அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 19 ஏப்ரல், 2017

வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் ! பாகம் 2,


வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் ! பாகம் 2,

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் !

1,கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதியர் !

2,சிறு தெய்வ வழிபாடு கூடாது !

3,தெய்வங்கள் பேரால் உயிர்பலி செய்யக் கூடாது !

4,புலால் உண்ணலாகாது !

5,சாதி, சமயம்  மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது !

6,எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடை பிடிக்க வேண்டும்.

7,ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய  ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோல் !

8,வேதங்களும் ,  புராணங்களும்,இதிகாசங்களும்,சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாது.!

9,இறந்தவரைப் புதைக்க வேண்டும் ,எரிக்கக் கூடாது !

10,கருமாதி,திதி ,முதலிய சடங்குகள் வேண்டாம்,!

11,கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம் ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் !

12,சாகாக் கல்வியை கற்பதே சன்மார்க்கம் ! சாகாதவனே சன்மார்க்கி !

13,எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

மேலே கண்ட சுத்த சன்மார்க்கக்  கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் தான்,சாகாக் கல்வி கற்க தகுதி உடையவர்கள், இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும். ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற முடியும்.  பேரின்ப லாபத்தைப் பெற முடியும். சுத்த,பிரணவ ,ஞான தேகத்தைப் பெற முடியும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆக முடியும்.

மேலே கண்ட கொள்கைகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் உணவு வழங்குவது மட்டுமே  கடைபிடித்தால் மரணத்தை வெல்ல முடியாது.

 ஜீவ காருண்யத்தில் அபர ஜீவ காருண்யம் என்றும் ..பர ஜீவ காருண்யம் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றார் .

அபர ஜீவ காருண்யம் என்பது ;-- பசியினால் வரும் துன்பத்தையும், கொலையினால் வரும் துன்பத்தையும் போக்குவது தவிர மற்றவைகளால் வரும் துன்பங்களைப் போக்குவது ,மாற்றுவது அபர ஜீவ ஜீவ காருண்யம் ஆதலால் , இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிது உண்டு பண்ணும் என்றும் .

பர ஜீவ காருண்யம் என்பது  ;--  பசியினால் வரும் துன்பத்தையும்  கொலையினால் வரும் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பர ஜீவ காருண்யம் என்கின்றார் வள்ளலார் . நாம் உணவு மட்டுமே மக்களுக்கு வழங்கிக் கொண்டு உள்ளோம் ..கொலையினால் வரும் துன்பத்தை போக்கிக் கொண்டு உள்ளோமா ? என்பதை சிந்திக்க வேண்டும்.

மேலும் நாம் சம்பாதிக்கும் பணத்தால், பொருளால்,உழைப்பால்  ஜீவ காருண்யம் செய்ய வேண்டும்.

மேலும் வள்ளலார் ;---பசியாலும், கொலையாலும் வரும் துன்பத்தைப் போக்கு கின்றவர்களுக்கு இவ் உலக இன்பங்களையும்,அளவிறந்த முத்தி இன்பங்களையும் ,எக்காலத்தும் அழியாத சித்தி இன்பத்தையும் அருளால் அடையப்படும் என்றும்,

( ஊழ் வகையாலும் அஜாக்கிரதையாலும் ,அன்னிய ஜீவர்களுக்கு நேரிடுகின்ற அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும்,அறிவு மிகுந்தும் ,இருப்பதால் ,அவ்வாறு செய்யாமல் வஞ்சித்த ஜீவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு  மோட்சம் இன்பத்தை அனுபவிக்கின்ற சுதந்திரம் அருளால் அடையப் படுவது இல்லை என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .)

மேலே கண்ட வரிகளை நன்கு கவனிக்க வேண்டும்.அதில் உள்ள உண்மைகளை நன்கு கவனிக்க வேண்டும் .

''தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் ,இழந்து விடுவர் என்றும் ''

கடவுள் வேதத்தில் விதித்து இருக்கின்ற படியால் ,ஊழ் வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி,கொலை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்து  கொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமும் இல்லாத ஜீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத் தக்க அறிவும் சுதந்தரமும் உள்ள ஜீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருன்யத்திற்கு முக்கியமான லட்சியம் என்றும் அதில் சத்தியமாக நம்பிக்கை வைத்துப்

பசித்த ஜீவர்களுக்கும் ஆகாரத்தால் பசி நீக்கியும்,கொலைப்படும் ஜீவர்களுக்குச் செய்வகையால் கொலை நீக்கியும்,திருப்தி இன்பத்தை உண்டு பண்ணுவதே மேலான பிரயோஜனம் என்றும் அறிய வேண்டும் என்கின்றார்.

எனவே நாம் ஜீவ காருண்ய விஷயத்தில் மிகவும் கவனமாக செயலபடவேண்டும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் அபர ஜீவ காருண்யம் என்றும் பர ஜீவ காருண்யம் என்றும்,இருவகையாம்.அவற்றில் பசி நீக்கலும்,கொலை நீக்கலும்,பர ஜீவ காருண்யம் ஆதலால் விஷேசமாகக் குறிக்கப் பட்டது என்று அறிய வேண்டும்.

அடுத்து அருட்பெருஞ்ஜோதியைப் பற்றி பார்ப்போம்.

தொடரும்.;----

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக