நெஞ்சு பொறுக்கவில்லை.
இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும் போது.
ஒரு உயிர் மனிதனுக்கு சாதாரணமா கிடைப்பதில்லை.
பலகோடி பிறவிகள் எடுத்து இறுதியாக மனிதப் பிறவி கிடைத்துள்ளது.
உலகத்திலே உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும்.அதுவும் உயர்ந்த அறிவுள்ள பிறவியாகும்.
மனிதப்பிறவியில் சோதனை.வேதனை.வறுமை துன்பம் வரலாம்.நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணம் வரலாம்.
ஆனால் மக்களைப் பாதுகாக்கும்.அரசு மக்களுக்காக பாதுகாக்கப்படும் காவல்துறை. மக்களை நேருக்கு நேர் சுட்டுத் தள்ளும் மனம் மனிதனுக்கு .மனிதநேயம் இல்லாமல் எப்படித் தோன்றியது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கின்றது..
ஒவ்வொருவருடைய உயிரும் விலை மதிப்பு அற்றது.எவ்வளவு விலை கொடுத்தாலும் போன உயிரைத் திரும்ப்ப் பெற முடியுமா ?
எல்லோருக்கும் உயிர் ஓரேத் தன்மை உடையது.அவரவர்களுக்கும் குடும்பம்.மனைவி மக்கள் என வாழ்பவர்கள் தான்.அவர்கள் குடும்பத்தில் இப்படி ஒரு உயிர் துடிதுடிக்க துப்பாக்கியால் சுட்டு மாண்டு போனால் அந்த குடும்பம் எப்படி தவிக்கும் என்பதை சிந்திக்க வேண்டாமா ?
வாடிய பயிரைக் கண்டபோதே வாடிய வள்ளலார் தோன்றிய தமிழ் மண்ணில் .இப்படி ஒரு அசம்பாவிதம் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல்.மனம் நடுங்குகிறது..
உண்ண உணவில்லாமல் உயிர்கள் துன்ப்ப்படுவதையே கண்டே வாடியவர் வள்ளலார்.காரணம்! எல்லாம் உயிர்களும் நம் சகோதர உரிமை உள்ளது என்பதை உணர்ந்தவர் வள்ளலார்.
உயர்ந்த அறிவுள்ள மனிதர்களுக்கு இந்த உயிர் நேயம் இல்லாமல் போனது ஏன் ?
எல்லாம் சுயநலம் .எல்லாம் சுயநலம் இல்லாமல் பொது நலம் வரவேண்டும்.பொது நலம் இல்லாமல் மனிதன் வாழ்கின்ற வரையில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் முடியாது.நிறுத்தவும் முடியாது...
அரசும்.. அதிகாரிகளும் பொது நோக்கத்தோடு சுயநலம் இல்லாமல் செயல்பட வேண்டுமாய் சன்மார்க்க சங்கங்களின் சார்பாக பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்...
மக்களை காப்பாற்ற வேண்டியது அரசும் அதிகாரிகளின் கடமையாகும்.இனிமேலாவது புரிந்து கொண்டு செயல்படுங்கள்..
கடமையில் இருந்து தவறுபவர்கள் நம்மைப் படைத்த இறைவனிடம் மறைமுகமாய் தண்டிக்கப் படுவார்கள்.அடுத்தப்பிறவி மனிதப் பிறவி கிடைக்காமல் சண்டாளப்பிறவிகள் கிடைத்து நினைத்துப் பார்க்க முடியாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்...
வள்ளலார் பாடல் !
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக