தமிழ் வாழ்க !
தமிழ் வாழ்க !
தமிழுக்கு மட்டுமே
செந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் .....என்றும் உலகுக்கு எல்லாம் தந்தை மொழி என்றெல்லாம் போற்றப்படும் மொழி தமிழ் மொழி யாகும் !
தமிழ் மொழி இயற்கை தொன்மை வாய்ந்தது .இயற்கையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழில்தான் நிறைய உள்ளன.இறைவனை தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழின் ஓசையில்தான் இறைவன் குடி இருக்கின்றான்.தமிழ் மொழி என்றும் குன்றாத மொழி .
தமிழில் தான் உயிர் எழுத்து ,உயிர் மெய் எழுத்து ,ஆயுத எழுத்து என்ற இலக்கணம்,இலக்கியம்,சொற்பொருள் நிறைந்த மொழியாகும்.,தன்மை,முன்னிலை,படர்கை என்னும்.தன்னைப் பற்றியும்,தனக்கு அருகில் உள்ளவர்களைப் பற்றியும்.உலகில் உள்ள அனைத்தும் பற்றியும். உலகை காட்டும் மொழியாகும்.மனித நாகரிகம் முதன் முதலில் தமிழில் தான் தோன்றியது.
மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை முறையைக் காட்டியது தமிழ் மொழியாகும்.
இறவா மொழி என்றும் ,இறைவன் மொழி என்றும் வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்கின்றார் .தமிழி மொழி கற்கும் தமிழில் நாட்டில் பிறந்தமைக்கு இறைவனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றார் .தமிழில் தமிழ் கற்கும் தலைமுறையினர் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
உலகில் பல்லாயிரம் மொழிகள் உள்ளன.எல்லா மொழிகளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணாமல் போய்விடும்.தமிழ்மொழி இறைவன் போல் என்றும் நிலைத்து நிற்கும்.
உலக மொழிகளுக்கும் எல்லாம் தலைசிறந்த தந்தை மொழி என்கின்றார் வள்ளலார்.
தமிழைக் கற்போம்.தமிழை போற்றுவோம்.தமிழில் வாழ்வோம்.தமிழில் இறைவன் அருளைப் பெறுவோம்.
உண்மையான புத்தாண்டு தமிழ் புத்தாண்டுதான்.என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வோம். உலகில் உள்ள ஆன்மநேய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு