது...

ஆகாமிய ஆகாரமான முயற்சி ஆகாரம் பெற்று தான் உயிர் வாழ வேண்டும் என்பது இறைவன் ஆணையாகும்.

அந்த முயற்சி ஆகாரம் கிடைக்காமல் மக்கள் மாண்டு போகிறார்கள்.
அவர்களை காப்பாற்றுவதே..
பொருள் இருக்கப்பட்டவர்களின் கடமையாகும்.

பொருள் உள்ளவர்கள் பொருள் இல்லாதவர்கள் என்ற நிலை உலகில் இறைவன் சட்டத்தை மீறி நடந்து கொண்டு உள்ளன. *அதை ஒழித்து* ஒத்தாரும்.உயர்ந்தோரும்.தாழ்ந்தாரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்பது இறைவன் ஆணையாகும்...

உள்ளவர்கள் இல்லாதவர்கள் உள்ளதால் தான் ஏழைகள் உருவானார்கள்.

*இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே ஜீவகாருண்யம்*.அதுவேஒவ்வொரு மனித  ஆன்மாக்களின் கடமையாகும்..

இறைவன் கட்டளைப்படி உலகில் பசியோடு.எவ்வுயிரும்
மற்றும்  மனிதரகள் இருக்கக் கூடாது. என்பது இறைவன் சட்ட நியதியாகும்.பசியோடு இருப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் தான்.எனவே தான் *பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பதே மனிதர்களின் முதல் பணியாகும்* என்பதால் இறைவன் ஆணைப்படி வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார்.

அதற்கு ஜீவகாருண்யம் என்றும்.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்தார்.

கடவுள் அருளைப் பெறுவதற்கும்.
கடவுளைத் தொடர்பு கொள்வதற்கும்.கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரே வழி ஜீவகாருண்ய ஒழுக்கம்  மட்டுமே என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சத்திய தருமச்சாலையை வடலூர் தோற்றுவித்து .சாலை என்னும் வழியைக் காட்டுகின்றார்..

மேலும் *ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற. தவம்.தியானம்.யோகம்.புறவழிபாடுகள் எல்லாம் வெற்று மாயா ஜாலங்களே என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்...*

வள்ளலாருக்கு ஆண்டவர் காட்டிய உண்மை வழிகளை.பாடல்கள் மூலமும்.உரைநடைகள் மூலமும் வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் மூன்று பிரிவுகளாக வசன பாகத்தில் எழுதி வைத்துள்ளார்..

மேலும் பாடல்களிலே தெளிவுப் படுத்தி உள்ளார்...

அதிலே சில பாடல்களை பதிவு செய்கிறேன்...

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன் என்

தன் பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்

காலையிலே வந்து கருணைஅளித்தே தருமச்

சாலையிலே வா என்றான் தான்.!

ஏதும் தெரியாது என்பாட்டுக்கு ஏதோ பாடிக்கொண்டும்.எழுதிக்கொண்டும் வழிப்பட்டுக் கொண்டும்  இருந்த என்னை தருமச்சாலை வழியாகத்தான் வரவேண்டும் என கட்டளை இட்டார் இறைவன் என்பதை மேலே கண்ட பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்..

மேலும் கீழே வரும் பாடலை கவனிக்கவும்...

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே
தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே !
சமரச சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்த மொழிமாலை அணிந்து ஆடும்
மாநடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

அதாவது.

*இம்மை இன்ப வாழ்வு.
மறுமை இன்ப வாழ்வு.
பேரின்ப வாழ்வு*
போன்ற முத்தேக சித்தி பெறும் வல்லபம் முழுவதும்.அந்த பெரும் பயனாம் விளைவை எல்லாம் ..

*ஒரே ஒரு பகலில் தருமச்சாலை வழியாக.இறைவன் அருளைப் பெற்றுக் கொண்டேன் என்கிறார் வள்ளலார்.*

அதே நேரத்தில் ..உலகில் எவ்வளவோ அருளாளர்கள் பாமாலைகள் தொடுத்து இருந்தாலும்..*என் பாமாலைகளை சிறந்த மொழி மாலைகள் என்று ஏற்றுக் கொண்டாய்* என்னே என்மேல் உங்கள் கருணை என்று...உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்  போற்றி புகழ்கின்றார்.

 மேலும்

காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்

சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்

சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்

ஏகா நினக்கடிமை ஏற்று.!

என்றும்.

காலையிலே அமுதக்காற்றை அருந்தி நின்தன்னை கண்டு கொண்டேன்.
தருமச்சாலையை யிலே இன்பம் பெறுகின்றேன்.

மேலும் சாகா வரமும் பெற்றுக் கொண்டேன்.
தத்துவங்களை எல்லாம் கடந்து.தத்துவத்தின் மேல் நடிக்கும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. ஏகனே அனேகனே என்னையும் உமக்கு அடிமையாக ஏற்றுக் கொள்வாய்.ஏற்றுக் கொண்டாய் என்று போற்றி புகழ்கின்றார்..

மேலும்....

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்

வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே

காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப் புறம்போ என்றாய்

கண்டிலன் ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி

ஓலையிலே பொறித்ததை நீ உன்னுளத்தே கருதி

உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்

சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.!

ஆண் பெண் உலகில் உறவு கொள்வது மாலை நேர வழக்கம் என்பது அனைவரும் அறிந்த்தே...

ஆனால் இங்கு ஓர் அதிசயம் நிகழ்கின்றது..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை கலப்பதற்கு காலையிலே வருகின்றார்...

உலகில் தோன்றிய அருளாளர்கள் இரவில் தான் கலப்பதாக ஓலையிலே எழுதி வைத்துள்ளார்கள்.

அது உண்மை என்று படித்து.பிடித்து உளரிக் கொண்டு உள்ளீர்கள்..

ஆண்டவரின் உளவைத்  தெரிந்து கொள்வார் உலகில் ஒருவரும் இல்லை.

நான் தோற்றுவித்த *சத்திய தருமச்சாலையிலும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திலும்*  இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் அந்த உளவை அறிவால் அறிந்து கொள்வீர்கள் என்கிறார்...

எனவே இறைவன் அருளைப் பெறுவதற்கு சத்திய தருமச்சாலை வழிதான் *உளவு* என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றார் வள்ளலார்...

*ஜீவகாருண்யம் இல்லாத போது அருள் விளக்கம் தோன்றாது.அது தோன்றாத போது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாத போது முத்தி இன்பம்.சித்தி இன்பம் ஒருவரும் பெற மாட்டார்கள்*
அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாது என்பதை அறிய வேண்டும்* என்று ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பதிவு செய்கிறார் வள்ளலார்..

*ஜீகாருண்யத்தால் மட்டுமே மோட்ச வீட்டின் கதவைத் திறக்க திறவுகோல் என்னும் சாவியைப் பெறமுடியும்* என்கிறார்.

*மேலும் ஜீவகாருண்ய மே கடவுள் வழிபாடு என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்*

 வள்ளலார் ஆரம்ப காலத்தில் பக்தி மார்க்கத்தை கடைப்பிடித்து வந்தார்..அந்த மார்க்கத்தால் இறைவன் அருளை. முழுமையாக பெற முடியாது.முடியவில்லை  என்பதை உணர்ந்த வள்ளலார் ஞான மார்க்கத்தை தோற்றுவித்தார்..

ஞான மார்க்கம் என்பதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்...

இந்த மார்க்கத்தின் முதல்படி .முதல் பயிற்சி என்பது *ஞானசரியை* என்பதாகும்.

*ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கம்* என்பதாகும்.

*ஞான கிரியை என்பது கரண ஒழுக்கம்* என்பதாகும்

*ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்* என்பதாகும்

*ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்* * என்பதாகும்.

மனித உயிரான ஜீவனை மனித உடம்பில் இருந்து வெளி யேற்றாமல்  காப்பாற்றுவதே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்..

எனவே தான் வள்ளலார் ஜீவனைக் காப்பாற்றும் முதற் கருவியான *பசிப் பிணியைப் போக்க* சத்திய தருமச்சாலையைத் வடலூர் தோற்றுவித்து உள்ளார்.

பசிப் பிணியைப் போக்க வள்ளலார் மூட்டிய அடுப்பு அன்று முதல் இன்று வரை அணையாமல் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றது.

இன்று உலகம் முழுவதும் மக்கள்.வள்ளலார் கொள்கையை சிரமேற்க் கொண்டு ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அறியும் போது.காணும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் அடைகின்றோம்.

வடலூரிலும் சன்மார்க்க சங்கங்களிலும் வருகின்ற 25- 5-2019 அன்று தருமச்சாலை தோற்றுவித்த நினைவு  தினமாக உலகம் முழுவதும் விழாக்களும் அன்னதானமும்.சான்றோர்களின் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தி *சத்திய தருமச்சலையின்* வழியாக  மக்கள் வரவேண்டும்.மகிழ்ச்சி யுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பறை சாற்றிக் கொண்டுள்ளார்கள்.

சாதி.சமயம்.மதம் என்ற பிரிவினை இல்லாமல் ..அன்பு.
தயவு.இரக்கம். கருணை.அருள் பெறுவதற்கும் மக்களை நல்வழிப் படுத்துவதற்கும்  ஜீவகாருண்யம் ஒன்றே..வள்ளலார் காட்டிய சிறந்த  வழியாகும்

இன்று உலகம் முழுவதும் உள்ள அறிவு சார்ந்த மக்கள் உண்மையைத் தெரிந்து புரிந்து அறிந்து கொண்டு ஜீவகாருண்ய பணியைப் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள்..மிகவும் பாராட்டுக்குறியதாகும்.

இனி சுத்த சன்மார்க்கம் ஒன்றே எக்காலத்தும் விளங்கி ஓங்கி உயர்ந்து நிற்கும் மார்க்கமாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக