ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !
ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !
சுமார் நாற்பது ஆண்டுகளாக.வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி .மேடைகளிலும்,சன்மார்க்க சங்கங்களிலும்,மற்றும் வெளி நாடுகளிலும் தொடர்ந்து பேசிக் கொண்டே வருகிறேன் .எந்தப் பயனும் இல்லை .
மேலும் பேஸ்புக்,...வாட்ஸ்அப் ,...வலைத் தளங்களுளும் சுத்த சன்மார்க்கத்தைப் பற்றி எந்தக் கலப்படமும் இன்றி வெளியிட்டு வருகிறேன் .
இனி எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்..இனி அமைதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நினைவிலே செல்ல அறிவு விளக்கம் தருகின்றது.....பசித்து இருக்க விரும்புகிறேன்... தனித்து இருக்க விரும்புகிறேன்...விழித்து இருக்க விரும்புகிறேன் .
முக்கியமான சுத்த சன்மார்க்க விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வேன் .
சுத்த சன்மார்க்கம் தெரிந்து கொள்ள விரும்புவோர் .தொலை தொடர்பிலோ .அல்லது நேரிலோ,.தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாதம் மாதம் வடலூர் மாதப் பூசத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கி இருப்பேன்.அது சமயம் நேரில் வந்து ஆர்வம் உள்ளவர்கள் சத் விசாரம் செய்து சுத்த சன்மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். .
மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் சாகாக் கல்வியைப் பற்றி ஈரோடு கதிர்வேல் மேடை மேடையாய் பேசினான் .அவனும் செத்துப் போயிட்டான் என்ற அவச்சொல் எனக்கு வேண்டாம் என நினைக்கிறேன்.
மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய காரியம் அல்ல .அதற்கு என தனித் தகுதி வேண்டும்.அந்த தகுதியை பெற வேண்டுமானால் அதி தீவிர பெரு முயற்ச்சி வேண்டும்...
அந்த தகுதி இப்போது எவரிடமும் இல்லை என்பதே தெளிவாகிறது.இனி வருங்காலம் எப்படி இருக்குமோ அது இறைவன் சித்தம்.அதி தீவிர முயற்ச்சி உடையவர்களுக்கு மட்டுமே இறைவன் கருணைக் காட்டுவார் . அதில் எந்த சந்தேகமும் இல்லை .
ஞான சரியைப் பாடல் !
ஞான சரியைப் பாடல்கள் 28,லும் மிகத் தெளிவாக வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .அதைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்...அதில் இருந்து விலகி வாழ்பவர்களுக்கு எக்காலத்திலும் மரணத்தை வெல்ல வாய்ப்பே இல்லை..இதுதான் உண்மை ..
ஞான சரியையில் உள்ள முதல் பாடலே நம்மை எல்லாம் உருக வைக்கும் பாடலாகும் . .பின் வரும் பாடல்கள் அனைத்தும் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் வழியைக் காட்டுகின்றது.அவற்றைப் பின் பற்றி வாழுங்கள் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும்......அதி தீவிர பெரு முயற்ச்சி அவசியம் வேண்டும் .
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் நிச்சயம் கிடைக்கும்...
1. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.
7904493699.....தொடர்பு கொல்லவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு