அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பெரியார் !

பெரியார் !

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்து அவற்றில் உள்ள உணமைகளை தெளிவாக அறிந்து. தந்தை பெரியார் பகுத்தறிவு கொள்கையை பின் பற்றினார் .

வள்ளார் சொல்லியது என்று மக்களிடம் சொன்னால். சமய மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்த பெரியார் தனிக் கொள்கையை உருவாக்கினார்.

கடவுள் மறுப்புக் கொள்கை பெண் விடுதலை.சமூக சீர்திருத்தம்.ஏற்றத்தாழ்வு இல்லாமை..சாதி ஒழிப்பு. பிராமணர் ஆதீக்க   ஒழிப்பு.தீண்டாமை ஒழிப்பு.பொது சட்டம் போன்ற சமூக சீர் திருத்தங்களை கொண்டு வந்தார்.போராடினார். எல்லாமே வள்ளலார் கொள்கைகள் என்பது எவருக்கும் தெரியாது.

பெரியார் வியந்த்து !

பள்ளிக்கு செல்லாமல் யாரிடத்தும் கல்விக் கற்காமல் திருஅருட்பா என்னும் நூலை இலக்கணம் இலக்கியம் பிழை இல்லாமல் .சொற்குற்றம் பொருள் குற்றம் இல்லாமல் இவ்வளவு அற்புதமான அழகு தமிழில் எளிய நடையில் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவை படித்து பார்த்து அதிர்ந்து போய் வள்ளலாரைப் போற்றி புகழ்ந்து உள்ளார் தந்தை பெரியார்.

தமிழ் நாட்டில் பிறந்து.தமிழ் நாட்டிலே வாழ்ந்து. தமிழ் மொழியில் எழுதிய மாபெரும் ஆற்றல் அறிவு அருள் மிகுந்த தமிழன் ஒருவர் உண்டு என்றால் அவர் வள்ளலார் ஒருவர்  மட்டுமே தான் என்று பாராட்டி உள்ளார்.

பெரியார் வடலூர் சென்றார் !

திருஅருட்பாவை எழுதிய வள்ளலார் தோற்றுவித்துள்ள வடலூர் தெய்வ நிலையங்களை பார்வையிட நண்பர்கள் புடை சூழ வடலூர் சென்றுள்ளார் பெரியார்.

வடலூர் சென்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை பார்வையிட முன் பக்கமாய் சென்று உள்ளார் பெரியார்.

முன் நுழை வாயிலில் "புலால் உண்பவர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது " என்ற வாசகத்தை படித்துப்பார்த்து உள்ளே செல்லாமல் வெளியே நின்று விட்டார்.தன்மானப் பெரியார்.

அவருடன் வந்தவர்கள்... எல்லோருமே உள்ளே போகிறார்கள் நாமும் உள்ளே போகலாம் வாருங்கள் என அழைத்துள்ளார்கள்.

அதற்கு பெரியார் சொன்ன பதில்...

நான் புலால் உண்கிறேன் அதனால் நான் உள்ளே செல்வது தவறான செயலாகும்.அந்த வார்த்தையை மீறும் செயலாகும். அதில் ஏதோ ஒரு உண்மை உள்ளது என்று சொல்லி. சத்திய ஞானசபையின் உள்ளே செல்லாமல் திரும்பிவிட்டார்....

தருமச்சாலை.!

அடுத்து தருமச்சாலைக்கு அன்பர்களுடன் சென்று பார்வை யிடுகிறார். அங்கு சாதி.சமய.மதம் என்ற பேதம் இல்லாமல்.அனைத்து/தர மக்களும் அமர்ந்து உணவு அருந்துவதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் படுகின்றார்.

அடுத்து தருமச்சாலை சுவற்றில் எழுதி உள்ளதை பார்த்து படிக்கின்றார்..

அதில்...ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்...ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்...எழுதி வைத்துள்ளதை பார்த்து .பெரியார் அசந்து போய் விட்டார்.

மேலும் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றியும்.அதில் உள்ள இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்கங்கள் என்ன என்ன என்பதை படித்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் பெரியார்...

தருமச்சாலை தான் வழிபாட்டிற்கு உகந்த இடம் என்றும் ..சாப்பிடுபவர்களே கடவுள்கள் என்றும்.கோயில்களில் தெய்வம் எதுவும் இல்லை என்றும் ஒப்புக் கொண்டார் பெரியார்.

அப்படிச் சொல்லிவிட்டு மகிழ்ச்சி யுடன் தருமச்சாலையை விட்டு வெளியேறினார்..இது நடந்த உண்மை சம்பவம்.

பெரியாருக்கு.. வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறைதான் முழுமையான.பகுத்தறிவுக்கு .உருவ வழிபாட்டை எதிர்த்து போராட வழிகாட்டியது ..என்பது மக்களுக்குத் தெரியாது...

பெரியாரிடம் இருந்த கெட்ட பழக்கம் புலால் உண்பது மட்டுமே..அவர் சொந்த வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை...வள்ளலார் கொள்கையை பெரியார் ஏற்றுக் கொண்டார் என்பது சன்மார்க்கிகளுக்கு பெருமைதான்..

 மனிதர்களால் கடவுளை கற்பிக்க முடியாது என்பதால்.கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும் காட்டு மிராண்டி என்றும் சொல்ல ஆரம்பித்தார்.

வள்ளலார்... பல தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு அறிவு இல்லை.என்கிறார்.பெரியார் முட்டாள் என்கிறார்..இரண்டும் ஒன்றுதான்.

திருஅருட்பாவில் பெரியாருக்கு மிகவும் பிடித்த பாடல்கள் !

மற்றும்.

மேலும்...

என்பன போன்ற நிறைய பகுத்தறிவு கொள்கைக்கு வித்தான  பாடல்கள் பெரியாருக்கு துணையாக அமைந்துள்ளன.

பெரியார் நேசித்த ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே ! என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதே பாணியில் அறிஞர்அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றேன் என்றார்.
எல்லாமே வள்ளலார் கொள்கைதான்.

பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்குவதே கடவுள் வழிபாடு என்பதை உலக மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

1 கருத்து: