- இன்பம் இரண்டு வகைப்படும் !
அவை பொருள் இன்பம் , அருள் இன்பம் . என்பதாகும் . .
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
உலகில் உள்ள இன்பங்களில் மிகவும் முக்கியமானது , ஆண் பெண் உறவுகள் , இதில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை வாழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லை
அந்த இன்பம் இரவில் இருட்டு அறையில் சிறிது நேரம் அனுபவிக்கும் இன்பம் , அந்த இன்பத்தால் இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் அனைத்தும் உணர்ச்சியில் ஒடுங்கிப் போய் விடும் . இதற்கு பொருள் இன்பம் என்று பெயர் .
நாம் உண்ணும் உணவால் உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்து உணர்ச்சியைத் தூண்டி ஆண் பெண் உடல் உறவு கொள்வதால் அதற்கு பொருள் இன்பம் என்று பெயர் .
பொருள் இன்பத்தை அடிக்கடி பயன் படுத்துவதால் , நரை, திரை,பிணி, மூப்பு , பயம் இறுதியில் மரணம் வந்துவிடுகின்றது .
மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு என்பது உறுதியாகி விடுகிறது ,. இதுதான் உலகியல் வாழ்க்கையின் நியதியாகும் ,
இந்த உலக இன்பத்தில் இருந்து விடுபட்டு அருள் இன்பம்் பெற வேண்டும் ,அந்த அருள் இன்பத்தைப் பற்றி கற்றுக் கொள்வதுதான் சாகாக்கல்வி என்று பெயர் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக