வியாழன், 22 டிசம்பர், 2016

நான்கு வகைப் பிறப்பு ! எழு வகைத் தோற்றம்.!

நான்கு வகைப் பிறப்பு ! எழு வகைத் தோற்றம்.!

 இறைவன் அருளால் ஆன்மாக்களை இந்த பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது. ,ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால் .உயிரும் உடம்பும் அவசியம் வேண்டும்.... உயிர் பெறுவதற்கு நான்கு யோனி பேதங்களும் , உடம்பு பெறுவதற்கு ஏழு வகையான உடம்பு பேதங்களும்.கொடுக்கப் படுகின்றன.

நான்கு வகையான  யோனி பேதங்களின்  வழியாகப் உயிர்கள் படைக்கப் படுகின்றது .அவை ஏழு வகையான தோற்றங்களாக உருவம் கொடுக்கப் படுகின்றன .என்பதை வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்து வைத்து உள்ளார்.

நான்கு வகையான யோனி பேதங்கள்.;---

அகவல் வரிகள்;--691,...721..

பாரிடை, வேர்வையில்,பையிடை ,முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி !....என்றும்.

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐ பெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி .! என்றும்

ஒவ்வொரு உயிர்களும் தோன்றும் விதம்;-- ,தாய் கருப்பை , முட்டை,...நிலம் என்னும் மண்ணில்,,வேர் என்னும் தாவரங்களின் ஆணிவேர்  என்னும் பகுதியில் உயிர்கள் உண்டாகின்றன என்று வள்ளலார்  தெளிவுப் படுத்தி பதிவு செய்து வைத்துள்ளார் .....

அகவல் வரிகள் ;--721, முதல் .729, வரை ..

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !...என்றும்

முட்டைவாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை
ஆட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !...என்றும்

நிலம் பெரும் உயிர் வகை நீள் குழு அனைத்தும்
அலம் பெறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !    என்றும்.

வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !

என்றும்  நான்கு வகையான யோனி  வழிகளில் உயிர்களை இறைவன் படைத்து உள்ளார் .அந்த இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரொளியாகும்.

ஏழு வகையான தோற்றங்கள்.;--

ஊர்வன போன்ற உயிர் இனங்கள் ,மண்ணில் உண்டாகின்றன.!
தாவரங்கள் போன்ற உயிர் இனங்கள் அனைத்து படைப்புக்களும்,வேரின் வழியாக உண்டாகின்றன !.
பறவைகள் போன்ற உயிர் இனங்கள் அனைத்தும் முட்டையின் உள்ளே உண்டாகின்றன.!
மிருகம்,தேவர்,நரகர்,மனிதர்கள் போன்ற உயிர் இனங்கள் அனைத்தும்.கருப்பையில் உண்டாகின்றன.!

இந்த நான்கு வகையான உயிர் இனங்கள் அனைத்திற்கும் ,ஊர்வன ,தாவரம்,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர்,மனிதர்கள்,என்ற ஏழு வகையான தோற்றங்கள் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளன,

மேலே கண்ட உயிர்களின் தோற்றத்தின் வகைகள் ,84, என்பத்தி நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் ''ஆன்மா'' என்னும், இயற்கை உண்மை என்னும்  உள் ஒளியான அருள் ஒளி  தங்கித்தான் உயிரையும்,உடம்பையும் எடுத்துக்  வாழ்ந்து கொண்டு வருகின்றன...

வள்ளலார் அகவலில் பதிவு செய்துள்ள வரிகள்.;--691,ல் இருந்து .

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி.!

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல
அசலற வகுத்த அருட்பெருஞ்சோதி !

அறிவொரு வகை முதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ்சோதி !

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற
அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்சோதி.!

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ்சோதி !

என்று உயிர்களின் தோற்றமும்,உடம்பின் கருவிகள் தோற்றமும்.,உயிரையும், உடம்பையும் இயக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியானது,உடம்பின் எந்தப் பகுதியில்,  எங்கு இருந்து இயங்குகின்றன,என்பதைப் பற்றி மிகவும் வள்ளலார் தெளிவாக விளக்கி அகவலில் பதிவு செய்துள்ளார்.

எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும்,பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,இறுதியில் இந்த மனித தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டு உள்ளது.என்பதை ஒவ்வொரு மனித தேகம் எடுத்தவர்களும் அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே, கண்ட பிறப்புக்களில் மிகவும் உயர்ந்த பிறப்பு மனிதப் பிறப்பாகும்.
மனிதப் பிறப்பில் பட்டுமே நான் யார் ? என்ற உண்மையும்,நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற உண்மையும்,நம்மைப் படைத்தவன் யார் ? என்ற உண்மையும்,நம்மை ஏன்? அனுப்ப வேண்டும் என்ற உண்மையும், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதின் உண்மையும்,.மிண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் வழிமுறையின் உண்மையும்.நாம்,மீண்டும்  எங்கு செல்ல வேண்டும் என்ற உண்மையும்,இந்த மனிதப் பிறப்பில்தான் அறிந்து கொள்ள முடியும்,ஆதலால் தான் மனிதப் பிறப்பு எல்லாப் பிறப்புகளிலும்,மிகவும் உயர்ந்த  அறிவுள்ள  பிறப்பு என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் ..

மேலே கண்ட உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்....வேறு எந்த வழிகளில் சென்றாலும் தெரிந்து கொள்ள முடியாது என்பதை மிகவும் அன்புடன் ஆன்மநேய உரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சிந்திப்பும்.--

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு  கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு