அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 26 ஜனவரி, 2018

நம் உடம்பு ஓர் அருள் மாளிகை !

நம் உடம்பு ஓர் அருள் மாளிகை !

நமது உடம்பு ஒரு தெய்வீக நகரம்.அந்த நகரத்தில் இல்லாத்து எதுவும் இல்லை.

அந்த நகரத்திற்கு அருள் மாளிகை வீடு என்று பெயர்.அந்த வீட்டின் நடுவில்(தலைபாகம்) அழகான மேடை ஒன்று இருக்கிறது.அந்த மேடையின் மேலே ஓர் அழகான மூடிய தாமரை மொக்குப் போன்ற மலர் இருக்கின்றது. அதன் நடுவில் தான் ஆன்ம ஒளி அமர்ந்து கொண்டு .இந்த உடம்பு என்னும் மெய் மாளிகையை இயக்கிக் கொண்டு உள்ளது.

மெய் இருப்பதால் உடம்பிற்கு மெய் என்று பெயர்...

அந்த மலரின் நடுவில் இருக்கும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள உலகில் எத்தனை வேறுபாடுகள்.குழப்பங்களை சமய.மதங்கள் உருவாக்கி உள்ளன.

அந்த சிறிய இடத்தில் தான் ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது தான்மனித இனத்தின் ஆனமீக வாழ்க்கை.

அகத்தில் தேடாமல் புறத்தில் தேடுவது ஆன்மீகம் அல்ல !

அதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டியதே சிறந்த வழியாகும்.சிறந்த அறிவாகும்.

இந்த உலகமோ விசாலமானது.நமது இதயமோ சிறியது.அந்த சிறிய இதயத்தில் உள்ள இடமோ.உலகம் போல விசாலமாக விரியும் தன்மை உடையது.அதாவது தெய்வீகத் தன்மை உடையது.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் நம் சிறிய இதயத்துள்ளே அடங்கி இருக்கிறது.அந்த சிறிய இடத்தில் பூமியும்.தண்ணீரும்.நெருப்பும்.காற்றும்.ஆகாயமும்.

சூரியன்.சந்திரன்.நட்சத்திரங்கள். மற்றும் கிரகங்களும்.இடியும்.மின்னலும்.மழையும்.கோடானுகோடி அணுக்களும்.மற்றும் எல்லாவற்றையும் நம் இதயம் என்ற வீட்டிற்குள்ளே காணலாம்.

மனித உடம்பான அருள் மாளிகையில் அமர்ந்து இருக்கும்.தனித்தலைமைப் பெரும்பதியான ஆனமாவைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும்.வழியைக் காட்டுவது தான்.வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க பெரு நெறியாகும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் குழப்பம் இல்லாமல் பின் பற்றுபவர்கள் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும். ஒளி தேகத்தைப் பெறமுடியும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற முடியும்.உடம்பை அருள் மாளிகையாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்..

வள்ளலார் பாடல் !


என்று உண்மையை எடுத்து சொல்லுகின்றார் வள்ளலார்.

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை.உண்மை நெறியை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக