அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 9 நவம்பர், 2016

உயிரா ? ஆன்மா ?

உயிரா ? ஆன்மாவா ?

 இதில் எதைக் காப்பாற்ற வேண்டும் ,பாதுகாக்க வேண்டும் .

உயிரைக் காப்பாற்ற வேண்டும் . தன்னுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பிற உயிர்களை காப்பாற்ற வேண்டும் .

பிற உயிர்களுக்கு பொருளைக கொடுத்தும் கருணைக்  காட்டியும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் ..அப்படிக் காப்பாற்றும் போது அந்த உயிர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் .

அந்த மகிழ்ச்சி ஆன்ம  நெகிழ்ச்சியாக மாற்றம் அடைந்து ,கருணைக் காட்டியவரின் ஆன்மாவில் சென்று பதிவாகும் .அந்தப் பதிவு மோதி மோதி,அவருடைய ஆன்மாவில்  சுத்த உஷ்ணத்தை உண்டாக்கும்

அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் விலகும் .திரைவிலகினால் தான் ஆன்மாவில் இருக்கும் அருள் சுரக்கும் .அந்த அருள் ஐந்து வகையாக உள்ளது . ஐந்தாவது அமுதமான இனிப்பு உள்ள மணிக் கட்டியாக இருக்கும் .அதற்கு ரகசியா அமுதம் என்று பெயர் .மெளனா அமுதம் என்றும் பெயர் .

அந்த ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்களாகும் . அவர்களின் உடம்பும் உயிரும் அருள் ஒளியாக மாற்றம் அடைந்து ,ஆன்ம தேகமாக ஒளிரும் .அதற்கு அருள் தேகம் என்று பெயர் .பொன் உடம்பும் என்றும் பெயர் .

இதைத்தான் வள்ளலார் .பொன் உடம்பு எனக்கே பொருந்திடும் பொருட்டாய் என்னுளம் கலந்து என் தனி அன்பே என்று அகவலில் தகவலாக வெளிப் படுத்தி உள்ளார் .

மேலும் :- உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே !

என்கிறார் வள்ளலார் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்று மக்களுக்கு தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

எனவே உடம்பையும் உயிரையும் அழிக்காமல் காப்பாற்றுவதே சாகாக் கல்வியாகும் . அதனால் வெற்றி அடைவதே மரணம் இல்லாத பெருவாழ்வாகும் .அதுவே என்றும் அழியாத  பேரின்ப பெருவாழ்வாகும் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

1 கருத்து: