அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 28 மார்ச், 2019

நெற்றிக் கண் திறக்கும் வழி !

நெற்றிக் கண் திறக்கும் வழி !

ஒவ்வொரு மனித ஜீவர்களிடத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடம் தான் புருவமத்தி என்பதாகும் அதற்கு சிற்சபா அங்கம் என்றும் பெயர்.லலாடம் என்றும் முச்சந்தி என்றும்  பெயர்.

அந்த இடத்தில் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குவதால் அதற்கு நெற்றிக் கண் என்று பெயர்.

நெற்றிக் கண்ணைத் திறந்துகொண்டவர்களுக்கு .பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் .கொலை.என்னும் துன்பங்கள் எக்காலத்தும் வராது.

மேலே கண்ட துன்பங்கள் வராமல்  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மனிதன் நெற்றிக் கண்ணைத் திறக்க பழக வேண்டும்.

நெற்றிக் கண்ணைத் திறந்து அதில் உள்ள அமுதம் என்னும் *அருளை* உடம்பு முழுவதும் செலுத்தினால் மட்டுமே ஊன  உடம்பு  ஒளி உடம்பாக மாற்றம் அடையும அதற்குத்தான் ஆன்ம தேகம் என்று பெயர்.

*உயிர் உள்ள தேகத்திற்கு ஜீவதேகம் என்று பெயர்...ஆன்மா மட்டும் உள்ள தேகத்திற்கு ஆன்ம தேகம் என்று பெயர்*

உயிரை அழிக்காமல் மீண்டும் பிறப்பு எடுக்காமல் உயிரைத் தன்வசமாக மாற்றிக் கொள்வதே வள்ளலார் காட்டிய நெற்றிக்கண்ணைத் திறக்கும் வழியாகும்.

ஆன்மா ஒரு கோடி சூரியபிரகாசம் ஒளித்தன்மை உள்ளது. அந்த ஆன்மா அருட்பெருஞ்ஜோதியாக. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்படி மாற்றிக் கொள்வதால் பஞ்ச பூதங்களால் பின்னப்பட்ட பூத உடம்பு அருள் ஒளியால் பிரிக்கப்படுகின்றன.

பஞ்ச பூதங்களான உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவுசெய்துள்ளதை ஊன்றி படிக்கவும்.!

ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும்.இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.

அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாக இருக்கின்றன என்றும் அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி.அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும் என்பதால்

*பூதகாரிய தேகம் அவசியம் ஆன்மாவிற்கு தேவைப்படுகின்றது.*..

 பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற் காரணம் ஆதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களே .பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற செயல்களால் தேகத்திற்கு துன்பமும் மரணமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே வருகின்றன..

எனவே இந்த பிறப்பை இறுதிப் பிறப்பாக நிறுத்திக் கொள்வதே மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடையாகும்..

ஆன்மாவின் அருள் ஒளியால் தேக மாற்றம் !

ஆன்மாவை வெளியே தெரிய வொட்டாமல் அறியாமை.அஞ்ஞானம் என்னும் ஏழு மாயா திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன..

அத்திரைகளை நீக்கி ஆன்மாவை காண்பதற்கு வழிகாட்டுவதே வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமாம்..

ஆன்மாவிற்குள மூன்று தேகம் உள்ளது..!

அந்த ஆன்ம தேகத்திற்குள் மூன்று தேகம் அடங்கி உள்ளது.

அதாவது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் எனபனவாகும்.

சுத்ததேகம்.பிரணவதேகம்.
அடைந்தவர்கள் நிறைய அருளாளர்கள் உள்ளார்கள்.

ஞானதேகம் அடைந்தவர்கள் எவரும் இல்லை.

வள்ளலார் மட்டுமே சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்றவர்..ஃ

நெற்றிக் கண்ணை முழுமையாக திறந்து அதில் உள்ள முழு (பூரண) அமுதத்தையும் அனுபவித்தவர் வள்ளலார்..

நெற்றிக் கண்ணைத் திறந்தால் ஐந்து வகையான அமுதவகைகள் நிரம்பி இருக்கின்றது.. அவைகள் என்ன என்ன அமுதவகைகள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் சொல்லுவதைப்
பார்க்கலாம் !

ஐந்துவிதமான அமுதமும் பக்குவ ஞானத்தால் நெற்றிக் கண்ணைத் திறந்தால் மட்டுமே கிடைக்கும்.

பக்குவ ஞானம் என்பது ஞானயோக்க் காட்சி என்பதாகும் ..

1 .வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லப்ப் பிரஞ்ஞையால் சுரக்கும் அமுதமாகும்.

2.வது புவனா அமுதம் நாக்கு மத்தியில் பக்குவ கிரியையால்  ஸ்திதி பிரஞ்ஞை உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

3.வது மண்டலா அமுதம் நாக்கினடியில் பக்குவ இச்சை சம்மார உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

4.அது ரகசியா அமுதம் உள் நாக்கினடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் சுரக்கும் அமுதமாகும்.

5.வது மவுனா அமுதம் உண்ணாக்குக்கு மேல்.பக்குவ அனுக்கிரம்.அனுக்கிரகம் உணர்ச்சியால் ...சுரக்கும் அமுதமாகும்.

சுபாவத்தினது அனுபவம் துரியநிலை என்கிறார் வள்ளலார்...

இந்த ஐந்தாவது அமுத்த்தின் சுவையை அனுபவித்தவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் உண்மை நிலைகளை காட்டுவதற்கு சில பயிற்சிகளை வைப்பார் ...அதுதான் சித்தி நிலை அனுபவம்.

ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளங்கக் குலவு மெய்ப் பொருளே !

என்கிறார் வள்ளலார் ...

 அளவில் அடங்காத. எல்லா சித்திகளையும் பெற்ற வள்ளலார் ஒரு சித்துகூட சுயநலத்திற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அனுமதி இல்லாமல்  உபயோகப் படுத்தியது இல்லை...

எனவேதான் வள்ளலார்... ஞானசபைத் தலைவருக்கு நல்ல பிள்ளை நானே ! முதற்பிள்ளை நானே ! செல்லப்பிள்ளை நானே ! என்கின்ற பட்டம் பெற்று  வெற்றி அடைகின்றார்.

எனவே மனிதர்களாகிய நாம் நெற்றிக் கண்ணைத் திறந்து அருளைப்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே எளிமையான உண்மையான பயிற்சியைச் சொல்லிக் கொடுத்துள்ளார்...

ஆதலால் சாதி.சமய.மதங்கள் சொல்லிய கற்பனையான பொய்யான வழிகளில் செல்லாமல்.

உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை ஒழுக்கம் .உண்மை கருணை.உண்மை இரக்கம் கொண்டு ஜீவகாருண்ய பணியை முழுமையாக செய்து..மோட்ச வீட்டின் திறவுகோலைப் பெற்று .நெற்றிக் கண்ணைத் திறந்து உள்ளே செல்வோம்...

அதே நேரத்தில் இயற்கை உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான் என்பதை உணர்ந்து இடைவிடாது அவரிடம் தொடர்பு (சத்விசாரம்) கொண்டால் மட்டுமே.

ஜீவகாருண்யம் சத்விசாரம் என்ற இரண்டு துவாரங்கள் வழியாகத்தான் நெற்றிக் கண்ணைத் திறந்து பூரண அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

வள்ளலார் பாடல் !

கையறவிலாது நடுக் கண்புருவப் பூட்டு..
கண்டு களிகொண்டு திறந்து உண்டு.. நடுநாட்டு ..
ஐயர் மிக உய்யும் வகை யப்பர் விளையாட்டு..
ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு !

சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தம் எனதாச்சு..
தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு..
இச்சமய வாழ்வில் எனக்கு என்ன யேச்சு..
என்பிறப்புத் துன்பம் எல்லாம் இன்றோடே போச்சு...

என்னும் ஆனந்த மேலீடு என்னும் தனிப்  பதிகத்தில் ஆனந்தமாக 11 கன்னிகளில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்...
படித்து உணர்ந்து பயன் பெறுங்கள்...

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

1 கருத்து:

  1. பெருமான் நெற்றிக்கண் என்று எங்கு சொல்லி இருக்கிறார்? அவர் பெற்ற நிலைகளில் எங்குமே நெற்றிக்கண் அனுபவம் என்று சொல்லவே இல்லை யே

    பதிலளிநீக்கு