அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 10 அக்டோபர், 2016

மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வது எப்படி ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வது எப்படி ? . . .

ஒரு சிறு விளக்கம்  . . .

நாம் வாழும் இவ்வுலகம்  பஞ்ச பூதங்களால் இயங்கிக் கொண்டு உள்ளது . நம்முடைய உடம்பும் பஞ்ச பூதங்களால் சேர்ந்து பின்னப்பட்டது

.உடம்பை இயக்குவது உயிர் . . உயிரை இயக்குவது உள் ஒளி என்னும் ஆன்மா ...பஞ்ச பூதங்களான உடம்பு . பஞ்ச பூதங்களை அனுபவித்துக் கொண்டு உள்ளது .   இவைதான் உடம்பை விட்டு உயிர் பிரிவதற்கு காரண காரியமாக உள்ளது ...மரணம் வருவதற்கு காரணமாக உள்ளது .......,பஞ்ச பூதங்களான மண்..நீர் . . அக்கினி . . காற்று . . . அகாயம் போன்றவைகளை அனுபவிக்காமல் அருளை மட்டுமே அனுபவிக்க வேண்டும் .....

அருளைப் பெற உள் ஒளியாகிய ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் ....அப்படி தொடர்பு கொண்டால் மட்டுமே ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் ..அருள்  சுரந்தால் பசி என்னும் வேதனை நின்று விடும் .பசி நின்று விட்டாலே பஞ்ச பூத உணவு அவசியமில்லை .

பஞ்ச பூத இயக்கம் நின்று, அருள் இயக்கம் ஆரம்பித்து விடும் . அருள் இயக்கம் உடம்பு முழுவதும்  இயங்க இயங்க ,  பஞ்ச பூத உடம்பு மாற்று குறையாத  பொன் உடம்பாக மாறிவிடும் .
பூரண அருள் பெறுகின்ற போது பிடிபடாத ஆகாயம் போல் விளங்குகின்ற, சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் , கண்களுக்குத்  தெரியாத  ஒளி தேகமாக மாறி விடும் . . ஜீவ தேகம் என்பது மறைந்து ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்  கிடைத்து விடும் .

அதன்பின் கடவுளின் நிலை அறிந்து அம்மயமாக மாறி விடும் ... ஆதலால் தான் வள்ளலார் . . மனதை இடைவிடாது சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் . . .

நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் . .

வழியும் காட்டி வாழந்தும் காட்டி உள்ளார் நமது அருட் தந்தை வள்ளலார் . . .

ஞான சரியை 28, பாடல்களில் மரணத்தை வெல்லும் வழியைத் தெளிவாக சொல்லி உள்ளார் .படித்து அதில் உள்ளபடி வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வெல்லாம் . . . . .

 அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக