சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?
சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?
வள்ளலார் ஆரம்ப காலத்தில் .சமரச வேத சன்மார்க்கம் என்ற வழியிலும்.அடுத்து ஷடாந்த சமரச சன்மார்க்கம் என்ற வழியிலும் சென்று .கடவுள் உண்மை விளங்குமா? என்று தேடிப் பார்த்தார்.ஒன்றிலுமே கடவுள் உண்மை விளங்கவில்லை.என்பதை அறிவால் அறிந்து கொண்டார்.கடவுளை உண்மையை எப்படித்தான் அறிந்து கொள்ள முடியும் என்பதை சிந்தித்து தன்னைத்தானே தேட ஆரம்பித்தார்...
வள்ளலார் பாடல் !
தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோசிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோமூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோமுன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்லஅமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.!
தேடிய துண்டு நினதுரு வுண்மைதெளிந்திடச் சிறிதுநின் னுடனேஊடிய துண்டு பிறர்தமை அடுத்தேஉரைத்ததும் உவந்ததும் உண்டோஆடிய பாதம் அறியநான் அறியேன்அம்பலத் தரும்பெருஞ் சோதிகூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்கூறவுங் கூசும்என் நாவே.!
என்ற பாடல்கள் வாயிலாக தெரிவிக்கின்றார்.
கருணை ஒன்றினால் தான் கடவுளைக் காண முடியும் என்ற உண்மையை அறிந்து கொள்கின்றார்.கருணைக்கு என்ன வேண்டும் ?ஒருமை வேண்டும்.ஒருமைக்கு என்ன வேண்டும்? ஜீவகாருண்யம் என்னும் தயவு வேண்டும் என்பதை அருள் மூலமாக தெரிந்து கொள்கிறார்.அந்த உண்மையை பேருபதேசத்தில் தெரிவிக்கின்றார்.
மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.
என்னும் வாக்கியத்தால் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்..
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !
என்பது... உலகுக்கு எல்லாம் பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிக்கிறார்..
வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தில்...உண்மைக் கடவுளை அறிந்து.அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமாகும்..இதற்கு எதாவது சமய.மத சாதனங்கள் வேண்டுமா என்றால் .வேண்டாம் என்கின்றார்...
சன்மார்க்க சாதனம்
சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.
சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.
பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*
என்பதே அனைவருடைய பிரார்த்தனை யாகும்.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு.தயவு.கருணை காட்டுவது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்...
,திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!
இதுவே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான வழியாகும்....
தொடரும்..
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு