மனித உடம்பு பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்டது !
மனித உடம்பானது .
வாலணு.
திரவ அணு.
குரு அணு.
லகுஅணு.
அணு.
பரமாணு.
விபு அணு...
என்னும் ஏழு வித கலப்பு அணுக்களால் அனந்த வண்ண பேதமாய் படைக்கப்பட்டு உள்ளன.
மேற்படி அணுக்கள்.பல வண்ணங்கள் உடையதால்.அந்த அணுக்கள்.ஆன்மாவின் தன்மைக்கு ஏற்ப பஞ்ச பூத உடம்பு கொடுக்கப் படுகின்றது. உடம்பு இயங்குவதற்கு உயிர் என்னும் உயிர் ஒளியும் கொடுக்கப்படுகிறது...
ஏழு விதமான அணுக்களும் உயிர் ஒளியும். ஆன்மா வாழ்வதற்காக.
இறைவன் ஆணைப்படி மாயையால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு வாடகை வீடாகும்..இதேபோல் எல்லா ஜீவராசிகளுக்கும் உடம்பு கொடுக்கப் படுகின்றது.... இதற்கு காரிய தேகம் என்றும் பஞ்ச பூத தேகம் என்றும் பெயர்..
மனித தேகத்திற்கு மட்டும் காரண காரிய தேகம் கொடுக்கப்பட்டுள்ளன.அதனால் தான் உயர்ந்த அறிவு மனித தேகத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன...
அதனால் தான் நம் உடம்பிற்கு அசுத்த பூத காரிய தேகம் என்றும் பெயர்.
வள்ளலார் அகவல் !
காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி !
உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும்..அதன் காரண காரியத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே சாகாக்கல்வி என்னும் கல்வியைக் கற்றுக் கொள்ள முடியும்..என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார்.
..மனித தேகம் கொடுத்த காரியத்தையும்.அதன் காரணத்தையும் இறைவன் வள்ளலாருக்கு ஒளிவு மறைப்பு இல்லாமல் காட்டி உள்ளார்....
வள்ளலார் பாடல் !
காரண காரியக் கல்விகள் எல்லாம்கற்பித்தென் னுள்ளே கலந்துகொண்டு
என்னைநாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றிநாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய் தீரேஅருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.!
என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்...
ஆன்மாக்களின் காரணத்தை அறிந்து..உடம்பு என்னும் அசுத்த பூத காரிய காரணமான உடம்பை.சுத்த பூதகாரிய உடம்பாக.சுத்தப்படுத்தி.அசுத்தங்களான அணுக்களை.சுத்த பூத காரிய அணுக்களாக மாற்றினால் தான் இறைவன் அருளைப் பெற முடியும்.
ஏன் அருளைப் பெற வேண்டும்?
உலகில் உணவு இரண்டு வகை உள்ளன.ஒன்று பொருள் உணவு..
ஒன்று அருள் உணவு.
பொருள் உணவு கீழ் பிறப்புகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது
உயர்ந்த அறிவாகிய மனிதப்பிறப்பு எடுத்தவர்கள் பொருள் உணவை நிறுத்தி அருள் உணவு பெறும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்...
பொருள் உணவு இந்த உலகத்தில் மாயையால் கொடுக்கப் படுகின்றது...
அருள் உணவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப் படுகின்றது..
வள்ளலார் பாடல் !
அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.!
என்னும் பாடலிலே தெரியப்
படுத்துகின்றார். எனவே மாயையால் கொடுக்கப் படுகின்ற பொருள் உணவை நிறுத்தி.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் கொடுப்படும் அருள் உணவைப் பெறும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்...
அணுக்களால் ஆன அசுத்த பூத காரிய தேகத்தை .சுத்த பூத காரிய தேகமாக்கி.சுத்த பிரணவ தேகமாக்கி.சுத்த ஞான தேகமாக மாற்ற வேண்டும்.இந்த மூன்று தேக மாற்றம் உண்டாக அருள் உணவு தேவை.. அருளைப் பெறும் வழியைத்தான்.
வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கத்தில் கற்றுத் தரப்படுகின்றது...
ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் என்பதே ஆணுக்களின் கூட்டுச் சேர்க்கைதான.என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...அசுத்த பூதகாரிய அணுக்களை சுத்த பூதகாரிய காரண ஓளி அணுக்களாக மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றம் அடைய செய்விப்பதற்காகத்தான் மனிதனுக்கு உயர்ந்த அறிவை இறைவனால் வழங்கப்பட்டுள்ளன.
அருளைப் பெறும் வழியைத் தான்..முதலில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று வள்ளலார் பெயர் வைத்துள்ளார்... அடுத்தது சத்விசாரம் என்று பெயர் வைத்துள்ளார்....
இந்த இரண்டு வழிகள் தவிர வேறு வழிகளில் சென்றால் அருள் கிடைக்காது....
நாம் உண்ணும் உணவால்.விந்தும் .
விந்துவால் உண்டாகும் பேச்சும்.உலகியலின் செயலும். பின் மரணம் போன்ற கீழ்நிலைகள் கிடைக்கும்..
அருளால்...
பரவிந்து.
பரநாதம்.
திக்கிராந்தம்.
அதிக்கிராந்தம்.
சம்மேளனம்.
சுத்தம்.
அதீதம் என்னும் மேல் நிலைகள் தோன்றி.
மரணத்தை வென்று முத்தேக சித்தி என்னும்.ஆன்ம காரண ஒளி தேகம் மாற்றம் கிடைக்கும.
பின் காரண காரிய தேகத்தை மாற்றி..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் நிலையான. கடவுள் நிலை அறிந்து அம்மயமாக இறைவன் மாற்றிக் கொள்வார்..
வள்ளலார் அகவல் வரிகள்!
அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே !
498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே !
499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே !
500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே !
501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே !
502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே !
503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே !
504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே !
505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே !
506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே !
507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே !
508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே !
509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே !
முயற்சி செய்வோம் முடியாத்து ஒன்றும் இல்லை...
என்றும் அழியும் ஊன தேகமே போதுமா ?
என்றும் அழியாத ஒளிதேகம் வேண்டுமா ?
உங்கள் விருப்பம் தான்.
ஊதுகிற சங்கை ஊத வேண்டியது என் கடமை.என் ஆன்மநேய உரிமை
விரித்தால் பெருகிக் கொண்டே இருக்கும்.
.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக