உண்மையான கடவுள் யார் ?
உண்மையான கடவுள் யார் ?
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து.பஞ்ச பூதங்களை படைத்த காலத்தில் இருந்து. கிரகங்களைப் படைத்த காலத்தில் இருந்து.அணுக் கூட்டங்களைப் படைத்த காலத்தில் இருந்து. ஆன்மாக்களை அனுப்பிய காலத்தில் இருந்து.ஆன்மாக்கள் வாழ்வதறகு உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்து.
உயிர்கள் இயங்குவதற்கு அணுக்களான உடம்பை கட்டிக் கொடுத்த காலத்தில் இருந்து. ஏழு பிறப்புக்கள் கடந்து.இறுதியாக உயர்ந்த பிறப்பாகிய மனத தேகத்தை கட்டிக் கொடுத்து. மனிதனுக்கு உயர்ந்த அறிவைக் கொடுத்து.அறம்.பொருள்.இன்பம் .வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களிலும் முழுமையாக அனுபவித்து பின்பு உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து .
அவரிடம் தொடர்பு கொண்டு முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்று ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகத்தை பெற்று இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை இறைவன் சட்டம்.
இதற்காகவே இறைவன் இவ்வுலகை படைத்துள்ளார்
இறைவன் உண்மையை.அந்த உண்மைக் கடவுளின் அருள் விளையாட்டை உலகில் தோன்றிய எந்த ஞானிகளும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை.அருளைப் பெற்று மரணத்தை வென்று ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகத்தை பெற்று கடவுளிடம் இன்று வரை ஒருவரும் செல்லவில்லை.
வள்ளலார் மட்டுமே அருள் தேகத்தை பெற்றதோடு அல்லாமல் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பதவியையும் பெற்றுள்ளார்.
காரணம் !
வள்ளலார் மட்டுமே உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி யைக் கண்டு சிக்கென பிடித்து கொண்டவர்.அவரிடம் இருந்து அருளை எவ்வாறு பெறுவது என்ற உளவைக் கண்டு கொண்டவர்.
அந்த உளவை ஆன்மநேய உரிமையோடு மக்களுக்குச் சொன்னவர்.சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர்.
வாழ்ந்த வரலாற்றை திருஅருட்பாவில் தெளிவாக எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார்.படித்து பயன் பெறுவது உலக மக்களின் கட்டாயக் கடமையாகும்.
இதுவரையில் நாம் உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல.சாதி்.சமய.மதங்கள் சொல்லிய காட்டிய எழுதி வைத்துள்ள பொய்யான கற்பனைக் கதைகளை.கற்பனை தெய்வங்களை தொடர்பு கொண்டு வீண் காலம் கழித்துக் கொண்டு பொருளையும் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு உள்ளோம்.இனியும் வீண் காலம் கழிக்காமல்.உயிர்கள் மேல் உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மை கருணைக் கொண்டு.உண்மையான ஆண்டவரை உண்மையான தனிப்பெரும்கருணை உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவரை அறிந்து இடைவிடாது அன்பு வைத்து காதல் கொண்டு கண்ணீர் மல்க தொட்பு கொள்ள வேண்டும்
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்புநனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்றுவனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!
வள்ளலார் பாடல்!
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்

3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்

6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்

7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்

9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்

10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். !
மேலே கண்ட பாடல்களில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் யார் என்ற உண்மை விளக்கத்தை தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்து உள்ளார் படித்து பயன் பெறுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

1 கருத்துகள்:
Neengga unmai yaga .. 💯🙌🙏
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு