அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 18 ஜனவரி, 2018

காதல் செய்யுங்கள் !

காதல் செய்யுங்கள் !

என் இனிய ஆன்மாக்களே் !

ஒவ்வொரு மனிதர்களிடத்தும் எதோ ஒரு வகையில் ஒன்றின் மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.

18.வயதுக்கு மேல் ஆண் பெண் இரு பாலருக்கும்  பொதுவான ஒரே தன்மையான ஈடுபாடு காதல். அதுதான் உண்மையான உணர்ச்சியான வெளிப்பாடு.

அதை வேறு எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.அதுதான் சுக்கிலத்தின் (விந்து) உணர்ச்சி தன்மை வேகம்.

அவரவர் தகுதிக்கு உணர்ச்சிக்கு தக்கவாறு.அண் பெண்ணைத் தேடுவதும்.பெண் ஆணைத்தேடுவதும் எல்லோருக்கும் பொது வானதாகும்.

அந்த வயதில் அந்த உணர்ச்சியை மடை மாற்றம் செய்து வேறு எதாவது ஒன்றில் கவனம் செலுத்தினால் அதில் வெற்றி அடைகிறான்.ஏன் என்றால் அவன் விரும்பியதை செயல் படுத்தும் உணர்ச்சி அதன் மேல் காதல் கொள்கிறது.

இதுதான் ஒவ்வொருவரின் வெற்றிக்கு காரண காரியமாகிறது..

அதே உணர்ச்சியை தன் உள் இருக்கும் ஆன்மாவிடம் தொடர்பு கொண்டு காதலித்தால் ஆன்மீகத்தில் வெற்றிப் பெறுகிறார்கள்..

வெளியில் உள்ள பொருள்கள் மீது காதல் கொண்டால் ஆண்பெண் உறவும்..வசதி வாய்ப்பும் .புகழ்.பணம். பொருளும் பெறலாம்.பின் வயது முதிர்ந்து மரணம் வந்து விடும்.

ஆன்மாவிடம் தொடர்பு கொண்டு காதலித்தால் .அருளும் பொருளும் பெறலாம்.என்றும் இளமையோடு இருக்கலாம் .பின் காதல் முதிர்வால்.பூரண அருள் பெற்று.ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து.மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வில் வாழலாம்.

இதுதான் உலக காதலுக்கும் இறைவனை காதலிப்பதற்கும் உள்ள வேறுபாடாகும். இதற்குப் பெயர் ஆன்மீக்க் காதல்.

இதை விடுத்து கோயில் கோயிலாக .சர்சுக்கள்.மசூதிகள் எல்லாம்  சென்று சுற்றுவதால் எந்த பயனும் இல்லை.

வள்ளலார் இறைவனை எப்படி காதலித்தார் பாருங்கள்.!

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே

இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்

மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது

பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!

உலகில் வள்ளலாரைப்போல் எவரும் என்னை.  காதலிக்க வில்லை.என்கிறார் .அருட்பெருஞ்ஜோதி ஆண்வர் .

இதுதான் உண்மையான காதல் ...மேலும் வள்ளலார் காதல்.

காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ

கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.!

இறைவனைக் காதலிக்கும் காதலே உலகில் உயர்ந்த  காதல்...அழியும் காதல் அல்ல! அழியாத காதலே காதல் !

இறைவனைக்  காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதே புனிதமான அருள் நிறைந்த  இல்லற இனிமையான  பேரின்ப பெரு வாழ்க்கையாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்து: