கவியரசு வைரமுத்து அவர்கள் !
அன்புடன் எழுதுவது ...
நல்ல அற்புதமான மனிதர் .நல்ல கவிநலம் கொண்டவர் ,தமிழ் மேல் அளவில்லாத பற்றுக் கொண்டவர்.நிறைய நூல்களைப் படித்துள்ளார் .நிறைய கவிதைகள் ,கட்டுரைகள் ,புத்தகங்கள் எழுதியவர்.நிறைய சினிமாப் பாடல்கள் எழுதி தேசிய விருதுகள் வாங்கியவர்.அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
நேற்று கோவையில் தினமணி நாள்இதழ் நடத்திய ஒடிசியா கலை அரங்கில் .''வெள்ளை வெளிச்சம்'' என்ற தலைப்பில் வள்ளலாரைப் பற்றிய சிறப்பு பேருரை நிகழ்த்தி உள்ளார் .அவற்றை நினைந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்,
அரங்கு நிறைந்த கூட்டம்,வள்ளலாரைப் பற்றி நிறையக் கருத்துக்களை சொல்லுவார் என்று மக்கள்
எதிர்ப்பார்த்து காத்து இருந்தார்கள்,வள்ளலாரைப் பின்பற்றும் சன்மார்க்கிகள் நிறைந்து இருந்தார்கள்..ஆனால் ஏமாற்றம் அடைத்து உள்ளார்கள் .
எதிர்ப்பார்த்து காத்து இருந்தார்கள்,வள்ளலாரைப் பின்பற்றும் சன்மார்க்கிகள் நிறைந்து இருந்தார்கள்..ஆனால் ஏமாற்றம் அடைத்து உள்ளார்கள் .
காரணம் அவர் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை நன்கு படிக்க வில்லை என்பது தெரியவருகின்றது.எதோ ஓர் அளவிற்கு மேலோட்டமாக படித்து உள்ளார்..இதுவரையில் வள்ளலாரைப் பற்றி சிந்திக்காமல் இப்போது வள்ளலார் பக்கம் வந்து இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.
அவருடைய பேச்சுத் திறமை நேற்று புஸ்வானமாக ஆகிவிட்டது.
வள்ளலாரின் அடிப்படைக் கொள்கையான ஜீவ காருண்ய ஒழுக்கத்தைப் பற்றி பேச தவர விட்டு விட்டார் ...கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .என்ற உண்மையை தெரிவிக்க மறந்து விட்டார்.
அவருடைய மகா மந்திரமான
அருட்பெருஞ்ஜோதி ,
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி ,
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !
என்ற உயர்ந்த தமிழ் மகா மந்திரம் !
என்னும் மகா மந்திரத்தை உச்சரிக்க தவறி விட்டார்கள் ..நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னே அதைப் பற்றி சொல்லி ஆரம்பித்து இருக்க வேண்டும்.மேலும் வள்ளலாரைப் பற்றி முழுதும் தெரிந்த ஒருவரை அழைத்து பேச சொல்லி இருக்க வேண்டும்.
வடலூரில் ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க தருமச்சாலை நிறுவியதை சொல்லத் தவர விட்டார் / வடலூரில் ஒரே கடவுள் என்ற உண்மையை உலக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட,சாதி,சமயம்,மதம் அற்ற ஞான சபையைப் பற்றி சொல்லத் தவரி விட்டார்.
மேலும் உயிர்கொலை செய்யக் கூடாது
புலால் உண்ணலாகாது ! என்பது மிகவும் அழுத்தமான கொள்கையாகும்.அவற்றைப் பற்றி பேசவில்லை.
புலால் உண்ணலாகாது ! என்பது மிகவும் அழுத்தமான கொள்கையாகும்.அவற்றைப் பற்றி பேசவில்லை.
வள்ளலாரின் அடிப்படைக் கொள்கையான சாகாக் கல்வி என்னும் மரணம் இல்லாமல்,மனிதன் வாழ முடியும் என்ற மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசாமல் விட்டு விட்டார்.இன்னும் நிறைய அவருடைய கொள்கைகள் உள்ளன .
அவர்மேல் குற்றம் சொல்லவில்லை .தமிழ் நாட்டில் பிறந்து ,தமிழ் நாட்டில் வாழ்ந்து,உலக மக்கள் அனைவரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உண்மையை , உலகமே அறியாத ஒழுக்க நெறிகளை அறிவியல் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அருள் அறிவால் வெளிப்படுத்தி வாழ்ந்தும் காட்டி உள்ளார் .
இன்று உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்கத்தை சார்ந்த மக்கள் வள்ளலாரைப் தெரிந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளார்கள் .
கவியரசு வைரமுத்து அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தவர் .பாரதியார் பெரியார் ,திருவள்ளுவரைப் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்கு ,வள்ளலார் பற்றி த் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம்.இனிமேலாவது தெரிந்து கொள்வார் என நினைக்கின்றேன் .
இருந்தாலும் பரவாயில்லை.இனிமேலாவது அவர் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை நன்கு படித்து அதில் உள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.அடுத்து வள்ளலார் பிறந்து வாழ்ந்த மருதூர்,கருங்குழி ,வடலூர் அவர் சித்திப் பெற்ற மேட்டுக் குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகை,
சென்னையில் அவர் வாழ்ந்த இடம் ,பொன்னேரியில் வட்டத்தில் உள்ள சின்னகாவனம், ,வள்ளலாரின் தாயார் பிறந்து வாழ்ந்த இல்லமான ஞான சபை ,தருமச்சாலை, போன்ற தெய்வ நிலையங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும்.
உங்களைப் போன்ற அறிவு ஆற்றல் உள்ளவர்கள் வள்ளலாரைப் பற்றி முழு உண்மைகளையும் படித்து தெரிந்து கொண்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.உங்கள் பேச்சு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.
உங்களின் இறுதி கால வாழ்க்கையை வள்ளலார் கொள்கைகளில் ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
வள்ளலார் கொள்கைகள் உயர்ந்த ஆன்மீக பகுத்தறிவுக் கொள்கை ! ஆன்மீக புரட்சியாளர் ! என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளலார் அழைக்கின்றார் !
கணம் உடையோம் கட்டு உடையோம் என்று நினைத்து இங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்று வருஞ் செய்தி அறியீரோ
செத்த உமது இனத்தாரை சிறிதும் நினையிறோ
செத்த உமது இனத்தாரை சிறிதும் நினையிறோ
தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
மகன் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற்கு என்றே தனிதந்தை வருதருணம் இதுவே !
வழங்குதற்கு என்றே தனிதந்தை வருதருணம் இதுவே !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக