சித்தர்கள் காணா சுத்த சன்மார்க்கம் !
சித்தர்கள் காணா சுத்த சன்மார்க்கம் !
வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம் சித்தர்கள் காணவில்லை .
வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்:--
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர் தாமோ
சிறந்த முனித் தலைவர்களோ செம்பொருள் கண்டாரோ
மூவர்களோ அறுவர்களோ முதற் சத்தி அவளோ
முன்னிய நம் பெருங் கணவர் தம்மியலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்ல வென்றால் யான் உணர்ந்து சொல்ல
அமையுமோ ஒரு சிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடு அன்பர் தொழக் கனகசபை நடிப்பார்
அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறியார் தோழி !
மேலும் அவர்கள் காணாத காட்சி எல்லாம் காண்கின்றேன் என்றும் வள்ளலார் சொல்லுகின்றார் .
காணாத காட்சி எல்லாம் காண்கின்றேன் பொதுவில்
கருணை நடம் புரிகின்ற கணவரை உட் கலந்தேன்
கோணாத மேனிலை மேல் இன்ப அனுபவத்தில்
குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்த்தேன்
நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
மாணாகம் பொன்னாக மாக வரம் பெற்றேன்
வள்ளல் அருள் நோக்கம் அடைந்தேன் கண்டாய் என் தோழி !
எனவே இயற்கை உண்மை அறிந்தவர் கண்டவர் வள்ளலார் . . . இயற்கை விளக்கத்தையும் இயற்கை இன்பத்தையும் அனுபவித்தவர் வள்ளலார் .
எனவே வள்ளலார் கண்ட அனுபவத்தை எல்லா மனித தேகத்தைப் பெற்றவர்களும் கண்டு அனுபவிக்கலாம் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்
இந்த உலகத்தில் மரணத்தை வென்று பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டுமானால் . யாருடைய கொள்கையைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை நாம் தான் அறிவினால் அறிந்து கொள்ள வேண்டும்
நம்முடைய வாழ்க்கையை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .
தொடரும் . . .
ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு