அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 18 அக்டோபர், 2016

உடம்பு, உயிர், ஆன்மா !

உடம்பு, உயிர், ஆன்மா !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

என்  உயிரும் என் உடலும் என் பொருளும் யானே
இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதின் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே
தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெருஞ் சுடரே
மண் உயிருக்கு உயிராகி இன்பமு மே நிறைந்தே
மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மன்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்தரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே !

என்னும் பாடலில் ஒரு பெரிய உண்மையை வள்ளலார் தெரியப் படுத்தி தெளிவு படுத்தி உள்ளார் .

உடம்பு ,உயிர் .பொருள் அனைத்தையும்  இறைவனிடம் ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் ...என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் ''சாகாக் கல்வி'' என்ன என்பதையும் மரணம் இல்லாமல் வாழும் வழியையும் தெரிந்து   விளங்கிக் கொள்ளலாம்.

ஆன்மா வாழ்வதற்கு என்ன தேவை ?

ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து  வாழ்வதற்கு ,உயிர் என்னும் ஜீவன் தேவைப் படுகின்றது உயர்  இயங்குவதறகு ,உடம்பு தேவைப் படுகின்றது உடம்பு இயங்குவதற்கு கருவிகள் என்னும் கண்,மூக்கு,காது ,வாய்,உடல் உறுப்புக்கள் என்னும்  பொருள்கள்  தேவைப்படுகின்றது ! அந்த  ஆன்மா உயிர்,உடம்பு  மூன்றும் இந்த உலகில் வாழ்வதற்கும் ,எவையும் தடையின்றி பெறுவதற்கும், ,அனுபவிப்பதற்கும்  சுதந்திரம் என்னும் முழு உரிமை வழங்கப் படுகின்றது.அதற்கு ஜீவ சுதந்திரம்,தேக சுதந்திரம்,போக சுதந்திரம் என்பதாகும் .

 இந்த உரிமையைக் கொடுப்பதுதான் இந்த பஞ்ச பூத அணுக்கள் .இந்த அணுக்களை இயக்குவதுதான் மாயை ,மாமாயை,பெருமையை என்னும் அதிகாரத்தில் உள்ள நிர்வாகிகளாகும்,அதாவது அதிகாரத் தலைவர்களாகும்  ....இந்த மாயைகள் தான் உடம்பையும் .அவற்றை இயக்கும்  இயங்கும் பொருள்களான கண்,காது,மூக்கு,வாய் உடம்பு என்னும், கருவிகள் அனைத்தையும் பூத அணுக்களைக் கொண்டு பொருத்திக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டு உள்ளவை களாகும் ..அதனால் தான் இந்த உலகம் மாயை உலகம் என்பதாகும்.

ஆன்மா இந்த மாயை உலகிற்கு வந்ததும் ஆன்மாவில் இருந்து உயிர் தோன்றும்,ஆன்மாவும் உயிரும் சேர்ந்து  வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு பின்னப்பட்ட பூத பிரக்கிருதி அணுக்களால் தான் அதாவது அணுக் கருவிகளைக் கொண்டு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட அழகான வீடு என்பது தான் உடம்பு என்பதாகும்....அதற்கு ஜீவ தேகம் என்று பெயராகும்.

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பதிவு செய்துள்ளது ;--

ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாகி இருக்கின்றன என்றும்,அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம்,மறைபடும்,அது மறையில் அருள் விளக்கம் வெளிப்படாது என்றும்,வெளிப்படாத போது மூடம் உண்டாகும் என்றும்,அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகும் என்றும்,அது பற்றி அவசியம் பூத காரிய தேகம் வேண்டும் என்றும்,

பூத காரிய தேகங்களுக்கு மாயை முதற் காரணம் ஆதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களே பசி,கொலை,தாகம்,பிணி,ஆபத்து,பயம்,இன்மை,இச்சை என்பவைகளால் அந்த தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடும் என்றும்,தெளிவாக வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட  வீட்டில் வாழ்வது தான் உயிர் ,ஆன்மா என்பதாகும்...இவை இரண்டும் கணவன் மனைவி போன்றது .கணவன் மனைவி என்ற இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் பிரச்சனை இல்லை .இங்குதான் பிரச்சனை  ஆர்மபமாகின்றது .உயிர் என்னும் ஜீவன் சொல்கின்றது ..இந்த தேகம் எனக்காகவே கட்டிக் கொடுக்கப் பட்டு உள்ளது அதனால்  என்னுடைய விருப்பத்தின் படிதான்  செயல்படவேண்டும்,நான் விரும்பியதை தான் செய்வேன்,அதற்கு நீ துணையாக இருக்க வேண்டும்  என்கின்றது,

அதற்கு  ஆன்மா சொல்லுகின்றது;-- .நான் தான் இறைவன் அனுப்பிய ஆன்மா ,நான் வாழ்வதற்குத் தான் உயிர் உடம்பு கொடுக்கப்பட்டு உள்ளது .எனவே நான் சொல்லியபடிதான் நீ கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றது .

( இதைத்தான் சமயங்கள் மதங்கள் சிவன் இல்லையேல் சத்தி இல்லை .சத்தி இல்லையேல் சிவன் இல்லை என்பார்கள்.) (ஆன்மா சாட்சியாக உள்ளது என்பார்கள்)...(இதைத்தான் வள்ளுவர் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,  அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்கின்றார் )...(ஜீவன் என்னும் உயிர் பொருளை விரும்பும் .ஆன்மா அருளை விரும்பும்.....)

ஆன்மா சொல்லுகின்றது;--- சரி உன்னுடைய விருப்பம் போல் செய்து கொள் என்று ஆன்மா விட்டுக் கொடுத்து விடுகின்றது..அதனால் உயிர் தன்னுடைய விருப்பம் போல் வாழ்ந்து ,பிறந்து பிறந்து இறந்து இறந்து ,தேகம் எடுத்துக் கொண்டே இருக்கின்றது ..ஆன்மா சாட்சியாக பார்த்துக் கொண்டே உள்ளது .இறுதியாக உயிர் என்னும் ஜீவன் இவ்வுலகில் வாழ்வதற்கு சலிப்பு உண்டாகி வருத்தம் அடைந்து தான் செய்த தவற்றை உணர்ந்து  ஆன்மாவிடம் சரண் அடைகின்றது ..சரண் அடைந்து விட்டபடியால் உயிரைக் காப்பாற்ற வேண்டும்,உயிரைத் தன் வசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருணைக் கொண்டு  ''ஆன்மா'' சில கட்டளைகளை உயிருக்கு சொல்லிக் கொடுக்கின்றது .

அந்த கட்டளை எதுவென்றால்;--  ஜீவ காருண்யம் ..சத் விசாரம் என்னும் இரண்டு கட்டளைகளாகும்.....ஏன் ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் ? ஏன் சத்விசாரம் செய்ய வேண்டும்.

ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ?

ஜீவன் என்னும் உயிரானது தன்னுடைய அறியாமையாலும், அஜாக்கரதையாலும் மற்ற ஜீவன் களுக்கு துன்பம் கொடுத்து இன்பம் அனுபவித்து உள்ளது, அவற்றை நிவர்த்தி செய்து ஈடு கட்ட வேண்டும் .என்பதற்காகவே ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் ..

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் ;---

காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டுக்
கரும்பை விட்டுக் கடுகு விரைத்தக் களிக்கின்ற உலகீர்
கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே
குடி இருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே
பாடு பட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்
பட்டது எலாம் போதும் இது பரமர் வருதருணம்
ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்
எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தனனே !

அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழும் வாழ்க்கை பெறுவதற்காகவே இந்த மனித தேகம் கொடுக்கப் பட்டு உள்ளது ...எதைப்போல என்றால் ,கற்கள்,காடு ,மேடு ,பள்ளம்,நிறைந்த இடம். புன்செய் பயிர் வைக்க கூட தகுதி இல்லாத  இடத்தை  திருத்தி சமப்படுத்தி ,அங்கே தண்ணீர் உண்டாக்கி நன்செய் பயிர் விளைவிக்கும் அழகான நன்செய் பயிர் செய்யும் நிலமாக மாற்றி ,நெல் ,கரும்பு,வாழை,போன்ற பயன் தரும் பயிர்களை வைக்காமல்,கடுகு போன்ற விஷப் பயிரை வைத்துள்ளீர்களே இது என்ன நியாயம்,,அறிவு இருந்தும் அறிவு இல்லாமல் செய்யும் செய்கைபோல் உள்ளது உங்கள் அறிவு என்கின்றார் வள்ளலார் /..

அதேபோல் ஜீவன் என்னும் ஜீவ அறிவானத்து  ,ஆன்ம அறிவைத்  தொடர்பு கொள்ளாமல்,ஜட அறிவான  கரண அறிவையும்,இந்திரிய அறிவையும்,தொடர்பு கொண்டு கருணை இல்லாமல்,உலக உயிர்களுக்கும் தன்னுடைய உயிருக்கும்  தீங்கு செய்து அபாயங்களை உண்டாக்கிக் கொண்டு உள்ளது ..அதனால் அந்த அபாயங்களை நீக்கிக் கொள்ளவும்,அதில் இருந்து விடுபடவும்,அவற்றை ஈடு கட்டவும் தான் ஜீவ காருண்யம் செய்ய வேண்டி  உள்ளது.அதாவது .வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்பதே ஜீவ காருண்யம் ,அதுவே உயிர் இரக்கம் என்பதாகும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது ;--

பசி,கொலை,தாகம்,பிணி,,பயம்,இச்சை,எளிமை,என்பவைகளால் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுகின்றது .அந்த அபாயங்கள் நேரிடாமல் கரணம் இந்திரிய சகாயங்களைப் பெற்று  தம்முடைய அறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க சுதந்திரம் சீவர்களுக்கு அருளால் கொடுக்கப் பட்டது என்றும்,

அந்த சுதந்தரத்தைக் கொண்டு சீவர்கள் எல்லாம் தேகங்களில் இருந்து அபாயங்களை நீக்கி ஆன்ம லாபத்தைப் பெறுவதற்கு  முயற்சி செய்யக் கடவார்கள் என்றும் வள்ளலார் ஜீவ காருண்யத்தின் வல்லபத்தை ,அதன் விளக்கத்தைத் தெரிவித்து உள்ளார் .எந்த சுதந்தரத்தால் தவறு செய்தீர்களோ அந்த சுதந்தரத்தாலே நிவர்த்தி செய்ய வேண்டும் அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்.எனவே  இடைவிடாது ஜீவ காருண்யமே  விரதமாக கொண்டு உயிர்களுக்கு உபகாரம் செய்து வந்தால் உண்மையான ஆன்ம அறிவு விளக்கம் தோன்றும்...

திறவு கோல் !

ஆன்ம அறிவு விளக்கம் மறைந்து உள்ளது,அந்த.மறைப்பை நீக்கும், திறக்கும் திறவு கோல் தான்  ஜீவ காருண்யம் என்னும் சாவி என்பதாகும்.இதுவே மரணத்தை வெல்ல முடியுமா என்றால் முடியாது...கதவைத் திறக்க மட்டுமே முடியும்.உள்ளே செல்வதற்கு முடியாது..ஜீவ காருண்யத்தால் ஜீவன் என்னும் உயிரை உலக வாழ்க்கையில் இருந்து விடுவித்து .. ஆன்மா பக்கம் செல்ல வைக்கும் செயலாகும்...உயிர் ஆன்மாவை நோக்கி சென்றால் கரணங்களும்,இந்திரியங்களும்,தானே ஆன்மாவை நோக்கி சென்று விடும்...

அதற்கு மேல்தான் சத் விசாரம் என்பதாகும்...சத் விசாரத்தினால்தான் அருளைப் பெற முடியும்.

சத் விசாரம் என்றால் என்ன ?

தொடரும் ;-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக