அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 10 ஜனவரி, 2019

உருவ வழிபாட்டை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்!

உருவ வழிபாட்டை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம் !

விபரம் தெரியாத குழந்தை களுககு ஆடுமாடு.கோழி.சிங்கம்.காய் கனிகள் போன்ற உருவங்களின் பொம்மைகளை வைத்து அதன் பெயர்களையும்.அதன் தன்மைகளையும் சொல்லித் தருகிறோம்

அதே குழந்தைகள் பெரியவர்கள் ஆன  பிறகு எல்லாம் தெரிந்து கொள்கிறார்கள்

அந்ந குழந்தை களுக்கு அறிவு விளக்கம் வந்தபிறகு இதை எல்லாம் படைத்தது யார் என்று கேட்டால் நாம் என்ன சொல்கிறோம்..

மொம்மைகளைக் காட்டி .அதாவது நாம் படைத்த உருவங்களைக் காட்டி...

பிரம்மா.விஷ்ணு.சங்கரன்.மகேஷ்வரன்.சதாசிவம்.ஏசு.அல்லா.புத்தன்.பராசக்தி.கிருஷணன்.ராமன் என்று பலப்பல.உருவங்களைக் காட்டுகிறோம்.

அதே குழந்தைகள் இது பொம்மை உருவங்கள் . இவைகளால் எப்படி ? உலகத்தையும்  உயிர்களையும் படைக்கமுடியும் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்கள்...

இதுபோல் தான் உலகில் உள்ள எல்லா கடவுள் கொள்கை களும் உள்ளன...

இதைத்தான் வள்ளலார் பாடலிலே பதிவு செய்கிறார்.!

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்

அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக. தெளிவு படுத்துகின்றார்..

தற்போது உள்ள சமய மதம் சார்ந்த தெய்வங்கள் எல்லாம் சிறு குழந்தைகள் விளையாட்டு எனறும் பொம்மை விளையாட்டு என்றும் தெளிவாக விளக்கி உள்ளார்.

வள்ளலார் வந்து தான் உண்மை யான தெய்வத்தை உலகிற்கு அறிமுகம் படுத்துகின்றார்..

அந்த தெய்வம் தான் . நம்மால் படைக்க முடியாத உருவமற்ற அருள் நிறைந்த அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளி என்பதாகும்..

அந்த தெய்வம் எங்கு இருந்து கொண்டு செயல் படுகின்றது என்பதை விளக்கத்தோடு வெளிப்படுத்துகின்றார்.

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்

நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்

கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்

காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்

செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!

மேலே கண்ட பாடல்களில் மிகவும் அழுத்தமாக சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் என்பதை அறிவால் அறிந்து கொண்டால் .

வேறு தெய்வங்களை வணங்கவோ.வழிபாடு செய்யவோ எண்ணம் வருமா ? 

இதுவரையில் சிறுபிள்ளை கூட்டமாக இருந்தோம்.பொம்மைகளுடன் விளையாடினோம்.

இனிமேல் உண்மை யான தெய்வத்தை தொடர்பு கொண்டு பெறவேண்டியதை பெற்றுக் கொள்வதே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களின் உயர்ந்த நோக்கமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் முழுவதிலும் ஒங்குக!

அன்புடன் ஆன்மநேன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக