இன்பம் என்றால் என்ன ?
இன்பம் என்றால் என்ன ?
இந்திரியம்.
கரணங்கள் அனுபவிப்பது.சிறிய இன்பம் அதாவது சிற்றின்பம்.
தொடர்ந்து அனுபவிக்க முடியாத இன்பம் சிற்றின்பம்...
உதாரணத்திற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து அனுபவிப்பது சிற்றின்பம்..
பேரின்பம் என்பது !
இந்திரியம்.கரணங்கள்.ஜீவன்.ஆன்மா நான்கும் ஒன்று சேர அனுபவிப்பது பேரின்பம்...
ஆன்மாவும் இறைவனும் சேர்ந்து அனுபவிக்கும் போது இறைவனிடம் இருந்து மட்டுமே அருள் கிடைக்கின்றது.
அந்த அருளை ...ஆன்மாவானது தன்னை சார்ந்துள்ள உயிருக்கும் உடம்பிற்கும் வழங்கி இன்பத்தை பகிர்ந்து கொள்கிறது.
அதனால் உடம்பும் உயிரும் காப்பாற்றப்பட்டு மரணத்தை வெல்லுகின்றது...
உயிருக்கும் உடம்பிற்கும் ஆன்மாவானது அருள் வழங்காது எனத் தெரிந்தால்.இறைவன் அருள் வழங்கி இன்பம் தரமாட்டார்...
வள்ளலார் பாடல் !
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றைஓதி முடியாது
என்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
என்கிறார் வள்ளலார்...
எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி.ஒத்து உரிமையுடன் வாழ்பவர்கள். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்கள் எவரோ அவரைத்தேடித்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அனைத்துக் கொண்டு அருளை வாரி வழங்குவார்.
அருளைப்பெற்று அனுபவிப்பதுதான் பேரின்பமாகும். அவைதான் நிலையான இன்பம் என்பதாகும்..
நாம் ஆணும் பெண்ணும் அனுபவித்து கிடைக்கின்ற இன்பத்தைவிட கோடானுகோடி இன்பம் இறைவனால் கிடைக்கப் பெறுகிறது..
இதைத்தான் வள்ளலார் கீழ் கண்ட பாடலிலே பதிவு செய்கின்றார்.!
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!
என்ற பாடலின் வாயிலாக அழைக்கின்றார்.
நாம் அடைய வேண்டிய இன்பம் என்றும் அழியாத பேரின்பமாகும்..அந்த இன்பத்தை அனுபவிப்பவர்களால்தான் மரணத்தை வெல்ல முடியும்.
அதற்குப்பெயர்தான் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.
நாம் சிற்றின்பத்தை புறம் தள்ளிவிட்டு இறைவன் தொடர்பு கொண்டு பேரின்ப லாபம் பெறலாம் வாரீர் வாரீர் என வள்ளார் அன்புடன் அழைக்கின்றார்..
சிற்றின்பத்தை விடுவோம்.பேரின்பத்தைப் பெறுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு