வள்ளல்பெருமான் வாய் மொழி !
ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி இருந்தாலும்.
அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்.
மிரட்டிச் சொல்லுவேன்.
தெண்டன் விழுந்து சொல்லுவேன்.
அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்.
அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த வித்த்திலாவது நல்வழிக்கு வரச்செய்து விடுவேன்...
நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும் என்று ஆணை யிடுகின்றார்...
ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்கின்றார்..
அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் அல்ல.உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜெனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன் என்கிறார்.
ஏன் அப்படி ஆண்டவர் இடத்தில் விண்ணபித்துக் கொண்டேன் .
எல்லவரும் சகோதர்ர்கள் ஆதலாலும்.இயற்கை உண்மை ஏகதேசங்கள் ஆதலாலும் .நான் அங்கனம் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை வைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்று தெளிவுபட பேருபதேசத்தில் தெரிவித்துள்ளார்...
ஆன்மநேயம் என்றால் என்ன என்பது தெரியாமல்.மனித நேயம் என்றால் என்ன என்பது புரிந்து கொள்ளாமல் ..
சன்மார்க்கிகள் அவரவர்கள் சுய நலத்திற்காக.நடந்து கொள்வதை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்..
சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் துலங்கிக் கொண்டு வரும் இக்காலத்தில் .
சன்மார்க்கிகள் மிகவும் கவனத்தோடும்.ஜாக்கிரதையாகவும்.
நல் ஒழுக்கம் தடைபடாத வண்ணம்.ஜீவகாருண்யம் தழைத்து ஓங்க செயல்பட வேண்டுமாய் அனைவரையும். பணிவன்போடு தாழ்வணங்கி கேட்டுக் கொள்கிறேன்....
இதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வாய்மொழி வாக்காகும்....
மன்னிக்கும் குணம் மாந்தர்க்கு அவசியம்...அதுவும் சன்மார்க்கிகளுக்கு மிக மிக அவசியம்...
யாரும் யாரையும் திருத்திவிட முடியாது.
திருந்துவதற்கு வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கலாம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நினைத்தால் அரைக் கணத்தில் திருத்திவிடுவார்..
வள்ளலார் பாடல் !
எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துறுவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்துவே !
என்னும் பாடல் வரிகளைப் படித்தால் மட்டும் போதாது..அந்த வரிகளில் உள்ள கருத்தை உள் வாங்கி அதன்படி பின்பற்றி வாழ்வதே சுத்த சன்மார்க்கிகளின் முக்கிய லட்சியமாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக