உயிரின் முக்கியம்.!
உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் .
உயிரைக் கொடுக்க கூடிய ஆற்றலும்.வல்லபமும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.என்னும் உண்மையை நாம் தெரிந்து கொண்டால் உண்மை தானே விளங்கும்..
அந்த உயிர்களை தோற்றுவித்தல்.
விளக்கம் செய்வித்தல்.
துரிசு நீக்குவித்தல்.
பக்குவம் வருவித்தல்.
பலன் வருவித்தல்.
போன்ற ஐந்தொழில் செய்கையும் தன்னைத்தானே செய்ல்படுவதற்கு உண்டான அருளையும் வழங்கிக் கொண்டு இருப்பதால்... எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும் பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ! ஆண்டவரே என்கிறார்..வள்ளலார்.
அவர் ஓர் உண்மையை வள்ளலார் இடம் வெளிப்படுத்து கின்றார்.
நான் படைத்த உயிர்களை எவருக்கும் கொலை செய்யவோ ! அழிக்கவோ ! அதன் மாமிசத்தை ( புலால் ) உண்ணவோ உரிமைக் கிடையாது.உரிமை இல்லை.
எல்லா உயிர் இனங்களும் உயிர் வாழ்வதற்கு நியதி ஆகாரம் என்னும் தாவரங்களைப் படைத்துள்ளேன்.அந்த தாவரங்களில் உள்ள இலைகள்..பூக்கள்..காய் ..கனிகள் மட்டுமே புசிக்க வேண்டும்...அந்த தாவரங்களையும் வேரோடு பிடுங்கி உண்ணக் கூடாது என்று ஒரு சட்டத்தை விதித்துள்ளார்..இதுதான் இயற்கை சட்டம்..
இயற்கை சட்டத்தை கடைபிடிக்காமல்.அவரவர்கள் விருப்பம் போல் .வாயில்லாத ஜீவன்களின் உயிர்களை துடிதுடிக்க கொன்று .அதன் மாமிசத்தை உண்பவர்களுக்கு.தக்க தண்டனை வழங்கப் படும் என்று .இயற்கை சட்டத்தின் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்..
சாதி.சமய.மதங்கள் அதன் உண்மை தெரியாமல் சிறு தெய்வங்களைப் படைத்து.தெய்வங்கள் பெயரால்.ஆடு.மாடு.பன்றி.கோழி.போன்ற உயிர்களை பலிக்கொடுத்து அதன் மாமிசத்தை உண்கிறார்கள்..அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று அவர்களுக்கேத் தெரியாது..
வள்ளலார் பாடல் !
நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.!
என்கிறார் ..உயிர்களை கொலை வாங்கும் சிறிய தெய்வங்களுக்கு பலப்பல பெயர்களை வைத்து வழிபடுகின்றனர். இந்த தெய்வங்களைக் கண்ட காலத்தில் எல்லாம் பயந்து நடுங்கி உள்ளம் வெதும்பி ஓடினேன் என்கிறார் வள்ளலார்.
அதன் பின் தான் உலகில் உள்ள எல்லா சமய மதங்களையும் கடுமையான வார்த்தைகளால் சாடுகின்றார்..
உயிர்க் கொலைகள் செய்யும் எந்த மதமாக இருந்தாலும்.அவை சண்டாள மதங்களே ! அவற்றை தோற்றுவித்தவர்களும் சண்டாளர்களே என்கின்றார் வள்ளலார்..
ஒரு உயிரை உண்டாக்க முடியாமல் இருப்பவர்களுக்கு.அந்த உயிரை அழிக்கவும் உரிமை இல்லை என்பதை அறிவுக் கண் கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும்..
நாம் பெற்ற குழந்தைகளை நாம் அழிக்க உரிமை உண்டா ? என்றால் இல்லை என்கின்றது உலகியல் சட்டம்...
உயிர்களை படைத்த இறைவன் சட்டம் எப்படி இருக்கும் என்பதை.அருள் அறிவால் தான் அறிந்து கொள்ள முடியும்.
கொலை செய்பவன் அதன் புலாலை உண்பவன் எந்த சமயத்தை.மத்த்தை சார்ந்தவனாக இருந்தாலும்..இறைவனை நினைக்கவோ.துதிக்கவோ.வழிபடவோ தகுதி அற்றவன்.என்கின்றார்.வள்ளலார்..
புலால் உண்பவன் எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும்.
அறிவாளியாக இருந்தாலும்.
அறிவியல் விஞ்ஞானியாக இருந்தாலும்.
ஆன்மீக ஞானியாக இருந்தாலும்...
இறந்தவர்களை எழுப்புகின்ற சித்துப் பெற்றவனாக இருந்தாலும்.
அவனுக்கு இறைவனை நினைக்கும் தகுதியே இல்லை என்கின்றார்.
அவர்களுக்கு அருள் என்பது கிடைக்கவே கிடைக்காது என்கின்றார் வள்ளலார்.
உலகில் இரண்டு இனத்தைப் பிரித்தார் !
புலால் உண்பவர்கள்.புலால் உண்ணாதவர்கள் !
புலால் உண்பவர்கள் புற இனத்தவர்கள்...
புலால் உண்ணாதவர்கள் அக இனத்தவர்கள்..
சத்திய ஞானசபை !
வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபையில்.
புற இனத்தவர் என்றால் .புலால் உண்பவர்கள். சத்திய ஞான சபையின் உள்ளே நுழையக் கூடாது..
அக இனத்தவர்கள் என்றால் புலால் உண்ணாதவர்கள் .
அந்த அக இனத்தவர்களே சத்திய ஞான சபையின் உள்ளே செல்லும் தகுதி உடையவர்கள் என்று சத்திய ஞான சபையின் வெளி புறத்தில்.எல்லோருக்கும் தெரியும் வண்ணம் எழுதி வைத்துள்ளார் .
புலால் உண்பவர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது ! என்று எழுதி வைத்துள்ளார்.
வள்ளலார் பாடல் !
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே !.
என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார்...அதே நேரத்தில் புலால் உண்பவராக இருந்தாலும்.பசி என்று வந்து விட்டால் அவர்களுக்கு உணவு வழங்குங்கள். அவர்களுக்கு ஞானத்தை போதிக்காதீர்கள்....ஏன் என்றால் அவர்களுக்கு ஞானத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவு விளக்கம் தோன்றாது.என்பதை தெரியப் படுத்துகின்றார்...
அவர்கள் இனிமேல் புலால் உண்ண மாட்டோம் என்று நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு கடவுளின் உண்மையையும். ஒழுக்க நெறிகளையும் சொல்லிக் கொடுங்கள் என்று சுத்த சன்மார்க்கிகளுக்கு கட்டளை இடுகின்றார்...
எனவே நாம் புலால் உண்பவர்களிடம் வாதம் செய்ய வேண்டாம்.அவர்கள் தேவை இல்லாத கேள்விகள் கேட்கும் போது ஆன்ம நேயம் பாதிக்கும்.அவர்கள் மீது வெறுப்பு உண்டாகும்...
அவர்களே திருந்தி வருவார்கள் அதுவரை பொறுமையாக உங்கள் ஜீவ காருண்ய பணியை .சிரமேற்க் கொண்டு தொண்டு செய்யுங்கள்.... அதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் .நாம் செய்யும் ஜீவகாருண்யம் தான் புலால் உண்பவர்களை திருத்தி நல் வழிக்கு கொண்டு செல்லும்.
நாம் கொடுக்கும் உணவு தான் அருமருந்தாக செயல் பட்டு அவர்களுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை நீக்கி ஆன்ம நெகிழ்ச்சி. ஆன்ம உருக்கம்.அந்த மகிழ்ச்சி.உண்டாகி இரு பக்கமும் நெருக்கத்தை உண்டாக்கும்...
வள்ளலார் பாடல் !
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.
என்னும் பாடலில் கண்டபடி பேதம் இல்லாமல் எவ்வுயிரும் நம் உயிர்போல் எண்ணி ஆன்ம நேயத்தோடு ஜீவ காருண்ய பணியை.தக்க அன்பர்களைக் கொண்டு இடைவிடாது செய்து வரவேண்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக