கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும் !
உண்மையில் கடவுளை நேசித்து அன்பு செலுத்துபவர்களின் அடையாளம்.
அழுத கண்ணீர் மாறுமோ ! ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கின்றார் வள்ளலார்...
இடைவிடாது இறைவன் மேல் அன்பு கொண்டு நேசிப்பவர்களுக்கு.பசி எடுக்காது. இறைவனை காணவேண்டும் என்ற ஏக்கத்தால் எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்களாம்..
வள்ளலார் அப்படித்தான் வாழ்ந்துள்ளார்..
பசித்திருந்தும்.தனித்திருந்தும்.விழித்திருந்தும்.இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு வாழ்ந்துள்ளார்...
வள்ளலார் பாடல் !
புண்படா உடம்பும் புரைபடா மனமும்பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையேகருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையேநம்பினேன் கைவிடேல் எனையே.!
என்று பதிவு செய்துள்ளார்.
புன்படா உடம்பு என்கிறார். என்னை எவரும் தொடமுடியாத உடம்பு .பெண் உறவு கொள்ளாத உடம்பு.நோய் இல்லாத உடம்பு என்பதாகும்..
புரைபடா மனம்...சலனம் இல்லாத மனம்.வெளி உலகில் இச்சை
செல்லாத இறைவனையே தொடர்பு கொள்ளும் ஆழ் மனம் என்பதாகும்.
பொய்படா ஒழுக்கம் என்கிறார் வெளியே பகட்டு ஒழுக்கம் இல்லாமல்.
சிற்சபையில் உள்ள ஆன்மாவையே தொடர்பு கொள்ளும் அக ஒழுக்கம் என்பதாகும்.
இந்த ஒழுக்கத்தை கடைபிடித்து கண்படாது .தூக்கம் என்னும் சோம்பல் கண்களைத் தொடாமல்.இரவும் பகலும் இறைவனையே நினைத்து கொண்டே விழிந்துக் இருப்பது..
கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தேன்..உள்ளத்தில் சலிப்பு இல்லாமல் ஒரே நிலையில் நிறுத்தி உறுதியுடன் இருப்பதாகும்.
உண்பனே எனினும் உடுப்பனேன் எனினும் உலகத்தாரை நம்பாமல்.
எனது உயிரையும் உடம்பையும் கொடுத்து நலமுடன் வாழ வைத்துக்கொண்டு இருக்கும்.. நன்மையே செய்யும் நண்பனாகவும் பன்பு மாறாமல் செயல்படும் இறைவன் மீது நம்பிக்கையோடு.கைவிட மாட்டான் என்ற உணர்வோடு உனையே நம்பினேன். கைவிடேல் எனையே என்று வாழ்ந்தவர் வள்ளலார்....
மேலும் வள்ளலார் பாடல் !
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!
மேலே கண்ட பாடல்படி
இறைவன் மீது நம்பிக்கை வைத்து ..நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து..
அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று போல் எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அழுது கொண்டே இருந்தால் மட்டுமே..
என்றும் அழியாத நல்நிதியாகிய அருளை வழங்கி ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி.மரணத்தை வெல்ல முடியும்....
மரணம் இல்லா பெருவாழ்வு வாழ்வதற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதற்கும் ஏற்ற வழி இதுவேயாகும்.
வள்ளலார் போல் வாழ்வோம்.இறைவன் அருளைப் பெறுவோம்.மரணத்தை வெல்வோம்...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

nanri ayya
பதிலளிநீக்கு