வடலூருக்கு ஏன் வரவேண்டும் !
மனித குலத்தை வள்ளலார் வடலூருக்கு வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்... ஏன் ?
இந்த உலகத்தையும்.கிரகங்களையும்.அணுக்களையும்.உயிர்களையும்.ஆன்மாக்களையும் படைத்தவர் யார் ? என்பது தெரியாமல் ..நம் பிரச்சினைகள்.துன்பங்கள் தீர்த்து கொள்வதற்கு. கண்ட கண்ட தெய்வங்களை. வணங்கி வழிபாடு செய்துகொண்டு.துன்பங்கள் தீர்க்க முடியாமல் மூடமாய் வாழ்ந்து கொண்டு இருந்தோம்..
படைத்தவனை விட்டு படைக்காதவர்களை தொடர்பு கொண்டால் நன்மை உண்டாகுமா ? துன்பம் தான் அதிகமாகும்...
பொருளைத்தேடும் மனிதர்கள் அருளைத் தேடுவதில்லை...
அருளைப் பெறாதவரை துன்பம் நீங்காது....
**அருளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதி !**
பொருளைத் தேடும் மனிதர்களுக்கும்.அருளைத்தேடும் மனிதர்களுக்கும் அருளைக் கொடுக்கும் கடவுளை கண்டுபிடித்தவர் வள்ளலார்.
உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஒருவர் மட்டுமே என்ற உண்மையை கண்டுபிடித்து உலகம் அறிய வெளிப்படையாகச் சொல்லி பறை சாற்றியவர் வள்ளலார்...
கடவுளை இவ்வுலகிற்கு வரவழைத்தவர் வள்ளலார் ஒருவரே !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து காட்சி கொடுக்கும் இடத்தை தேர்வு செய்து.**வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை 1872.ஆம் ஆண்டு தோற்றுவிக்கிறார்...***
30-01-1874.ஸ்ரீமுக ஆண்டு் தைமாதம் 19 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை ஆட் கொண்டு சுத்த பிரணவ ஞான தேகத்தோடு...
வடலூர் சத்திய ஞானசபையில் அருள் நடனம் புரிகின்றார்...
வள்ளலார் முன் கூட்டியே 25-11- 1872 ஆம் ஆண்டு ஞானசபை விளக்கப் பத்திரிகையில் தெரிவிக்கின்றார்...
இனி உலகில் உள்ள மக்கள் அனைவரும் விரைந்து விரைந்து.இறந்து இறந்து வீண்போகாமல்.உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று.நற் செய்கை உடையராய்..
எல்லாச் சமயங்களுக்கும் .எல்லா மதங்களுக்கும். எல்லா மார்க்கங்களுக்கும் **உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று.பெருஞ் சுகத்தகயும் .பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு.
உண்மைக் கடவுள் !
மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு.சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ...ஓர் ஞானசபையைத் இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து...
***இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமரந்து விளையாடுகின்றோம்***
என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி.அருட்பெருஞ்ஜோதி யராய் வீற்றிருக்கின்றார்...
ஆகலின் .அடியில் குறித்த தருணந் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி.இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்....
எனவே தான் **வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ** என வள்ளலார் உலக மக்களை வடலூருக்கு அழைக்கின்றார்.
வடலூர் சத்திய ஞானசபையில்.ஞான சிங்காதன மேடையில்**அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே** அமர்ந்து நேரடியாக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டுள்ளார்...
இதிலே முக்கியமான நாள் தைப்பூசத் திருநாள் !
மேலே கண்ட உண்மை விளக்கத்தை மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு வடலூருக்கு தாங்கள் வருவதோடு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமாறு அன்புடனும்.ஆன்மநேய உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்...
எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் வடலூரில் உள்ள தருமச்சாலையிலும்.சன்மார்க்க சங்கங்களிலும் .பொது மக்களும் தடைபடாது உணவு வழங்கிக் கொண்டே இருப்பது கண்கொள்ளாக் காட்சி....
வள்ளலார் பாடல் !
எல்லோருக்கும் தைப்பூச நல்வாழ்த்துக்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

- முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
- அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
மேலே கண்ட உண்மை விளக்கத்தை மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு வடலூருக்கு தாங்கள் வருவதோடு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமாறு அன்புடனும்.ஆன்மநேய உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்...
எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் வடலூரில் உள்ள தருமச்சாலையிலும்.சன்மார்க்க சங்கங்களிலும் .பொது மக்களும் தடைபடாது உணவு வழங்கிக் கொண்டே இருப்பது கண்கொள்ளாக் காட்சி....
வள்ளலார் பாடல் !
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந்திடவே !
எல்லோருக்கும் தைப்பூச நல்வாழ்த்துக்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக