அன்பு என்றால் என்ன ?
அன்பு என்றால் என்ன ? எல்லா சமயங்களும் மதங்களும்.சித்தர்களும்.யோகிகளும்.ஆன்மீக அருளாளர்கவளும் அன்பைத்தான் அதிகமாக போதிக்கின்றார்கள்.. அன்பே சிவம் என்றும்.! அன்பே கடவுள் என்றும்.! அன்பே இன்ப ஊற்று என்றும்..! அன்புடையார் எல்லாம் உடையார் என்றும் ! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றும்! அன்பு இல்லை என்றால் எதுவும் இல்லை என்றும்! என்றும் பலவாறாக சொல்லி கொண்டு உள்ளார்கள்... அன்பு என்றால் என்ன ?அன்பைப் பெறுவது எப்படி? என்றும்.அன்பைப் பெறும் வழி என்ன? என்பதையும்.தெரிந்து கொண்டால் மட்டுமே இறைவனை நம்மீது அன்பு செலுத்துவார் . இந்த உண்மையை.எந்த மதங்களும்.சமயங்களும் முறையாக சொல்லவில்லை... வள்ளலார் மட்டுமே அன்பை பெறும் வழியையும்.அறிவு பெறும் வழியும்.அருள் பெறும் வழியையும் தெளிவாக விளக்கி உள்ளார்... அன்பு என்பது தானாக வருவதில்லை.வள்ளலார் சொல்லுவதை நன்கு கவனிக்கவும். கடவுள் அருளைப் பெறுவதற்கு ஜீவர்களிடத்தில் ஜீவர்கள் உண்டாகும் பசி.கொலை.பிணி.ஆபத்து.தாகம்.இச்சை.எளிமை.பயம்.இவைகளினால் உண்டாகும்.துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும்.கேட்டபோதும்.அறிந்தபோதும்.ஆன்ம உருக்கம் உண்டாகும் என்று அறிய வேண்டும். அந்த ஆன்ம உருக்கத்தால் அந்த துன்பத்தை போக்க வேண்டும். அதற்கு ஜீவ காருண்யம் காருண்யம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.அருளைப் பெருவதற்கும்.அன்பை பெருவதற்கும்.அறிவு விளக்கம் தேவைப்படுகின்றது.. ஜீவ காருண்யம் விளங்கும் போது .அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகாரசத்தி விளங்கும்.அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.. ஜீவகாருண்யம் மறையும் போது.அறிவும் அன்பும் உடனாக மறையும்.அதனால் உபகாரசத்தி மறையும்.உபகாரசத்திகள் மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்...என்கிறார். எனவே அறிவு விளங்கும் போது உண்மைத் தானாக தோன்றும்..அதுசமயம் அன்பை ஆண்டவர் இடத்தும்.ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தை ஜீவர்களிட்தும் செலுத்த வேண்டும் என்கிறார் வள்ளலார்.. எனவே அன்பை கருணையால் தான் பெறமுடியும்.அன்பு தானாக கிடைக்காது.கருணையால் பெற்ற அன்பை கடவுளிடம் காட்ட வேண்டும்.அதனால் தான் கருணையும் சிவமும் பொருள் எனக்காணும் காட்சியும் பெருக என்றார்...அன்பே சிவம் என்றார்கள்.அன்பை இறைவனிடம் இடைவிடாது செலுத்த வேண்டும். ஞான சரியையில் முதல் பாடலில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.! நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து.நெகிழ்ந்து நெகிழ்ந்து *அன்பே*நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருள்அமுதே நன்நிதியே ஞான நடத்தரசே என் உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகயலீர் மரணம் இல்லாப்பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே ! என்னும் பாடலில்.அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு நிறைந்தால் தான் அழியாத நன் நிதியாகிய அருள் அமுதம் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அருள் அமுதால் உடம்பு முழுவதும் நிறைந்து.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அதுவே மரணம் இல்லாமல் வாழ்ந்திடலாம் கண்டீர் என்கிறார் வள்ளலார்... அகவலில் அன்பைப் பற்றி சொல்லுகின்றார்! என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்றனி யன்பே 739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே 740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால் என்னைவே தித்த என்றனி யன்பே 741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை யன்பே 742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து என்னுளே கனிந்த வென்னுடை யன்பே 743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே என்னுளே நிறைந்த என்றனி யன்பே 744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை யின்புறு வாக்கிய என்னுடை யன்பே 745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா என்னுளங் கலந்த என்றனி யன்பே 746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி என்வசங் கடந்த என்னுடை யன்பே 747. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே என்னுளே பொங்கிய என்றனி யன்பே ! அன்பின் தன்மையை புரிந்து கொண்டு அன்பை இறைவன் மேல் செலுத்தி அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக. அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு