கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் !
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளலார் .
விசும்புல் துளிகள் விழின் அல்லால் பசும்பில் தலை இப்பாரினில் காணுமோ !
என்றார் திருவள்ளுவர் .
என்றார் திருவள்ளுவர் .
இந்த இரண்டு பெரும் அருளாளர்கள் வாழ்ந்த நாட்டில் தண்ணீருக்காக அலைகின்றோம்.// இயற்கையின் கருணையால் மழை பெய்தும் தண்ணீர் இருந்தும் மக்களுக்கும் ..உயிரைக் காக்கும் வேளாண்மைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொடுக்காமல் மக்களைப் போராட வைத்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.
யார் ? அந்த துரோகிகள் !
நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் மத்திய அரசும் .மாநில அரசுகளும் மனித நேயம் இல்லாமல் .ஆன்ம நேயம் இல்லாமல் அரசியல் நடத்திக் கொண்டு உள்ளார்கள்.
இவர்களுக்கு அறிவு விளக்கத்தையும்.கருணையும் உயிர்களின் மேல் இரக்கத்தையும் இறைவன் தான் வழங்க வேண்டும்.
உயிர்களின் துன்பத்தைப் போக்காமல் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமாறு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை வேண்டிக் கொள்கிறோம் .
வள்ளலார் பாடல் !
வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம்
வாடினேன்
வாடினேன்
பசியினால் இளைத்தே வீடு தோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர்
நீடிய பிணியால் வருந்துகின்றோர்
என் நேருறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் !
என்று வள்ளலார் வேதனையோடு உயிர் இரக்கத்தோடு அருட் பாடல்களால் மக்களுக்கு பதிவு செய்கின்றார் ..
மேலும் நடுநிலை இல்லாத ஆட்சியாளர்களை கண்டித்து பதிவு செய்கின்றார் ..
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடார் தமையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்களால் கிளத்தாப்
படுநிலை அவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எல்லாம் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !
நண்ணிடார் தமையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்களால் கிளத்தாப்
படுநிலை அவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எல்லாம் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !
நடுநிலை இல்லாமல் ஆட்சி அதிகாரங்கள் செய்யும் ஆட்சியாளர்களைக் கண்டு பயந்தனன் என்கின்றார் .இவர்களால் இன்னும் எத்தனை கோடி உயிர்கள் பாதிக்கப் போகின்றதோ என்று நினைந்து நடுங்கினேன் என்கின்றார் ..
இறுதியாக துன்மார்க்க ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு சாபமே தருகின்றார்
வள்ளலார் !
வள்ளலார் !
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து !
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து !
கருணை இல்லாமல் ஆட்சி செய்யும் ஆட்சி அழிந்து ஒழிய வேண்டும் ..மக்களுக்கு துன்பம் தொலைந்து நன்மை செய்யும் அருளாளர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்று சாபம் இடுகின்றார் ..
வள்ளலாரின் அருளாட்சி வரும் காலம் நெருங்கிக் கொண்டு உள்ளது. மக்களின் நலனுக்காகவும் .மற்ற எல்லா உயிர்களுக்காகவும் இறைவனை வேண்டி எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக