அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

🌹🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

நாம் இந்த உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு பெற்றுள்ளோம் .

இந்த பிறப்பு எளிதில் கிடைத்தது அல்ல. பல்லாயிரம் யோனி பேதங்கள் சென்று இறுதியாக கிடைத்தப் பிறப்பு இந்த மனித பிறப்பு ...

நாம் இதுவரையில் பிறந்து பிறந்து.இறந்து இறந்து  மறுபிறப்பு எடுத்து எடுத்து வாழ்ந்து வந்தோம்.இப்போது கிடைத்துள்ள இந்த மனித பிறப்பு இறப்பதற்கும் பிறப்பதற்கும் அல்ல.

சொர்க்கம்.வைகுண்டம் கைலாயம்.எமலோகம்.பரலோகம் செல்வதற்கும் அல்ல.

நமக்கு கிடைத்துள்ள இந்த ஜீவ தேகத்தை .ஆன்ம தேகமாக மாற்ற வேண்டும்.ஆன்ம தேகமாக மாற்றக் கூடிய திறமை அறிவு .ஆற்றல் .அருள் அனைத்தும் அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளால் மறைக்கப்பட்டு உள்ளது.திரைகளை நீக்கினால் மட்டுமே ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.

மனித தேகத்தில் உள்ள ஆன்மாவைக் கண்டு. அதனுடன் இடைவிடாது தொடர்பு கொண்டு.நன் நிதியாகிய அருளைப் பெற்று( எடுத்து) பயன் படுத்த தெரியாமல் மரணம் அடைந்து கொண்டே உள்ளோம்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல.நாம் வாழும் தவறான வாழ்க்கையினால் செயற்கையாக மரணம் வருகின்றது....

நமக்கு மரணத்தை வெல்லும் வழியையும் .ஆன்ம தேகம் பெரும் வழியையும்.முன்னாடி வாழ்ந்த அருளாளர்கள் .பெரியோர்கள் முறையாக.சரியாக உண்மையாக யாரும் காட்டவில்லை.சொல்லவில்லை. அவர்களும் தெரிந்து கொள்ளவில்லை.நாமும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் இல்லை.

ஆன்ம தேகம் பெற்று .பின் சுத்ததேகம்.பிரணவதேகம். ஞான தேகம் பெற்று மரணத்தை வென்று.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி. என்றும் அழியாமல் வாழும் பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் நமது அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார்.

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்வதற்கு .""சாகாக்கல்வி"" என்று பெயர் வைத்துள்ளார்.அந்த  சாகாக்கல்வி கற்பதற்கு  ஒழுக்கம் மிகவும் அவசியமாகிறது.

இதுவரையில் நாம் கடைபிடித்து வந்த  உலகியல் புற ஒழுக்கம்.ஒழுக்கம் அல்ல.அக ஒழுக்கம் அவசியம் என்கிறார் .

அதிலே  இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் புற ஒழுக்கமாகும்.அதுதான் அடிப்படையாகும்.இதைத்தான் அனைவரும் முடிந்த அளவு கடைபிடித்து செய்து வருகிறார்கள்.

அதற்கும் மேலே அக ஒழுக்கமான .ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் மிகவும் அவசியமாகும்.

ஜீவகாருண்யத்தால் மட்டுமே .ஜீவன் என்னும் உயிரைக் காப்பாற்ற முடியும்.

ஜீவ காருண்ய ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.உயிரையும் உடம்பையும் காப்பாற்றினால் தான் ஆன்ம ஒழுக்கம் கை கூடும்.ஆன்ம ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அருள் பெற்றால் மட்டுமே ஊன உடம்பு ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

இவை தெரியாமல் மற்றவர்கள் ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் ஏதோ ஒரு சிறு ஒளி அதாவது அற்ப சித்தி  கிடைப்பது போல் தோன்றும்.அதுவே உண்மை என்று நம்பி பல் இளித்து இறுமாந்து கெட்டுப் போய் அழிந்து விடுவீர்கள்.இறுதியில் எல்லோருக்கும் வரும் மரணம் நமக்கும் வந்து விடும்.

வள்ளார் பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே

மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!

மேலும் ஒரு பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கேஉறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ

சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமதுதன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!

என்று தெளிவாக சொல்லி உலகில் உள்ள அனைவரையும் ஆன்ம நேயத்துடன் அழைக்கின்றார்..

நாம் என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே மனித தேகம் கொடுக்கப்பட்டு உள்ளது.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்றி மரணத்தை வென்று என்றும் பேரின்ப பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..🌹🌹🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக