காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் !
மனம் எப்போதும் எதையாவது விரும்பிக் கொண்டே இருக்கும்.
மனம் அதிகமாக விரும்புவது மண்ணாசை.பொன்னாசை(பணம்).பெண்ணாசை என்ற மூன்றைத்தான் மனம் எப்போதும் அதிகமாக விரும்பும்..இந்த மூன்று ஆசைகளிலும் முக்கியமானது பெண் ஆசை.
மனம் எதை அதிகமாக நேசிக்கிறதோ அதற்கு அன்பு என்று பெயர்.
அன்பு அதிகமானால் காதல் அரும்புகின்றது.காதல் அதிகமானால் காம்ம் மலர்கின்றது.காம்ம் அதிகமானால் மோகம் விரிகிறது.மோகம் அதிகமானால் விந்து வெளியேறுகிறது.விந்து வெளியேறினால் மனம் இன்பத்தை அனுபவிக்கின்றது.இன்பம் முடிந்தபின் மயக்கம் வந்து விடுகிறது...அதாவது சோர்வு வந்துவிடுகின்றது..
இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக அமைந்து விடுகிறது.இதற்கு சிற்றின்பம் என்று பெயர்.இவை தொடர்ந்து இடைவிடாது நடைபெறுமா என்றால் நடைபெறாது.
வயது முதிர்ந்து.எலும்பும்.நரம்பும்.தசையும்.வீரியம் குறைந்து செயல்பட முடியாமல் போனால்.விந்துவின் சுரப்பும் குறைந்து இறுதியில் நோய்வாய்ப்பட்டு உடல் நடுநடுங்கி இறுதியில் மரணம் வந்து விடுகிறது. இது உலகியல் காதல்.
இதற்கு புறங்காதல் என்று பெயலர்.
மனம் புற ஜீவனை காதலிப்பதாகும்.
இது அசுத்த பூதகாரிய உணவினால் உண்டாகும் சுக்கிலம் (விந்து) என்று பெயர் .விந்து அதிகரித்தால் ஆண் பெண்ணைத் தேடுவான்.பெண் ஆணைத் தேடுவாள் .இதற்கு அன்பு காதல் என்று பெயர். இந்த காதலால் இறுதியில் மரணம் வருகின்றது...
மரணம் வராமல் காதலிக்க வள்ளலார் கற்றுத் தருகிறார்!.
மனம் வெளியே சென்று தனக்கு தெரிந்த பெண்ணை விரும்பி அன்பு செலுத்தி காதல் கொள்கிறது.இதற்கு புறக்காதல் என்று பெயர்.
வள்ளலார் புறத்தே செல்லும் மனத்தை அடக்கி அகத்தே உள்ள ஆன்மாவை காதலிக்க வைக்கிறார்.
மனத்தை அடக்கும் பாடல்!
அடக்கி அகத்தே உள்ள ஆன்மாவை காதலிக்க வைக்கிறார்.அதுதான் வள்ளலாரின் தனித்தனமையாகும்.
வள்ளலார் காதல் கொள்ளும் பாடல்!
காதல் கைம் மிகுந்த்து என்செய்வேன் என்னை நீ கண்டு கொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை யீது என்றாள்
பேதை நான் பிறிதோர் புகலிலேன் செய்த பிழையெலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !
என்னும் பாடலிலே...உலகியலில் உள்ளவர்கள் போல் எந்த ஆடவனையும் பெண்ணையும் என் மகள் விரும்பவில்லை.உன்னையே இடைவிடாமல் காதலிக்கின்றாள்.அவள் காதல் உண்மையான காதல் .உன்னைக் காதலிக்கவே வரம் பெற்று என் மகளை நான் பெற்று இருக்கின்றேன் ..நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி எதாவது அறியாமல் பிழை செய்து இருந்தால் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார்.
ஆன்மாவிடம்.தொடர்பு கொண்டு இடைவிடாது அன்பு.காதல்.காம்ம்.மோகம்.மயக்கம் கொள்கிறார் வள்ளலார். அப்படி இடைவிடாது தொடர் கொள்ளும் போது அங்கே ஆன்மாவில் இருந்து விந்து சுரக்கின்றது அதற்கு பரவிந்து என்று பெயர்.அதற்குத்தான் அருள் என்று பெயர்..அருளைப் பெறும் காதலே உயர்வான காதல். உண்மையான காதல்.
வள்ளலார் பாடல் !
அரங்காதல் செய்தேனை ஆண்டு கொண்டு இங்கே
அருட்பெருஞ்ஜோதியார் ஆடும் அழகர்
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி
உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
புறங்காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே
பொற் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால்
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா !
என்ற பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதல் கொள்கிறார்.
உலக காதல்போல் விட்டுவிட்டு இறங்கி தொடர் கொள்ளும் புறம் காதல் அல்ல.விடாமல் செய்யும் காதல்..எனவே என்னை விட்டு இறங்காது தொடர்பு கொள்ள வேண்டும் என்று.என் கையை விடாமல் பிடித்துக் கொண்டு என்னை இன்பம் அடையச் செய்கின்றார். என்று தெளிவுப் படுத்துகின்றார்...
உறங்காமல் காதல் கொண்டவர் வள்ளலார் ! பாடல் !
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு வொன்றோ நனவின்
எண்ணடங்காப் பெருஞ்ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்
மண் உறங்கும் மலை உறங்கும் மலைகடலும் உறங்கும் மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந் தவம் செய்திலரே !
என்று அனுபவமாலை யில் அனுபவித்து பதிவு செய்கின்றார்... இன்னும் விரிக்கில் பெருகும்...சுருக்கமாக சொல்கின்றேன்.
எனவே நாம் யாரை காதலிக்க வேண்டும் .அழியும் உடம்பைக் காதலிக்காமல் என்றும் அழியாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்தால் என்றும் அழியாத அருளை நம் உடம்பிலே நிரப்புவார்.
அருள் இன்பம் என்பது அளவிடமுடியாத பேரின்பம்.அந்த பேரின்ப வாழ்க்கை தான் பேரின்ப லாபத்தைக் கொடுக்கும்.பேரின்ப பெரும் லாபம் கிடைத்தால் மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்.. அதற்குப் பெயர்தான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.
இந்த காதலைத்தான் வள்ளலார் அனுபவித்து பேரின்ப சித்தி பெரு லாபத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார்.
நாமும் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்து அருள் பெற்று வாழ்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை.....
இதுதான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி என்பதாகும்.
சாகும் காதலை விட்டு சாகாத காதலை கற்று அனுபவிப்பதே மரணம் இல்லாப் பெரு வாழ்வாகும்....
வெளியே செல்லும் மனத்தை அடக்கி சிற்சபையின் கண் செலுத்தி இடைவிடாது தொடர்பு கொண்டு காதலிப்போம்..காதலிப்போமா ?
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே! மனித தேகம் பெற்ற அனைவரையும் உங்களை காதலிக்க கற்றுக் கொடுக்க வேண்டுமாறு தாழ் வணங்கி வேண்டுகிறேன் விண்ணப்பிக்கின்றேன்...
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.!
வள்ளலாரின் காதல் !
மனம் என்பது பேய்பிடித்த குரங்கு போன்றது.அந்த மனம் புறத்தில் சென்று காதலிக்கும் பேய் குரங்கு போன்றது மனத்தைஅடக்கி அகத்தே உள்ள ஆன்மாவை காதலிக்க வைக்கிறார்.அதுதான் வள்ளலாரின் தனித்தனமையாகும்.
வள்ளலார் காதல் கொள்ளும் பாடல்!
காதல் கைம் மிகுந்த்து என்செய்வேன் என்னை நீ கண்டு கொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை யீது என்றாள்
பேதை நான் பிறிதோர் புகலிலேன் செய்த பிழையெலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !
என்னும் பாடலிலே...உலகியலில் உள்ளவர்கள் போல் எந்த ஆடவனையும் பெண்ணையும் என் மகள் விரும்பவில்லை.உன்னையே இடைவிடாமல் காதலிக்கின்றாள்.அவள் காதல் உண்மையான காதல் .உன்னைக் காதலிக்கவே வரம் பெற்று என் மகளை நான் பெற்று இருக்கின்றேன் ..நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி எதாவது அறியாமல் பிழை செய்து இருந்தால் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார்.
ஆன்மாவிடம்.தொடர்பு கொண்டு இடைவிடாது அன்பு.காதல்.காம்ம்.மோகம்.மயக்கம் கொள்கிறார் வள்ளலார். அப்படி இடைவிடாது தொடர் கொள்ளும் போது அங்கே ஆன்மாவில் இருந்து விந்து சுரக்கின்றது அதற்கு பரவிந்து என்று பெயர்.அதற்குத்தான் அருள் என்று பெயர்..அருளைப் பெறும் காதலே உயர்வான காதல். உண்மையான காதல்.
வள்ளலார் பாடல் !
அரங்காதல் செய்தேனை ஆண்டு கொண்டு இங்கே
அருட்பெருஞ்ஜோதியார் ஆடும் அழகர்
உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி
உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
புறங்காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே
பொற் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால்
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா !
என்ற பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதல் கொள்கிறார்.
உலக காதல்போல் விட்டுவிட்டு இறங்கி தொடர் கொள்ளும் புறம் காதல் அல்ல.விடாமல் செய்யும் காதல்..எனவே என்னை விட்டு இறங்காது தொடர்பு கொள்ள வேண்டும் என்று.என் கையை விடாமல் பிடித்துக் கொண்டு என்னை இன்பம் அடையச் செய்கின்றார். என்று தெளிவுப் படுத்துகின்றார்...
உறங்காமல் காதல் கொண்டவர் வள்ளலார் ! பாடல் !
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு வொன்றோ நனவின்
எண்ணடங்காப் பெருஞ்ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு பகல் காணா இன்புறச் செய்கின்றார்
மண் உறங்கும் மலை உறங்கும் மலைகடலும் உறங்கும் மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத்தாயார் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந் தவம் செய்திலரே !
என்று அனுபவமாலை யில் அனுபவித்து பதிவு செய்கின்றார்... இன்னும் விரிக்கில் பெருகும்...சுருக்கமாக சொல்கின்றேன்.
எனவே நாம் யாரை காதலிக்க வேண்டும் .அழியும் உடம்பைக் காதலிக்காமல் என்றும் அழியாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்தால் என்றும் அழியாத அருளை நம் உடம்பிலே நிரப்புவார்.
அருள் இன்பம் என்பது அளவிடமுடியாத பேரின்பம்.அந்த பேரின்ப வாழ்க்கை தான் பேரின்ப லாபத்தைக் கொடுக்கும்.பேரின்ப பெரும் லாபம் கிடைத்தால் மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்.. அதற்குப் பெயர்தான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.
இந்த காதலைத்தான் வள்ளலார் அனுபவித்து பேரின்ப சித்தி பெரு லாபத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளார்.
நாமும் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைக் காதலித்து அருள் பெற்று வாழ்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை.....
இதுதான் வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி என்பதாகும்.
சாகும் காதலை விட்டு சாகாத காதலை கற்று அனுபவிப்பதே மரணம் இல்லாப் பெரு வாழ்வாகும்....
வெளியே செல்லும் மனத்தை அடக்கி சிற்சபையின் கண் செலுத்தி இடைவிடாது தொடர்பு கொண்டு காதலிப்போம்..காதலிப்போமா ?
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே! மனித தேகம் பெற்ற அனைவரையும் உங்களை காதலிக்க கற்றுக் கொடுக்க வேண்டுமாறு தாழ் வணங்கி வேண்டுகிறேன் விண்ணப்பிக்கின்றேன்...
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக