வள்ளலாருக்கு பொருத்தமானவர் யார் ?
வள்ளலாருக்கு பொருத்தமானவர் யார் ?..
வள்ளலாருக்கு பொருத்தம் உடையவர்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !
வள்ளலாரே சொல்லுகின்றார்.!
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ..
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ !
என்னும் பாடல் வாயிலாக உலக ஞானிகளுக்கும்.
மக்களுக்கும்.
வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்.
எனவே வள்ளலாருக்கு பொருத்தமானவர் சம்மானவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.என்பதை ஆன்மீகச் சான்றோர்களும்.
சன்மார்க்கிகளும்.உலகமனித குலமும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்..
எனவேதான் உலகியல் ஆன்மீகம் அனைத்தும் பொய்யானது என்று துணிந்து கூறுகின்றார்..
ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை..
வள்ளலாரே சொல்லுகின்றார்...
வள்ளலார் பாடல் !
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!
மேலே கண்ட பாடலில் மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்.
இதுவரையில் கண்டது.கேட்டது.கற்றது.களித்தது.உண்டது.உட் கொண்டது எல்லாமே பொய் என்கிறார்.
பொய்யானக் கற்பனைக் கதைகளை கேட்டும்.பொய்யான தெய்வங்களை வணங்கியும்.
வழிப்பட்டு கொண்டும் மக்கள் வீணாக அலைந்து கொண்டும் அதனால் அழிந்து கொண்டும் உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்...
எனவே இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட.
மெய்நெறியான சுத்த சன்மார்க்க அருள் நெறியை கடைபிடித்து. மெய்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழுங்கள் என்று ஆனமநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்...
நாம் தான் உண்மை உணர்ந்து..வள்ளலார் சொல்லிய வண்ணம்.ஒழுக்கத்தைப் பின்பற்றி நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்..
ஏன. என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளலாருக்கும் மட்டுமே தொடர்பு உண்டு .அதனால் தான்
*எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ ! என்று வள்ளலார் அழுத்தமாக சொல்லுகின்றார்...*
மேலும் வள்ளலார் பாடல் !
நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் -
தேவாநின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்யார்உளர்நீ சற்றே அறை.!
என்னும் பாடலில்
என் போல் நோவாது நோன்பு நோற்றவரும்.சாகாவரம் பெற்றவரும்.இறைவன் பூரண அருளைப் பெற்றவரும்.எந்த உலகிலும் யாரும் இல்லை என்கிறார்...
இதைவிட உண்மை வேறு வேண்டாமே...
வள்ளலரை விட பெரிய ஞானியும் இல்லை..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு கடவுளும் இல்லை என்பதை இந்த உலகம் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் அறிந்து கொள்ளும் காலம் கனிந்து வருகின்றது.எல்லாம். நல்லதே நடக்கும்..இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்..
மேலும் வள்ளலார் பாடல் !
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன்
சுத்தசிவசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் -
என்மார்க்கம்நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!
.
மேலும்....
பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே -
சொன்மார்க்கத்தெல்லா உலகும் இசைந்தனவே
எம்பெருமான்கொல்லா நெறிஅருளைக் கொண்டு.!
உலகில் உள்ள பொய்யான மார்க்கங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து மறைந்து போய் விடும்..
இனி உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் மட்டுமே தழைக்கும்...
இதுதான் இறைவன் கட்டளை.இறைவன் ஆணை..
இதுதான் இறைவனுக்கும் வள்ளலாருக்கும்
கிடைத்த சரியான இணைந்த பொருத்தமாகும்..
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே..
வந்தால் பெறலாம் நல்ல வரமே !
என்னும் பாடல் வாயிலாக அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர் வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு