அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 10 மார்ச், 2018

வள்ளலார் சொன்ன வழிப்பாட்டு முறை இரண்டு !

வள்ளலார் சொன்ன வழிபாட்டு முறை இரண்டுதான் !

அதற்கு சாதனம் என்று பெயர் வைத்துள்ளார்.

ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரம் ஒன்று...சத்விசாரம் என்பது ஒன்று ..

இவைத்தவிர வேறு எந்த சமயம் மதங்கள் சித்தர்கள்.ஆன்மீக பெரியோர்கள் சொல்லிய குறுக்கு வழிகளும் வேண்டாம் என்கிறார்.

வள்ளலார் வழியைப் பின்பற்றுபவர்கள் வள்ளலார் சொல்லியதைக் கேட்பதா ? வேறு வழிகளை பின் பற்றுவதா ? தவறான வழியில் செல்பவர்களை சுட்டிக் காட்டினால்.ஈரோடு கதிர்வேல் தந்தை பெரியார் அவர்களைப் போல் பேசுகிறான் என்று சிலபேர் தவறாக நினைக்கிறார்கள்.நான் பெரியார் வழியில் செல்பவன் அல்ல...பெரியாருக்கே வழிகாட்டிய வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்றுபவன்.வள்ளலார் கொள்கையை.மறைப்பில்லாமல் வெளிச்சம் போட்டு காட்டுபவன் பேசுபவன்.எனக்கு யாருடைய உதவியும்.புகழும்  தேவை இல்லை..
எவருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..வள்ளலார் பயம் ஜீரோவாக இருக்க வேண்டும் என்கிறார். தவறு செய்பவன. பயப்படலாம்.தவறு செய்யாதவன் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.என் மடியில் கனம் இல்லை.நான்போகும் பாதையில் பயம் இல்லை...

வள்ளலார் சொன்ன பரோபகாரம் என்பது !

தன்னுடைய தேகத்தாலும்.கரணங்களான மனம்.புத்தி.சித்தம்.அகங்காரம் போன்ற கருவிகளாலும்.இந்திரியங்களான கண்.காது.மூக்கு.வாய்.கை.கால்கள் போன்ற கருவிகளாலும்..தான் சம்பாதிக்கும் பொருள்கள் என்னும் திரவியத்தாலும் ..ஆன்மாக்களுக்கும் அதனால் இயங்கும் உயிர்களுக்கும்.உபகாரம் செய்ய வேண்டியது அவசியம்.

திரவியம் என்னும் பொருள்கள் நேராத பட்சத்தில் திரிகரண சுத்தியாய் அதாவது இந்திரிய கரணங்களை அடக்கி.ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு.எல்லா ஜீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.இதுதான் சுத்த சன்மார்க்க வழிபாடு என்பதாகும்.

இதைத்தான் வள்ளலார் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிறார்..ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்கிறார்.இவற்றை விட்டு விட்டு.ஜட தத்துவமான உருவங்களுக்கு.அபிஷேகம்.ஆராதனை செய்தல்.படையல் வைத்தல் .வலம் வருதல்.அங்க பிரதட்ஷ்ணை செய்தல். போன்ற வழிபாடுகள் செய்வதால் எந்த பயனும் கிடைக்காது என்கிறார்.இவைகள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் என்கிறார்...

எதையும் ஆன்ம நெகிழ்ச்சி மகிழ்ச்சி லாபம் இன்பம்.இரண்டு பக்கமும் அதாவது கொடுப்பவர்களுக்கும்.பெறுபவர்களுக்கும்.
ஆன்ம லாபம்  உண்டாகும்படி செயல்பட வேண்டும்.என்கிறார் வள்ளலார்.இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கிகள்...வள்ளலார் சொல்லியதை பின் பற்றுபவர்கள்.அப்படி பின் பற்றினால் வெற்றி நிச்சயம்.இவைதான் பரோபகாரம் என்பதாகும்...

வள்ளலார் பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றைஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 

என்னும் பாடல் வாயிலாக உயிர் இரக்கத்தையும் ஜீவகாருண்யத்தையும்.பரோபகாரத்தையும் வெளிப்படுத்துகின்றார்..
சத்விசாரம் என்பது !

வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரின்.ஆட்சியும்.அவரால் படைக்கப்பட்ட.அண்டங்கள்.உலகங்கள். ஆன்மாக்கள்.உயிர்கள்.கிரகங்கள்.அணுக்கள் பஞ்ச பூதங்கள்.போன்றவற்றின்.செயல்களையும் புகழையும்.விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்..

மேலும் ஒவ்வொரு ஆன்மாவின் தரத்தையும்.நமது சிறுமையும்.கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து.நமது குறைகளை எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடியில் விண்ணப்பித்து..வள்ளலார் எழுதிவைத்துள்ள விண்ணப்பம்.வேண்டுதல்.முறையீடு போன்ற பாடல்களை.ஜோதியின் முன்னால் அமர்ந்து. சுத்த சித்தத்தோடு மெல்லென பாடி துதி செய்தல் வேண்டும்.இதுதான் சத்விசாரம் என்பதாகும்..

மேலும் விசாரம் என்பது இரண்டு வகை உள்ளது.ஒன்று பரம்.ஒன்று அபரம்.என உள்ளது...இவற்றில் பரம் பரலோக விசாரம்.அபரம் இகலோக விசாரம்.இவற்றில் என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

பரவிசாரம் என்பது அருளை வேண்டி விண்ணப்பம் செய்வது..

அபரம் என்பது பொருளை வேண்டி விண்ணப்பம் செய்வது..

இதைத்தான் திருவள்ளுவர்.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை..பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றார்..

வள்ளலார் தெளிவாகச் சொல்லுகின்றார்.

இந்த இரண்டு விசாரத்தில் இகலோக விசாரம் விசாரம் அல்ல.இகலோக விசாரத்தால் பொருள் கிடைக்கும்.இறுதியில் மரணத்தை உண்டாக்கும்.

சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள். அருளை வேண்டி பரலோக விசாரம் செய்ய வேண்டும் என்கிறார்.அருள் கிடைத்தால் தான் மரணத்தை வெல்ல முடியும்...இதற்குப் பெயர்தான் சத் விசாரம் என்பதாகும்..பரலோக விசாரம் என்பதாகும்.சத்தான அருளைப் பெற்று.என்றும் அழியாத சித்திப் பெற்று என்றும் அழியாத பேரின்ப ஆனந்தம் அடைவதாகும்.

இன்னும் விரிக்கில் பெருகும்...

எனவே வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் .ஆடாமல் அசையாமல்.வேறு ஒன்றை நாடாமல்.பொய் உலகை நம்பாமல் .பரோபகாரம்.சத்விசாரம் என்னும் இரண்டையும். இரட்டை மாட்டு வண்டிபோல் சம்மாக கடைபிடித்தால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்..

வள்ளலார் பாடல் !

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றைநாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்கென்மார்க்க மும்ஒன்றாமே!.

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன்

சுத்தசிவசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் -

என்மார்க்கம்நன்மார்க்கம் என்றேவான் நாட்டார்

புகழ்கின்றார்மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக