அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

கடவுள் கருணை உள்ளவரா ? இல்லையா ?

கடவுள் கருணை உள்ளவரா ?இல்லையா ?

இன்று இந்தியாவில் தீ போல் பரவி வரும் செய்தி.

பெண்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்து.நீதி மன்றத்திற்கு சென்றது.

நீதி மன்றம்... பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பு சரியா ? தவறா ? என்ற விவாவதம் வளர்ந்து சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்து கொண்டு வருகின்றது.

இது ஒருபுறம் இருக்கட்டும்..

கடவுள் என்று போற்றப்படும் எந்த சமய மதக் கடவுளாக இருந்தாலும் .ஆண் பெண் என்று பேதம் பார்ப்பது கடவுளுக்கு சம்மதமா ? என்று அறிவு சார்ந்த பெரியவர்கள் சிந்திக்க வேண்டும்..

அப்படி பேதம் பார்க்கும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா ?

கடவுள் பொதுவானவரா ? இல்லை ஆண்களுக்கு மட்டும் சாதகமானவரா ? பெண்களுக்கு விரோதியா ? அப்படி ஒரு கடவுள் இந்த உலகத்தில் இருந்தால் அந்த கடவுளை. கடவுள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ?

சில மேதாவிகள்... கலாச்சாரம்.பண்பாடு.
பழக்கவழக்கங்கள் உள்ளன அவற்றை மாற்ற முடியாது என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள்...

கலாச்சாரம்.பண்பாடு.
பழக்கவழக்கங்கள்.
யாவும் மனிதனால் படைக்கப்பட்டதா ? கடவுளால் படைக்கப்பட்டதா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்..

உலகில் உள்ள எல்லா ஆலயங்களும்.
மசூதிகளும்.
சர்ச்சுக்களும்.
பிரமீடுகளும்
அதில் வைக்கப்பட்ட .
படைக்கப்பட்ட தெய்வங்கள்.எல்லாமே சுயநலம் உள்ள சமய மதவாதிகளால். கற்பனைகளால் படைக்கப்பட்ட தெய்வங்கள் தான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

இந்து சமயங்கள் மதங்கள்  மட்டும் அல்ல.எல்லா சமயங்களும் மதங்களும் .
அவரவர்கள் தோற்றுவித்த ஆலயங்களுக்கும்.மசூதிகளுக்கும்.சரச்சுகளுக்கும்.பிரமீடுகளுக்களுக்கும்.அவரவர்களுக்கு தகுந்த சுய நலமான சட்ட திட்டங்கள் வகுத்து வைத்துள்ளார்கள்..

உலகத்தை எல்லாம் படைத்த கடவுளுக்கு இந்த சட்ட திட்டம் எல்லாம் பொருந்துமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்...

சாதிக்கு பல கடவுளா ? சமயத்திற்கு பல கடவுளா ? மதத்திற்கு பல கடவுள்களாக இருக்க முடியுமா ? என்று கேட்பவர்களுக்கு.
சாமார்த்தியமாக பதில் சொல்லுவார்கள்..
எல்லாமே கடவுளின் அவதார தோற்றங்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள்...

கடவுள் அவதாரம் எடுக்க மாட்டார்.மனிதர்களை பல அவதாரங்களாக படைப்பவர்.

அதற்கு சகலர்.பிரலயாகலர்.
விஞ்ஞானகலர் என்று பெயர்..

கடவுள் என்பவர் பேதம் அற்றவர் ! ஒரே உருவம் கொண்டவர் !

கடவுள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக ஓங்கி  உயிர்களை இயக்கிக் கொண்டு உள்ளவர் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவு விளக்கம் இல்லாமல்..

கண்ட கண்ட ஆலயங்களைத் தோற்றுவித்து உண்மைக்கு புறம்பான.கற்பனைத் தத்துவங்களை உருவங்களாக வைத்து.வழிபாடு செய்வதும்...அதற்கு தகுந்த ஆச்சார சங்கற்பங்கள. விகற்பங்களை உண்டாக்கி. ஏற்பாடு செய்து.மந்திர தந்திரங்களைச் சொல்லி வணங்குவது.சுய நலவாதிகளின் அறியாமையாகும்..

அதைவிடக் கொடுமை.கடவுள் முன் ஆண்கள் பெண்கள் என்ற பேத்த்தை உறுவாக்குவதும் ஆண் கடவுள்.பெண் கடவுள் என்ற தெய்வத்தைப் படைப்பதும் கேவலமான செயல்களாகும்.

படைத்தவன் இறைவன். பாகுபாடு பார்ப்பானா? பேதம் பார்ப்பானா ? என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்...

கடவுள் அன்பு.தயவு.கருணை.
அருளை வாரி வழங்கும் உயர்ந்த ஆற்றல் படைத்தவர்.எந்த உயிர்களையும் பேதம் பார்க்காமல் படைத்தவர் .அவர் யார் என்ற உண்மை தெரியாமல்.உலகம் முழுவதும் பல தத்துவ கடவுள்களைப் படைத்து வணங்கி வழிபாடு செய்து வந்தனர் வழிபடுகின்றனர். இவைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர் தான் .

இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் என்பவர்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! ஒருவர் தான் என்ற உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார்.

ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல். எல்லோருக்கும் பொதுவான வழிபாட்டு முறையை தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் என்னும் பார்வதிபுரத்தில் தோற்றுவித்துள்ளார்...

அதற்கு ஆலயம்.கோயில்.சர்ச்சு.மசூதி.மிரமீடு போன்று சமய மதங்களின் பெயர் வைக்காமல்.

எல்லா உலக மக்களும் வந்து தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு....

*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை*. என்கின்ற பொதுவான வழிபாட்டு முறையைத் தோற்றுவித்துள்ளார்...

அந்த சபையில் தத்துவ உருவங்களை வைக்காமல் அருட்பெருஞ்ஜோதி யே உண்மைக் கடவுள் என்பதை. இயற்கை விளக்கமாக.ஒளி தான் கடவுள் என்னும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

அங்கே சாதி.சமய.மதங்கள் போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் இல்லாமல். எந்த பேதமும் இல்லாமல்.ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல்.உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லாமல்.கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்ற பொது நோக்கத்தோடு.பொது உணர்வோடு வந்து வழிபடலாம் வணங்கலாம் என்பதை கருத்தில் கொண்டு...

எட்டு திக்கு மக்களும் வந்து வணங்கி வழிபாடு செய்ய...

எண்கோண வடிவமாக சத்திய ஞானசபையை புதிய கோணத்தில் அமைத்துள்ளார் வள்ளலார்....

எல்லா உலகத்திற்கும் ஒரே கடவுள் என்னும் உண்மை அறியாமல் பல தெய்வங்களைப் படைத்து. சாதி.சமயம்.மதங்களின் பெயரால். கடவுளின் பெயரால்....
ஒற்றுமையாக வாழ வேண்டிய  மக்களைத் தனித்தனியாக பிரித்து வைத்து விட்டார்கள் என்பதை பல்லாயிரம் அருட்பாடல்களிலே பதிவு செய்துள்ளார் வள்ளலார்.

அதிலே ஒரு பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

மேலே கண்ட பாடலிலே தெளிவாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவு செய்துள்ளார்.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சகோதர சகோதரிகளே!

கடவுளுக்கு ஆண் பெண் என்ற பேதம் கிடையாது.எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள் என்பதை உண்மை அறிவோடு உணர்ந்து ஒன்றுபட்டு வாழ்வோம்..

கடவுளின் பெயரால் உண்டாகும் சாதி.சமயம்.மதச் சண்டைகள் தான்.மக்களை பிரித்துள்ளன. உலகத்தை அழித்துக் கொண்டு உள்ளன.

அவற்றை வருகின்ற.அறிவு சார்ந்த இளைய சமுதாயம்  வேறோடு பிடிங்கி எறிவோம்.எறிய வேண்டும்...

இதுவே பொது அறிவு சிந்தனையாகும் பொது நோக்கமாகும்...

கடவுள் எங்கு உள்ளலார் என்பதை விளக்கும் பாடல் !

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.!

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல்.பேதம் இல்லாமல்  பாவிக்கிறவன்.நேசிக்கின்றவன்  எவனோ அவன் உள்ளத்தில் இறைவன் கருணை நடம் புரிகின்றார்.அவனை நான் கடவுளாக நேசிக்கிறேன் என்கிறார்.வள்ளலார்...

எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை.
இரக்கம் கொண்டு வாழ்ந்தால்.இறைவன் நமக்கு அருளை வாரி வழங்குவார்..

வள்ளலார் பாடல் !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே

அன்புரு வாம்பர சிவமே.!

மேலே கண்ட பாடல் கடவுளின் தன்மையை விளங்க வைக்கின்றது..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக