அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

உண்மை உரைக்கின்றேன் !

வள்ளலார் ஆரம்ப காலத்தில் பக்தியில் அதிதீவிரமாக இருந்து பல தெய்வங்கள் பெயரில் பாடல்கள் இயற்றியும்.வழிபட்டும் வந்தார்..

அந்த தெய்வங்கள் உண்மை அல்ல என்பதை அறிந்து கொண்டு...வேதங்கள் முடிவாக என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ள முதன் முதலில் வேத சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்தார்...

அதிலும் இறைவன் உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் போகவே...ஆறு ஆதாரங்களின் மூலமாக .வேதாந்தம்.சித்தாந்தம்.யோகாந்தம்.போதாந்தம்.கலாந்தம்.நாதாந்தம் என்னும் அந்தங்களின் முடிவை தெரிந்து கொள்ள..ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்று பெயர் வைத்து அருள் பெற முயற்சித்தார்..

வள்ளலாரின் தீவிர முயற்சியை அறிந்து கொண்ட அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
அருளைக் கொடுக்க வழியைக் காட்டினார்...

இராமலிங்கம் உன் உண்மையான முயற்சியை அறிந்து கொண்டேன்..எனவே தயவால் தான் அருளைப் பெறமுடியும்.கருணையினால் அருளைப் பெற முடியும் .அன்பால் தான் அருளைப் பெறமுடியும்..இந்த அன்பு தயவு கருணைப்பெற ஜீவகாருண்ய ஒழுக்கம் தேவை என்று ஆணித்தரமாக இறைவன் சொல்லி விட்டார்...

ஆண்டவர் சொல்லியதை சிரமேற்கொண்டு வடலூர் பெருவெளியில் 1867 ஆம் ஆண்டு சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார்..

சத்திய தருமச்சாலை தோற்றுவித்த மறுகணமே வள்ளலாருக்கு அருள் முழுமையாக அதாவது பூரணமாக கிடைக்கப் பெற்றார்...

வள்ளலார் பாடலே சான்று !



என்னும் பாடல் வாயிலாக அருள் கிடத்ததால் அருள்விளக்க மாலை என்னும் பதிகத்தில் பதிவு செய்கிறார்..

அதன்பின்பு அருட்பெருஞ்சோதி ஆண்டவரை கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்..அவர் எங்கு இருந்து இயங்கிக்் கொண்டுள்ளார் என்பதை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் நூற்றுக் கணக்கான பாடல்களிலும்.உரைநடை விண்ணப்பங்களிலும் பதிவு செய்துள்ளார்

 வள்ளலாருக்கு அருள் வழங்கிய பிறகு வள்ளலாரை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இயக்க ஆரம்பித்து விடுகிறார்.

உலக மக்கள் அனைவரும் அருளைப் பெற்றுக்கொள்ள சாதி.சமய.மதம் அற்ற புதிய பாதையை அமைக்கிறார்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கட்டளைபடி சங்கம் சாலை சபை புதியதாக தோற்றுவித்து...1872 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்கிறார் 

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்.

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்..

சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும் ...பெயர் மாற்றம் செய்கின்றார்...

திருஅருட்பா ஆறாம் திருமுறை முழுவதும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் உடம்பிலே அமர்ந்து கொண்டு ..ஆண்டவர் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதியதாகும்..

எனவேதான் நான் உரைக்கும் வார்த்தை யாவும் நாயகன் தன் வார்த்தை என்கிறார்.

வள்ளலார் பாடல். ! 

என்னும் உண்மையை வெளிப்படுத்துகின்றார்.. இதுவரையில் உண்மைச் சொல்லவில்லை இப்போதுதான் உண்மையைச் சொல்லுகிறேன்..ஏன் என்றால் 
இறைவன் என்னுள் இருந்து சொல்லுகின்றார் ஆதலால் உண்மையைச் சொல்லுகின்றேன் என்கின்றார்.

வள்ளலார் பாடல். ! 



இறைவன் வருகின்ற தருணம் ! எதற்காக வருகின்றார் எனக்கு மரணம. இல்லாப் பெருவாழ்வு அளிக்க வருகின்றார்..நீங்களும்  பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை..என்கின்றார்..

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்  என்று வாயே பறையாக அறிவிக்கின்றார். 

வள்ளலார் சொல்லிய உண்மையை அறிந்து.தெரிந்து புரிந்து கொள்ளாமல்.சாதி.சமய மத்த்தைச் சார்ந்தவர்கள் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்..

அவற்றை இறுதியாக சுத்த சன்மார்க்க கொடி ஏற்றி வைத்து  பேருபதேசத்தில் வெளிப்படுத்துகின்றார்..

இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் 

முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும்.

கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். 

ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தவேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். 

ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், 

பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். 

"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். 

ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் 

கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். 

அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. 

முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.


* இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிகசெயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கேதிருவுளம்பற் றியஞான தேசிகமா மணியேஅயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்றஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.- திருஅருட்பா 4176

மேலே கண்ட பாடலில் வள்ளலார் என்ன சொல்லி உள்ளார் என்பதை ஊன்றி படித்து தெரிந்து கொண்டால் உண்மையான ஆண்டவர் மீது பற்று உண்டாகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மலாபம் பெறுவது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

பல சமய மதங்களை பிடித்துக் கொண்டு வெறியாட்டம் ஆடுவதால் எந்த பயனும் இல்லை.

சமய மதங்களின் கொள்கைகளை ஏன் விடச் சொல்கிறார் வள்ளலார் என்பதை அறிந்து கொள்ளாமல் வீண்வாதம் பேசுவதால் எந்த பயனும் இல்லை...

மனித ஆன்மாவின் குறிக்கோள் அருளைப்பெற்று மரணத்தை வென்று இறைவனோடு கலந்து பேரின்ப லாபத்தை பெற்று.பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதே முடிந்த முடிவாகும்.

அருளைப் பெறுவதற்கு தயவு.அன்பு.கருணை அவசியம் .அன்பு.தயவு.கருணை பெறுவதற்கு தடையாக இருப்பது தான் சாதி.சமய.மதம் போன்ற பிரிவினையான ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் என்பவைகளாகும்...

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்றும் 

மேலும் வருணம் ஆச்சிரம்ம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்றும்..

மேலும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் 

எல்லாமாகிய தனிப்பெரும்் தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம்.

என்று சொல்லி உள்ளார் இதற்கு அர்த்தம் விளக்கம் என்னவென்று தெரியாமல் சாதி சமயம் மத்த்தை பிடித்துக் கொண்டே சன்மார்க்கத்தில் இருந்தால் எப்படி அருள் கிடைக்கும்..

எனவே தான் வள்ளலார் சாதியும் மதமும் சமயமும் பொய் என்று வெளிப்படையாக சொல்லுகின்றார்..

சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார்....

நாம் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ள வள்ளலார் சொல்லிய வண்ணம்.ஜீவகாருண்யமும் சத்விசாரமும் அவசியம் பின்பற்றி கடைபிடிக்க வேண்டும்...

வேறு வழியில் ஆன்மலாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை...

எழுத எழுத பெருகிக் கொண்டே இருக்கும் ...எனவே சுருக்கமாக வள்ளலார் சொல்லி உள்ளதை வெளிப்படுத்தி உள்ளேன் 

நான் எழுதுவது பேசுவது சமய மத பற்று உள்ளவர்களுக்கு வேதனையும் வருத்தமும் உண்டாகின்றது..

வள்ளலார் சொல்லியதை ஆன்மநேய உரிமையுடன் வெளிப்படையாக சொல்லுகிறேன் என்மீது வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை..

படித்து பயன். பெறுங்கள்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக