அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 23 மார்ச், 2018

சிறந்த நாள் எது ?

எது சிறந்த  நாள் !

60 வயது.60 ஆம்  ஆண்டு   திருமண நாள் 80.வயது.100 வயது ஆரோக்கியமாக வாழ்ந்து  கொண்டாடுவது மகிழ்ச்சியாகவும் வழக்கமாகவும் இருந்து வந்த்து .

இப்போது ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள்.திருமண நாள் கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது.

என்ன காரணம் ?

ஒரு வருடம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதே பெரிய வாழ்க்கையாகவும்.ஆச்சரியமாகவும் . கடினமானதாகவும் கருத வேண்டி உள்ளது.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளைக் கழிப்பதே பெரிய சவாலாக. சுமையாக்க் கருதி வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது. அதனாலே.தங்களை அறியாமலே வருடம் வருடம் .பிறந்த நாள்.திருமணநாள் கொண்டாடுவது வழக்கமாகி விட்டது.

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் !

நாம் உட்கொள்ளும் உணவு தான் காரண காரிய மாக உள்ளன.

நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும்.நம் உடம்பிற்குள் செலுத்துவது.உணவு மட்டுமே..உணவு இல்லை என்றால் நம் உடம்பில் உயிர் வாழ்க்கை இல்லை.என்பது எல்லோருக்கும் தெரியும்.

உடம்பிற்குள் இயங்கும் உயிர் நீட்டித்து இயங்க வேண்டுமானால்.நோய் இல்லாமல். மரணம் வராமல் வாழ வேண்டுமானால்.உணவின் தன்மையைப் பொருத்துத்தான் உயிர் இயக்கம் நடை பெற்றுக் கொண்டு உள்ளது.

எனவே தான் உணவே மருந்து.மருத்தே உணவு ! என்பதாகும்.

இயற்கை உணவை விடுத்து செயற்கை உணவை உட் கொள்வதால் வந்த வினைகள் தான்.தீராத நோய் .அச்சம்.பயம்.துன்பம் .மரணம் வருவதற்கு காரணமாக உள்ளது. இந்த உண்மையை மக்கள் எப்போது அறிந்து கொள்கிறார்களோ! அப்போது தான் ஆரோக்கிய மாக நீண்ட காலம் வாழ முடியும்.

இன்றைய நவீன விஞ்ஞான விவசாய  உலகம் உணவின் தயாரிப்பில் விஷக்கிருமிகளின் விஷத்தை கலந்து மனித உயிர்களை சீக்கிரம் கொன்று கொண்டு உள்ளது. இன்றைய அரசியலும். ஆட்சியாளர்களும்.அறிவியலும் .
விஞ்ஞானமும்.அறிவாளிகளும் துன்பத்திற்கு துணையாக செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள்...

இந்த உலகில் உங்களை எவராலும் காப்பாற்ற முடியாது.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் மட்டுமே காப்பாற்ற முடியும்.ஏன் என்றால் எல்லாவற்றையும்   அவர்தான் படைத்தவர்.அவருக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.

இந்த துர்பாக்கிய சூழலில் இருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில்  தள்ளப்பட்டு உள்ளான்..

அதற்கு ஒரே வழி வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையும் அதில் உள்ள ஜீவகாருண்ய ஒழுக்கமும் .உயிரைக் காப்பாற்றும்  இயற்கை உண்மையும்.இயற்கை விளக்கமும்.இயற்கை இன்பமும் என்னவென்று தெரிந்து  கொள்ள வேண்டும்...

வள்ளலார் பாடல் !

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி

ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்

போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்சாற்றிலே கலந்த

சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

என்று நாம் உண்ணும் உணவால் நாம் செய்யும் தவம் எல்லாம் ஆற்றிலே கரைத்த புளிபோல் மறைந்து போய்விடும் என்கின்றார்..

செயற்கை உணவு உட்கொண்டு.நோய்வாய் பட்டு  வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து அழிந்து போவதை விட்டு விட்டு.

 இயற்கை  உணவு என்னும் அருளைப் பெற்று என்றும் அழியாத மரணம் இல்லாப் பெருவாழ்வில் இன்பமுடன் வாழ்ந்திடலாம் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார். ..

பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என்று ஆன்மநேய அன்புடன் அழைக்கின்றார். வள்ளலார்.

மேலும் செயற்கை உணவை உண்டு அழியாதீர் ! என்கிறார்.

 ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி !

என்னும் பாடல் வரிகளில் தெளிவாக விளக்கம்  தந்து அழைக்கிறார்கள்.

உணவு இரண்டு வகை !

ஊர் அமுது...ஆரமுது..

அதாவது புழுக்கின்ற உணவு..புழுக்காத உணவு என இரண்டு வகை உண்டு..புழுக்கின்ற உணவு என்பது மலம் வருவது.புழுக்காத உணவு என்பது மலம் வராத்து..

நாம் தினமும் உண்ணும் உணவு மலம் வருவது.மலம் வரும் உணவு உட்கொள்ளுகின்ற வரை நரை.திரை.பிணி.மூப்பு.பயம் மரணம் கண்டிப்பாக வந்துவிடும்.. எனவே உணவை மாற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார்..

புழுக்காத உணவு !

நாட்டுசர்க்கரை.கற்கண்டு.தேன்.அயச்செந்தூரம்.தாமரைப் பஸ்பம் போன்ற பொருள்களை தினம் தினமும் நாம் அளவு மீறாமல் கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு வரவேண்டும்...மேலே கண்ட பொருட்களால் .மலம் வராது தேகம் நீட்டிக்கும்..இதற்கு புழுக்காத உணவு என்று பெயர்...

நாம் உண்ணும் உணவை குறைத்து புழுக்காத உணவை உட்கொண்டு வரவேண்டும்.. உடம்பு ஏற்றுக் கொள்ளம்படி வந்தவுடன் புழுக்கின்ற உணவை சுத்த மாக நிறுத்திவிட வேண்டும்.இதுவும் ஒரு உபாய மார்க்கம் தான்.

நாம் இடைவிடாது உயிர் இரக்கமும்.இறை சிந்தனையுடன் இருந்தால் .சுத்த உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தால். ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி விடும்..திரைகள் விலகியதும் மூளை மலர்ந்து விரிந்து அதன் மத்தியில் உள்ள ஆன்ம ஒளியில் இருந்து அருள் சுரக்கும்.

அருள் உடம்பு முழுவதும் நிரம்பி வழிய வேண்டும். அந்த அருள் உஷ்ணத்தால் .பஞ்ச பூத அணுக்களை வேதியல் மாற்றம் செய்து ..ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் என்பது வள்ளலார் கண்ட உண்மை..ஒளி உடம்பாக மாற்றினால் மட்டுமே மரணம் என்பது  கிடையாது..

நமக்கு அருள் சுரக்கும் நாளே சிறந்த நாளாகும்..

மரணத்திற்கு அடிப்படை காரண காரியம் நாம் உண்ணும் உணவுதான்..என்பதை அறிந்து கொண்டு உணவை மாற்றுவதே சிறந்த சுத்த சன்மார்க்க  ஒழுக்க நெறியாகும்.

பாடல் !

சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்படுவாரைத் துணிந்து கொல்லக்

கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்றதுண்மையினில் கொண்டு நீவீர்

நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்போலும்அன்றி நினைத்த வாங்கே

பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபாபதிப்புகழைப் பேசு வீரே.!

சோறு போன்ற உணவு உட்கொள்ளும் வரை.காம சேற்றாசை வந்து கொண்டே இருக்கும். எமன் என்னும் கூற்றுவன் வந்து சிரம்ம் இல்லாமல் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்கிறார் வள்ளலார்.

உணவை மாற்றுங்கள் உயிரை இறைவன் அழிக்காமல் பாதுகாப்பாக மாற்றுவான் ....

விரிக்கில் பெருகும்....

நம் வாழ்க்கை  நம் கையில் தான் உள்ளது. முடிவு எடுங்கள் முயற்சி செய்யுங்கள்.நல்லதே நடக்கும்.

பிறந்த நாளும்.என்றும்  இறவாத நாளுமே(மரணம்அடையாதநாள் ) சிறந்த நாளாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக