வியாழன், 1 டிசம்பர், 2016

எழுவகைப் பிறப்பு !

எழுவகைப் பிறப்பு

இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. இத்தேகத்திற்கும் ஏழு பிறவி யுண்டு. யாதெனில்:- கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று, அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று, பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று, குழந்தைப் பருவம் ஒன்று, பாலப்பருவம் ஒன்று, குமாரப்பருவம் ஒன்று, விருத்தப்பருவம் ஒன்று ஆகப் பிறவி 7. இவ்வாறே தாவர முதலியவற்றிற்கு முள. மேலும், ஸ்தூலப் பிறப்பு 7, சூட்சுமப் பிறப்பு 7, காரணப்பிறப்பு 7. ஆதலால், மேற்குறித்த ஸ்தூலப்பிறப்பு, சூட்சுமப் பிறப்பு யாதெனில்: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி - ஆக பிறப்பு 7. காரணப்பிறப்பு - மனோ சங்கற்பங்களெல்லாம் பிறவி. ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு. அது அற்றால் பிறவியில்லை. எப்படி அறுமெனில்: பரோபகாரம் சத்விசாரம் - இவ்விரண்டாலும் மேற்குறித்தது நீக்கிச் சிவானுபவம் பெறலாம்.

நாம் வாழும் இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்பது தெரியாது .

இந்த பிறப்பு கடைசி பிறப்பாக இருந்தால் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்தால் தப்பிக்கலாம் இல்லை என்றால் ் ,மீண்டும் மனித தேகம் எடுக்க பல லட்சம் ஆண்டுகள் ஆகும் ,

எனவே மனித தேகம் எடுத்தவர்களை நம்மவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் ,அதுவே முக்கியமான ஜீவ காருண்யம் ,

 அதனால் தான் வள்ளலார் சொல்லுவார் .எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களை நம்மவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு