அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 16 மார்ச், 2018

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முடிவு என்பது சாகாமல் வாழ்வது தான்!..சாகாமல் வாழ்வது என்றால்.இந்த ஊன் தேகத்திலே வாழவது அல்ல..

இந்த தேகத்தை மூன்று விதமாக மாற்ற வேண்டும்.

நம்முடைய மனித தேகம் துர் நாற்றம் உள்ள அசுத்த பூதகாரிய தேகம். இந்த தேகத்தை இந்திரிய ஒழுக்கத்தாலும் .கரண ஒழுக்கத்தாலும் நாற்றம் உள்ள அசுத்தத்தை  நீக்கி சுத்த பூதகாரிய தேகமாக மாற்ற வேண்டும்.

அடுத்து ஜீவ ஒழுக்கத்தால் .சத்த தேகமானது பிரணவ தேகமாக மாற்ற வேண்டும். அடுத்து ஆன்ம ஒழுக்கத்தால் சுத்த தேகத்தையும்.பிரணவ தேகத்தையும் ஞான தேகமாக மாற்ற வேண்டும்.ஞான தேகம் என்பது என்றும் அழியாத .எதனாலும் அழிக்க முடியாத ஞான அருள்  ஒளி தேகம் என்பதாகும்.இந்த தேகம் பெற்றவர்கள் தான் .மரணத்தை வென்றவர்கள் .மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள் என்பதாகும்.அவற்றிற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்று பெயர்.  அவர்களுக்கு இறப்பும் கிடையாது.பிறப்பும் கிடையாது. கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தன்மை உடையதாகும்.

இது சாத்தியமா ? என்று உலகில் உள்ள அறிவாளிகள்.அருளாளர்கள் கேட்கிறார்கள் கிண்டல் செய்கிறார்கள். முடியாது என்று முத்திரை குத்துகிறார்கள். ஏன் என்றால் இதுநாள் வரை எவரும் வள்ளலார் போல் மரணத்தை வென்ற மகான்கள் இல்லை.நீங்கள் கடவுளாக நினைப்பவர்கள்.வணங்குபவர்கள் எல்லோருமே மரணம் வந்து மாண்டு போனவர்களே !.எனவே அவர்களுக்கு மரணத்தை வெல்லும் வழிமுறைகள் தெரிய வாய்ப்பே இல்லை.தெரிந்த சுத்த சன்மார்க்க பெரியோரும் இல்லை ...

வள்ளலார் வந்துதான் இந்த அற்புதமான கடவுள் உண்மையை வெளிப்படுத்துகிறார்.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின்
சட்டம் !

இறைவன் மனிதப் பிறப்பு கொடுத்ததே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கே என்பது தான் உண்மை !

 தன்னை யார் ? என்று அறிந்து நாம் எங்கிருந்து வந்தோம்.ஏன் பல பிறப்புக்கள் எடுத்தோம்.ஏன் மனித பிறப்பு கொடுக்கப்பட்டது..மீண்டும் நாம் சாவதற்கா ? பிறப்பதற்கா? இறந்தால் என்ன பிறப்பு கிடைக்கும்.நாம் இறுதியாக எங்கே செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து அவரிடம் முழுமையான அருளைப் பெற வேண்டும். .அப்படி அருள் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும். இதுதான் இறைவனின் சட்டம்.

இந்த பூத தேகத்தைக் கொண்டும்.சுத்த தேகத்தைக் கொண்டும்.பிரணவ தேகத்தைக் கொண்டும் இறைவனை பார்க்கவும் முடியாது.இறைவனிடம் செல்லவும் முடியாது..ஞான தேகம் பெற்றால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியும்....எல்லா வற்றுக்கும் அருள்தான் முக்கியம்.

நமக்குத்தான் உண்மையானக் கடவுள் யார் என்பதே தெரியாதே ! உண்மைக்குப் புறம்பான பொய்யான.ஜடமான தத்துவங்களையும்.மரணம் அடைந்த. பொய்யான ஆன்மீகப் பெரியவர்களையும் கடவுளாக நினைத்து வணங்கி வழிபாடு செய்து வருகின்றோம்..எப்படி அருள் கிடைக்கும்.எப்படி மரணத்தை வெல்ல முடியும்..அருள் கொடுக்கும் கடவுளைத் தொடர்பு கொண்டால் தானே அருள் கிடைக்கும்...

வள்ளலார் சொல்லுகின்றார்.!

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி

நோவது இன்று புதியது அன்று என்றும் உள்ளதால் இந்த நோவை நீக்கி

ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே

ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே ?

மேலே கண்ட பாடலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து. உயர்ந்த அறிவான மனிதப்பிறப்பு கொடுத்தவரையில் பிறப்பதும் இறப்பதும் போன்ற பாவச்செயல்கள் தான் நடந்து கொண்டு உள்ளது.இது புதியது அல்ல.என்றும் உள்ளதால் இந்த தீராத பாவப்பட்ட நோயை நீக்க வல்ல .ஒரே கடவுள் நீ தான் வேறு எந்த கடவுளாலும் நீக்க முடியாது என்பதை நான் அறிந்தேன் .

அந்த உண்மையான கடவுளைத்தான் வள்ளலார் உலகிற்கு தெரியப் படுத்துகின்றார்

வள்ளலார் பாடல் !

உயிர் எலாம் ஒரு நீ திரு நடம் புரியும்
ஒரு திரும்ப பொது என அறிந்தேன்

செயிரெலாந் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்து எல்லாம் வல்லது ஒன்று அறிந்தேன்

மயிரெலாம் புளகித் உளம் எலாம் கனிந்து மலர்ந்தன்ன் சுத்த சன்மார்க்கப்

பயிர் எலாம் தழைக்கப் பதிஎலாங் களிக்க பாடுகின்றேன் பொதுப் பாட்டே !

என்னும் பாடலில்.தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார் .

எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டு திரு நடனம் புரியும் பொதுவான கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தான் என்பதை அறிந்து கொண்டேன்.அருட்பெருஞ் ஜோதியின் ஆணைப்படி. உலக உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்தேன் என்கிறார்.

சுத்த சன்மார்க்கத்தை தலைமை ஏற்று நீ தான் நடத்த வேண்டும் என்று ஆண்டவர் வள்ளலாருக்கு  கட்டளை இடுகின்றார்.

பாடல் !

உலகம் எல்லாம் போற்ற ஒளி வடிவனாகி உலக அருள் செய்தான் இசைந்து....திலகன் என

நானே சன்மார்க்கம. நடத்துகின்றேன் நம் பெருமான் தானே எனக்குத் தனித்து...

என்னும் பாடல்வாயிலாக .இப்போது வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி ஆணைப்படி சுத்த பிரணவ ஞான தேகத்தின் வழியாக சுத்த சன்மார்க்கத்தை வழி நடத்திக் கொண்டு இருக்கின்றார்...

நாம் என்ன செய்ய வேண்டும் ?

சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை... அதாவது மரணத்தை வெல்லுவதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ ! அவைகள் யாவையும் தூக்கி எறிந்தால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றும் தகுதி உடைவரகள் ஆவார்கள்..

அவைகள் எவை எவை !

எல்லாம் உடைய அருட்பெருஞ் ஜோதி அற்பதக் கடவுளே !

இது தொடங்கி சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள்.என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரம்ம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும்.எவ்விடத்தும்.எவ்வித்த்தும்.எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம் !

என்று தெளிவாக சொல்லி உள்ளார்..நாம் சாதி.சமய.மதம் போன்ற குப்பைகளை விடாமல் இருக்கின்ற வரை அருள் நிச்சயமாக கிடைக்காது.மரணத்தை வெல்ல முடியாது....அதனால் தான் சாகாதவனே சன்மார்க்கி என்கின்றார்.

சன்மார்க்கிகள் எப்போதும் ஆண்டவரிடத்தில் இடைவிடாத அன்பும்.உயிர்கள்மேல் ஜீவகாருண்யம் என்னும் இரக்கமும் கொண்டால் மட்டுமே சுத்த சன்மார்க்கத்திற்கு மேல்படி செல்ல தகுதி பெற முடியும்.இறைவனிடத்தில் அருள் பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வு !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக